செருமேனியம் செலீனைடு

வேதிச் சேர்மம்

செருமேனியம் செலீனைடு (Germanium selenide) என்பது GeSe என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். செஞ்சாய்சதுர படிகச் சமச்சீரில் கருப்பு நிறங்கொண்ட படிக தூளாக இச்சேர்மம் உள்ளது (உருக்குலைந்த NaCl-வகை); ~650 ° செல்சியசு வெப்ப நிலையில் இது கன சதுர NaCl கட்டமைப்பாக மாறுகிறது.[2] செருமேனியம் செலீனைடானது முப்பரிமாண வேதிச்செயல்திறன் மிக்க செருமேனியம் 4s எலக்ட்ரான் இணைகளை கொண்டிருக்கிறது. இவையே இச்சேர்மத்தின் உருக்குலைந்த அமைப்புக்கு காரணமாகின்றன. வெற்றிட அளவைப் பொறுத்தமட்டில் இணைதிறக் கற்றையின் உயர்ந்த நிலைக்கும் இவையே பொறுப்பாகும்.[3]

செருமேனியம் செலீனைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
செருமேனியம் செலீனைடு
வேறு பெயர்கள்
செருமேனியம்(II) செலீனைடு
இனங்காட்டிகள்
12065-10-0 Y
பப்கெம் 12049114
பண்புகள்
GeSe
வாய்ப்பாட்டு எடை 151.57 கி/மோல்
தோற்றம் black
அடர்த்தி 5.56 கி/செ.மீ3
உருகுநிலை 667 °C (1,233 °F; 940 K) (சிதையும்)
Band gap 1.33 எலக்ட்ரான் வோல்ட்டு (direct) [1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 2.5
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரம்
புறவெளித் தொகுதி Pnma
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் செருமேனியம் ஓராக்சைடு
செருமேனியம் மோனோசல்பைடு
செருமேனியம் தெலூரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் வெள்ளீய செலீனைடு
காரீய செலீனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

GeSe படிகங்களை வளர்க்க GeSe தூள் ஒரு மூட்டப்பட்ட கண்ணாடிக்குப்பியின் சூடான முனையில் ஆவியாகி குளிர்ந்த முனையில் ஒடுக்க அனுமதிக்கப்படுகிறது. வாயு ஊடகத்தில் வெப்பச்சலன இயக்கத்தால் வழக்கமான படிகங்கள் சிறியவையாகவும் ஒழுங்கற்ற வளர்ச்சியின் அறிகுறிகளோடும் உள்ளன. இருப்பினும், சுழிய ஈர்ப்பு விசையின் கீழ் வளர்க்கப்படும் GeSe ஆனது, விண்வெளி ஆய்வகத்தில் உள்ள வெப்பச்சலனத்தின் கீழ் பூமியில் வளரும் படிகங்களை விட ~10 மடங்கு பெரியதாகவும் பார்வைக் குறைபாடுகள் இல்லாதவையாகவும் உள்ளன.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. Philip A. E. Murgatroyd, Matthew J. Smiles, Christopher N. Savory, Thomas P. Shalvey, Jack E. N. Swallow, Nicole Fleck, Craig M. Robertson, Frank Jäckel, Jonathan Alaria, Jonathan D. Major, David O. Scanlon, and Tim D. Veal (2020). "GeSe: Optical Spectroscopy and Theoretical Study of a van der Waals Solar Absorber". Chemistry of Materials. doi:10.1021/acs.chemmater.0c00453. 
  2. Wiedemeier H., Siemers P.A. (1975). "The Thermal Expansion and High Temperature Transformation of GeSe". Zeitschrift für anorganische und allgemeine Chemie 411: 90–96. doi:10.1002/zaac.19754110110. 
  3. M. J. Smiles, J. M. Skelton, H. Shiel, L. A. H. Jones, J. E. N. Swallow, H. J. Edwards, T. J. Featherstone, P. A. E. Murgatroyd, P. K. Thakur, Tien-Lin Lee, V. R. Dhanak, and T. D. Veal (2021). "Ge 4s2 Lone Pairs and Band Alignments in GeS and GeSe for photovoltaics". J. Mater. Chem. A. doi:10.1039/D1TA05955F. 
  4. "SP-400 Skylab, Our First Space Station". NASA. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
  5. H. Wiedemeier (1975). "Crystal growth and transport rates of GeSe and GeTe in micro-gravity environment". Journal of Crystal Growth 31: 36. doi:10.1016/0022-0248(75)90107-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமேனியம்_செலீனைடு&oldid=3391116" இலிருந்து மீள்விக்கப்பட்டது