முதலாம் செயவர்மன்
முதலாம் செயவர்மன் (ஆங்கிலம்: Jayavarman I; கெமர்: ជ័យវរ្ម័នទី១; தாய்: ชัยวรมันที่ 1; சீனம்: 阇耶跋摩一世) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) அரசர் ஆவார்.
முதலாம் செயவர்மன் Jayavarman I ជ័យវរ្ម័នទី១ | |
---|---|
கெமர் பேரரசின் அரசர் | |
ஆட்சிக்காலம் | கி.பி. 657 – கி.பி. 681 |
முன்னையவர் | இரண்டாம் பவவர்மன் |
பின்னையவர் | இராணி செயதேவி |
இறப்பு | கி.பி. 681 |
குழந்தைகளின் பெயர்கள் | இராணி செயதேவி |
மரபு | சென்லா |
அரசமரபு | வர்மன் |
மதம் | இந்து சமயம் |
இவர் வெற்றியின் பாதுகாவலர் (Protege of Victory) என்றும் அழைக்கப்பட்டார். மற்றும் ஐக்கிய சென்லாவின் (United Chenla) கடைசி ஆட்சியாளராகவும்; கெமர் பேரரசின் முன்னோடி ஆட்சியாளராகவும் கருதப்படுகிறார்.
இருப்பினும், இவருக்குப் பின்னர் வந்த இரண்டாம் செயவர்மன் (கி.பி. 770 – கி.பி. 850) (செயவர்மன் II) Jayavarman II) என்பவர்தான் கெமர் பேரரசை உருவாக்கியவராகும்.
வரலாறு
தொகுமுதலாம் செயவர்மன் கி.பி. 657 முதல் கி.பி. 681 வரை சென்லா இராச்சியத்தை ஆட்சி செய்தார். முன்பு பூனான் இராச்சியத்தால் கட்டுப்படுத்தப்பட்ட சென்லா நிலப் பகுதிகள்; இவரின் ஆட்சியின் போதும்; மற்றும் இவரின் முன்னோடிகளான இரண்டாம் பவவர்மன் (Bhavavarman II) மற்றும் சந்திரவர்மன் (Candravarman) ஆட்சியின் போதும்; இவர்களின் அதிகாரத்தின் கீழ் வந்தன.
இருப்பினும், முதலாம் செயவர்மன் ஆண் வாரிசுகளை விட்டுச் செல்லவில்லை. இதுவே கம்போடியா பிரிவதற்கு வழிவகுத்தது.[1][2]
கல்வெட்டுகள்
தொகுமுதலாம் ஜெயவர்மன் காலத்தின் போது பல கல்வெட்டுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அந்தக் கல்வெட்டுகள்:
- துவால் கோக் பிரா (Tuol Kok Prah)
- வாட் பிரே வால் (Wat Prei Val)
- பிரா குகா லுவான் (Prah Kuha Luon)
- வாட் கிடேய் ஆங் (Wat Kdei Ang)
- வாட் பாரே (Wat Baray)
- துவோல் நாக் தா பாக் கா (Tuol Nak Ta Bak Ka)
புராந்திரபுரம்
தொகுமுதலாம் ஜெயவர்மனின் அரண்மனை புராந்திரபுரத்தில் (Purandarapura) இருந்தது. இவர் முதலாம் ஈசானவர்மன் (Isanavarman I) எனும் சென்லா அரசரின் கொள்ளுப் பேரன் ஆவார்.
- இரண்டாம் செயவர்மன் - 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கெமர் பேரரசு (Khmer Empire); அங்கோர் (Angkor) இராச்சியத்தின் முதல் அரசராக ஆட்சி செய்தவர்.
மேலும் காண்க
தொகு- இரண்டாம் செயவர்மன் - 9-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கெமர் பேரரசு (Khmer Empire); அங்கோர் (Angkor) இராச்சியத்தின் முதல் அரசராக ஆட்சி செய்தவர்.
சான்றுகள்
தொகு- ↑ Coedès, George (1968). Walter F. Vella (ed.). The Indianized States of Southeast Asia. trans.Susan Brown Cowing. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1.
- ↑ Higham, Charles. Early Mainland Southeast Asia. River Books Co., Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9786167339443.
மேலும் படிக்க
தொகு- Coedes, G. (1962). "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd.