செயதேவி

கம்போடியாவின் பெண்ணரசி

செயதேவி (ஆங்கிலம்: Jayadevi); (ஆட்சிக்காலம்: பொ.ச. 681 முதல் 713 வரை) கெமர் பேரரசின் முன்னோடியான சென்லா இராச்சியத்தின் (Kingdom of Chenla) அரசியாக இருந்தவர். இவர் முதலாம் செயவர்மன் (Jayavarman I) என்பவரின் மகளாவார்.

செயதேவி
சென்லாவின் அரசி
ஆட்சிக்காலம்681 – 713
முன்னையவர்முதலாம் செயவர்மன்
பின்னையவர்சம்புவர்மன்

இவருக்கு இளவரசி சோபா செயா (Sobhajaya) என்ற ஒரு சகோதரியும் இருந்தார். செயதேவி ஓர் இந்தியரான சிவாயிட் பிராகிம் சக்ரசுவாமின் (Indian Sivait Brahim Sakrasvamin) என்பவரை மணந்தார். 681-இல் இவரின் தந்தையார் முதலாம் செயவர்மன் இறந்த பிறகு சென்லா இராச்சியத்தின் அரசியாகப் பதவியேற்றார். ராணி குலபிரபாவதிக்கு (Kulaprabhavati) பிறகு முதல் பெண் ஆட்சியாளர் என அறியப்படுகிறார்.

வரலாறு

தொகு

பாரம்பரியமாக, செயதேவியின் வாரிசு உரிமைக்கு போட்டி நிலவியதாக அறியப் படுகிறது. அந்த வாரிசு உரிமை சென்லாவில் ஒரு கொந்தளிப்பை உருவாக்கி இறுதியில் கம்போடியாவின் பிளவுக்கு வழிவகுத்தது. 707-இல், சென்லா இராச்சியம் நில சென்லா, நீர் சென்லா என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.[1]

நில சென்லா, நீர் சென்லா பற்றி குறைந்த அளவிலான தகவல்கள் மட்டுமே உள்ளன. இறுதியில் அந்த இரண்டு சென்லாக்களும் மேலும் பிரிக்கப்பட்டன.[2]

அங்கோர் கல்வெட்டு

தொகு

713-ஆம் ஆண்டில், செயதேவி அங்கோரில் ஒரு கல்வெட்டை விட்டுச் சென்றார். அதில் தன் ஆட்சியின் மோசமான காலங்களைப் பற்றி விவரித்து வேதனைப் படுகிறார். மேலும் தன் சகோதரியால் நிறுவப்பட்ட சிவ திரிபுரங்கட்டாவின் சரணாலயத்திற்கு தான் அளித்த நன்கொடையைக் குறிப்பிடுகிறார்.

713-ஆம் ஆண்டுக்குப் பிறகு செயதேவி எவ்வளவு காலம் ஆட்சி செய்தார் என்பது தெரியவில்லை. 716-இல், புஷ்கரன் என்ற அரசனைப்பற்றி ஒரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புஷ்கரன் ஒரு பெண் அரசியைத் திருமணம் செய்து தன் பதவியைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும் புஷ்கரன் தன் மகனான இரண்டாம் சம்புவர்மனை ஈசானபுர மன்னருக்கு திருமணம் செய்து வைத்து தன் பதவியைப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு கொள்ளையராகவும் இருக்கலாம். இவை அனைத்தும் உறுதிபடுத்த இயலாத தகவல்கள்.

இராணி இந்திராணி

தொகு

ஒரு மாற்று விளக்கம் உள்ளது. புஷ்கர மன்னன் உண்மையில் செய்தேவியின் சொந்த மகனாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. மேலும், இவளுடைய போட்டியாளரை விட கூடுதல் வாரிசு உரிமை பெற்றவனாக இருந்தான். [3]

மேலும், 707-இல் சென்லா இரண்டு இராச்சியங்களைக் கொண்டிருந்ததாக சீன ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. சென்லா இந்த கட்டத்திற்கு முன்பே பல சிறிய அரசாட்சிகளை கொண்டிருந்தது என்றும்; இது ஒரு பிளவைக் குறிக்கிறது என்ற விளக்கம் தவறானது என்றும் தோன்றுகிறது.

மன்னன் புஷ்கரன் சம்புபுரத்தின் இந்திராணியை மணந்து அவருக்குத் துணையாக இருந்து சென்லாவை ஆட்சி செய்தான் என்று சொல்லப்படுகிறது.

சான்றுகள்

தொகு
  1. Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
  2. Higham, Charles. Early Mainland Southeast Asia. River Books Co., Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443.
  3. Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008

மேலும் காண்க

தொகு
  • Coedes, G. (1962). "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd.
  • George Cœdès: The Indianized States of South-East Asia
"https://ta.wikipedia.org/w/index.php?title=செயதேவி&oldid=3683321" இலிருந்து மீள்விக்கப்பட்டது