செருமேனேட்டு

வேதியியலில் செருமேனேட்டு (germinate) என்பது செருமேனியத்தின் ஆக்சி எதிர்மின் அயனியைக் கொண்டிருக்கும் ஒரு சேர்மம்|சேர்மத்தைக்]] குறிக்கும். இத்தகையச் சேர்மங்களுக்குப் பெயரிடும் போது செருமனேட்டை பின்னொட்டாகச் சேர்த்து பெயரிடுவார்கள். அதாவது மையத்தில் செருமேனியம் அணுவைப் பெற்றுள்ள ஒரு பல்லணு எதிர்மின் அயனியாக அச்சேர்மம் கருதப்படும்[1]. உதாரணம்:பொட்டாசியம் அறுபுளோரோ செருமனேட்டு, K2GeF6.[2]

ஆர்த்தோ செருமேனேட்டு எதிர்மின் அயனி

செருமனேட்டு ஆக்சி சேர்மங்கள் தொகு

சிலிக்கனைப் போலவே செருமேனியமும் நான்முக {GeO4}[2] அலகுகள் கொண்ட பல சேர்மங்களை உருவாக்குகிறது. ஆனாலும் 5 [3] மற்றும் 6 [2] ஒருங்கிணப்பு முறைமைகளையும் வெளிப்படுத்துகிறது. சிலிக்கேட்டுகள் மற்றும் அலுமினோ சிலிக்கேட்டுகள்[4] வரிசைகளை ஒத்த எல்லா வகையான வரிசைச் சேர்மங்களையும் உருவாக்கவும் இதனால் முடிகிறது. உதாரணமாக Mg2GeO4 ஒலிவைன் மற்றும் சிபினல் வடிவச் சேர்மங்கள் CaGeO3 (பெரோவ்சிகைட்டு அமைப்பு), Be2GeO4 (பீனாகைட்டு அமைப்பு) ஆகியவை சிலிக்கேட்டுகளின் அமைப்புகளுடன் ஒன்றுபடுகின்றன[4][5]. BaGe4O9 4 மற்றும் 6 ஒருங்கிணைப்பு முறைமை செருமேனியத்தைக் கொண்ட சிக்கல் அமைப்பைப் பெற்றுள்ளது[5]. புவி அறிவியலில் செருமனேட்டுகள் முக்கியமான சேர்மங்களாகக் கருதப்படுகின்றன. சிலிக்கேட்டுகளின் அமைப்புகளை ஒத்த அமைப்புகளை இவை பெற்று இருப்பதால் புவியின் மூடகத்தில் கிடைக்கக் கூடிய சிலிக்கேட்டு கனிமங்களின் பண்புகள் பற்றிய ஆய்வுக்கு ஒத்தவரிசைச் சேர்மங்களாக இவற்றைப் பயன்படுத்த முடிகிறது[6]. உதாரணமாக MnGeO3 இது பைரோக்சின் வகை அமைப்பைக் கொண்டு MgSiO3 கனிமத்திற்கு இணையாக உள்ளது. புவியின் மூடகத்தில் மக்னீசியம் சிலிக்கேட்டு ஒரு முக்கியமான கனிமம் என்பது குறிப்பிடத் தக்கது[7][8][9]

நீர்க்கரைசல்களில் செருமேனேட்டுகள் தொகு

கார உலோக ஆர்த்தோசெருமேனேட்டுகள், M4GeO4 வெவ்வேறான GeO44− அயனிகளைக் கொண்டு அமிலக் கரைசல்களாக உருவாகின்றன. இவற்றில் GeO(OH)3−, GeO2(OH)22− மற்றும் [(Ge(OH)4)8(OH)3]3−. அயனிகள் காணப்படுகின்றன[2]. நடுவுநிலை செருமேனியம் ஈராக்சைடு கரைசல்கள் Ge(OH)4 அயனிகளைக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றில் GeO(OH)3−, GeO2(OH)22− முதலான உயர் pH மதிப்பு கொண்ட செருமேனேட்டு அயனிகள் காணப்படுகின்றன[10].

செருமேனேட்டு சீயோலைட்டுகள் தொகு

1990 களில்[11][12] நுண்துளை செருமேனேட்டுகள் முதன் முதலில் தயாரிக்கப்பட்டன. நீர்வெப்பத் தொகுப்பு முறை ஒரு பொதுவான தயாரிப்பு முறையாகப் பின்பற்றப்பட்டது. இம்முறையில் கரிம அமீன்கள். வார்ப்புருக்களாகப் (அமைப்பைக் கண்டறியும் முகவர்கள்) பயன்படுத்தப்பட்டன[13]. சேர்மத்தில் மிகையான ஆக்சைடு அயனிகள் இருப்பதால் இக்கட்டமைப்புகளின் எதிர்மின் சுமை, செருமேனியம் 5 மற்றும் 6 என்ற உயர் அணைவு எண்களில் காணப்பட வழிவகுக்கிறது. எதிர்மின் சுமையானது அமீன்களின் நேர்மின் சுமையால் சமப்படுத்தப்படுகின்றன.

செருமேனியத்தின் 4,5 அல்லது 6 ஒருங்கிணப்பு முறைமைகள், {SiO4} நான்முக அலகில் உள்ள Si-O பிணைப்புடன் ஒப்பிடுகையில் {GeO4} நான்முக அலகில் இருப்பது போன்ற மிகநீண்ட Ge-O பிணைப்பு மற்றும் நான்முகத்தின் மூலைகளைப் பகிர்ந்து கொள்ளும் குறுகிய Ge-O-Ge பிணைப்புக் கோணம் ஆகியனவற்றுடன் கூடுதலாக வழக்கத்திற்கு மாறான கட்டமைப்புகளையும் செருமேனேட்டு அனுமதிக்கின்றது[14] A zeolite reported in 2005[15]. 2005 இல் 30 உறுப்பு வளையத் தடங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து காணப்படும் ஒரு சியோலைட்டு 18.6 X 26.2 Å என்ற பெரிய நுண்துளை அளவுகளுடன் கண்டறியப்பட்டது. இயற்கையாகத் தோன்றும் பவுசாசைட்டு கனிமத்தில் 12 உறுப்பு வளையத் தடங்களே காணப்படுகின்றன[16]). சிலிக்கன் மற்றும் செருமேனியம் தனிமங்கள் இணைந்த சிலிக்கோசெருமேனேட்டு, அலுமினியம் மற்றும் செருமேனியம் தனிமங்கள் இணைந்த அலுமினோசெருமேனேட்டு, சிர்க்கோனியம் மற்றும் செருமேனியம் தனிமங்கள் இணைந்த சிர்க்கோனோசெருமேனேட்டு கட்டமைப்பு சியோலைட்டுகளும் அறியப்படுகின்றன[13][17].

மேற்கோள்கள் தொகு

  1. Nomenclature of Inorganic Chemistry IUPAC Recommendations 2005 - Full text (PDF)
  2. 2.0 2.1 2.2 2.3 Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0123526515
  3. Nguyen, Quang Bac; Lii, Kwang-Hwa (2011). "Cs4UGe8O20: A Tetravalent Uranium Germanate Containing Four- and Five-Coordinate Germanium". Inorganic Chemistry 50 (20): 9936–9938. doi:10.1021/ic201789f. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. 
  4. 4.0 4.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0080379419. 
  5. 5.0 5.1 Encyclopedia of alkaline earth compounds R.C Ropp, Elsevier 2013 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-59550-8
  6. Ringwood, A.E. (1970). "Phase transformations and the constitution of the mantle". Physics of the Earth and Planetary Interiors 3: 109–155. doi:10.1016/0031-9201(70)90047-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:00319201. 
  7. Ringwood, A. E.; Seabrook, Merren (1962). "Some High-pressure Transformations in Pyroxenes". Nature 196 (4857): 883–884. doi:10.1038/196883a0. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. 
  8. Hirose, Kei; Nagaya, Yukio; Merkel, Sébastien; Ohishi, Yasuo (2010). "Deformation of MnGeO3post-perovskite at lower mantle pressure and temperature". Geophysical Research Letters 37 (20). doi:10.1029/2010GL044977. பன்னாட்டுத் தர தொடர் எண்:0094-8276. 
  9. Matsumura, Hisashi; Mamiya, Mikito; Takei, Humihiko (2000). "Growth of pyroxene-type MnGeO3 and (Mn,Mg)GeO3 crystals by the floating-zone method". Journal of Crystal Growth 210 (4): 783–787. doi:10.1016/S0022-0248(99)00850-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:00220248. https://archive.org/details/sim_journal-of-crystal-growth_2000-03_210_4/page/783. 
  10. "Germanium: Inorganic Chemistry" F Glockling Encyclopedia of Inorganic Chemistry Editor R Bruce King (1994) John Wiley and Sons பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0
  11. Cheng, Jun; Xu, Ruren; Yang, Guangdi (1991). "Synthesis, structure and characterization of a novel germanium dioxide with occluded tetramethylammonium hydroxide". Journal of the Chemical Society, Dalton Transactions (6): 1537. doi:10.1039/dt9910001537. பன்னாட்டுத் தர தொடர் எண்:0300-9246. 
  12. Li, Hailian; Yaghi, O. M. (1998). "Transformation of Germanium Dioxide to Microporous Germanate 4-Connected Nets". Journal of the American Chemical Society 120 (40): 10569–10570. doi:10.1021/ja982384n. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. 
  13. 13.0 13.1 Zeolites and Related Materials: Trends Targets and Challenges(SET), 1st Edition, 4th International FEZA Conference, 2008, Paris, France; Eds. Gedeon, Massiani,Babonneau; Elsevier Science; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780444532961
  14. Introduction to Zeolite Molecular Sieves, Jiri Cejka, Herman van Bekkum, A. Corma, F. Schueth, Elsevier, 2007
  15. Zou, Xiaodong; Conradsson, Tony; Klingstedt, Miia; Dadachov, Mike S.; O'Keeffe, Michael (2005). "A mesoporous germanium oxide with crystalline pore walls and its chiral derivative". Nature 437 (7059): 716–719. doi:10.1038/nature04097. பன்னாட்டுத் தர தொடர் எண்:0028-0836. 
  16. Handbook Of Molecular Sieves: Structures, Rosemarie Szostak, 1992, Van Nostrand Reinhold, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0442318995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0442318994
  17. Plévert, Jacques; Sanchez-Smith, Rebeca; Gentz, Travis M.; Li, Hailian; Groy, Thomas L.; Yaghi, Omar M.; O'Keeffe, Michael (2003). "Synthesis and Characterization of Zirconogermanates". Inorganic Chemistry 42 (19): 5954–5959. doi:10.1021/ic034298g. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. 

இவற்றையும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செருமேனேட்டு&oldid=3521585" இலிருந்து மீள்விக்கப்பட்டது