செர்பனியனி பவளத்திட்டு
செர்பனியனி பவளத்திட்டு (Cherbaniani Reef) என்பது ஓர் பவளத் தீவு ஆகும்.[1] இது பெலிபனி பவளத்திட்டு எனவும் அறியப்படுகின்றது. இது இந்தியாவின் இலட்சத்தீவுகளின் ஒன்றியப் பகுதியான அமினிதிவி உப தீவுக்கூட்டத்திற்குச் சொந்தமான பிரதேசம் ஆகும்.[2]
செர்பனியனி | |
---|---|
நாடு | இந்தியா |
State | இலட்சத்தீவுகள் |
உப தீவு | லக்கதிவ் தீவுகள் |
பரப்பளவு | |
• மொத்தம் | 170 km2 (70 sq mi) |
Languages | |
• Official | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
புவியியல்
தொகுஇப்பவளத்திட்டானது பிரமகூர் பவளத்திட்டில் இருந்து 33 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ளது. இதன் மேற்பரப்பு நீள்வட்ட வடிவமானதாகும். இப்பவளத்திட்டினைப் பற்றி 1876 ஆம் ஆண்டில் பறவையியலாளர் ஆலன் ஆக்டவியன் ஹியூம் விபரித்துள்ளார். இதன் மொத்தக் கடற்காயல் பரப்பளவு 170 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். செட்லட், பிட்ரா ஆகிய தீவுகளில் வசிப்போர் இங்கு வந்து குவானோ எனும் கணிய மணலினைத் தமது தோட்டங்களுக்காக எடுத்துச் செல்வதுண்டு.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Hydrographic Description (Indian Ocean Pilot)
- Lagoon sizes
- Cherbaniani Reef - Geographical information
- Seamount Catalog - Cherbaniani Reef Seamount
- List of Atolls பரணிடப்பட்டது 2012-08-13 at the வந்தவழி இயந்திரம்
- An ornithological expedition to the Lakshadweep archipelago பரணிடப்பட்டது 2013-06-17 at the வந்தவழி இயந்திரம்
- Sources towards a history of the Laccadive Islands