செலீனியம் இருகுளோரைடு
வேதிச் சேர்மம்
செலீனியம் இருகுளோரைடு (Selenium dichloride) என்பது SeCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஈதர்களில் கரைக்கும்பொழுது இது செம்-பழுப்பு கரைசல்களை உருவாக்குகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
14457-70-6 | |
ChemSpider | 123257 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 139762 |
| |
UNII | PDE7WQS0XY |
பண்புகள் | |
Cl2Se | |
வாய்ப்பாட்டு எடை | 149.87 g·mol−1 |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செலீனியம் டைபுரோமைடு, SeBr2 |
ஏனைய நேர் மின்அயனிகள் | கந்தக இருகுளோரைடு, SCl2 தெலூரியம் இருகுளோரைடு, TeCl2 பொலோனியம் இருகுளோரைடு, PoCl2 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுசாம்பல் நிற செலீனியத்துடன் சல்பியூரைல் குளோரைடு சேர்மத்தைச் சேர்த்து சூடுபடுத்தி செலீனியம் இருகுளோரைடு தயாரிக்கப்படுகிறது.
பண்புகள்
தொகுதயோயீத்தர்கள் மற்றும் தயோயூரியாக்களுடன் செலீனியம் இருகுளோரைடு சேர்ந்து உருவாகும் கூட்டுவிளைபொருள்கள் நன்கு வகைப்படுத்தப்பட்டுள்ளன. தொடர்புடைய தெலூரியம் இருகுளோரைடின் அணைவுச் சேர்மங்களும் அறியப்படுகின்றன.
செலினியம் இருகுளோரைடின் கரைசல்கள் அறை வெப்பநிலையில் நிலையற்றவை. அறை வெப்பநிலையில் பல நிமிடங்களுக்குப் பிறகு செலீனியம் மோனோகுளோரைடை இவை உருவாக்குகின்றன:[2]
- 3 SeCl2 → Se2Cl2 + SeCl4
மேற்கோள்கள்
தொகு- ↑ Jolleys, A.; Levason, W.; Reid, G. (2013). "Thioether Coordination to Divalent Selenium Halide Acceptors – Synthesis, Properties and Structures". Dalton Transactions 42 (8): 2963–2972. doi:10.1039/C2DT32665E. பப்மெட்:23250231.
- ↑ Maaninen, Arto; Chivers, Tristram; Parvez, Masood; Pietikäinen, Jarkko; Laitinen, Risto S. (1999). "Syntheses of THF Solutions of SeX2 (X = Cl, Br) and a New Route to Selenium Sulfides SenS8−n (n = 1-5): X-Ray Crystal Structures of SeCl2(tht)2 and SeCl2·tmtu". Inorganic Chemistry 38: 4093–4097. doi:10.1021/ic981430h.