செரிலிங்கம்பள்ளி

இந்தியாவின் தெலுங்கானாவின் ரங்கா ரெட்டியில் புறநகர்

செரிலிங்கம்பள்ளி (Serilingampally) இலிங்கம்பள்ளி எனவும் அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான தெலங்காணாவின் ஐதராபாத்து நகரத்தின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய புறநகர்ப் பகுதி ஆகும். இது ரங்காரெட்டி மாவட்டத்தில் செரிலிங்கம்பள்ளி வட்டத்தின் தலைமையகம் ஆகும்.[1][2] இதை பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி நிர்வகிக்கிறது. ஐதராபாத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆலோசனை நகரம் (ஹைடெக் சிட்டி), கச்சிபௌலி, நானகிராம்குடா, மணிகொண்டா, கோந்தாபூர் ஆகியவற்றுடன் அதன் அருகாமையில் இருப்பதால், அதிக எண்ணிக்கையிலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இங்கு அமைந்துள்ளன.[3] ஐதராபாத்து பல்கலைக்கழகமும் இங்கு அமைந்துள்ளது.

செரிலிங்கம்பள்ளி
மோர் வணிக வளாகம்
மோர் வணிக வளாகம்
அடைபெயர்(கள்): இலிங்கம்பள்ளி
செரிலிங்கம்பள்ளி is located in தெலங்காணா
செரிலிங்கம்பள்ளி
செரிலிங்கம்பள்ளி
தெலங்காணாவில் செரிலிங்கம்பள்ளியின் அமைவிடம்
செரிலிங்கம்பள்ளி is located in இந்தியா
செரிலிங்கம்பள்ளி
செரிலிங்கம்பள்ளி
செரிலிங்கம்பள்ளி (இந்தியா)
ஆள்கூறுகள்: 17°28′48″N 78°19′48″E / 17.48000°N 78.33000°E / 17.48000; 78.33000
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ரங்காரெட்டி
நகரம்ஐதராபாத்து
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,53,364
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
500019
வாகனப் பதிவுடிஎஸ்-07
பாலின விகிதம்107% /

புள்ளிவிவரங்கள்

தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, செரிலிங்கம்பள்ளியில் 32,642 வீடுகளைக் கொண்ட 153,364 மக்கள் தொகை இருந்தது. இந்த மக்கள் தொகையில் 79,225 ஆண்களும் 74,139 பெண்களும் உள்ளனர்.[4] 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 42% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விடக் குறைவு: ஆண் கல்வியறிவு 42%, பெண் கல்வியறிவு 41% ஆகும். இதன் மக்கள் தொகையில் 11% 6 வயதுக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர் .[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rangareddy district" (PDF). New Districts Formation Portal. Government of Telangana. Archived from the original (PDF) on 13 October 2016. பார்க்கப்பட்ட நாள் 26 March 2017.
  2. "Three SEZS Approvals Union Commerce". articles.timesofindia.indiatimes.com. 2006-10-11 இம் மூலத்தில் இருந்து 2012-05-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120515221155/http://articles.timesofindia.indiatimes.com/2006-10-11/hyderabad/27825207_1_three-sezs-approvals-union-commerce. 
  3. "Andhra parties eye cosmopolitan Serilingampally segment". timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/home/lok-sabha-elections-2014/news/Andhra-parties-eye-cosmopolitan-Serilingampally-segment/articleshow/33043965.cms. 
  4. The Registrar General & Census Commissioner (2011). "Sub-district details". censusindia.gov.in. New Delhi, India: Government of India. பார்க்கப்பட்ட நாள் 15 July 2014.
  5. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செரிலிங்கம்பள்ளி&oldid=3246208" இலிருந்து மீள்விக்கப்பட்டது