செலீனியம் டெட்ராபுரோமைடு
செலீனியம் டெட்ராபுரோமைடு (Selenium tetrabromide) என்பது SeBr4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
டெட்ராபுரோமோ-λ4-செலேன்
| |
வேறு பெயர்கள்
செலீனியம் டெட்ராபுரோமைடு, செலீனியம்(IV) புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
7789-65-3 | |
ChemSpider | 74224 |
EC number | 232-181-9 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 82246 |
| |
UNII | 8O54YXR180 |
பண்புகள் | |
SeBr4 | |
வாய்ப்பாட்டு எடை | 398.576 |
அடர்த்தி | 4.029 கி/செ.மீ3 |
உருகுநிலை | 75 °C (167 °F; 348 K) (கரையும்) |
கொதிநிலை | 115 °C (239 °F; 388 K) (பதங்கமாகும்) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம் (α) monoclinic (β) |
புறவெளித் தொகுதி | P31c, எண். 159 (α) C2/c, No.15 (β) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H311, H314, H331, H351, H373, H410 | |
P201, P202, P260, P261, P264, P270, P271, P273, P280, P281, P301+310, P301+330+331, P302+352, P303+361+353 | |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செலீனியம் டெட்ராபுளோரைடு செலீனியம் டெட்ராகுளோரைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | தெலூரியம் டெட்ராபுரோமைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதனிம புரோமின் மற்றும் செலீனியம் ஆகியவற்றை வினைபுரியச் செய்து செலினியம் டெட்ராபுரோமைடு தயாரிக்கலாம்:[1][2]
- Se + 2Br2 -->SeBr4
பண்புகள்
தொகுகருப்பு நிறம் கொண்ட முக்கோண வடிவ α-SeBr4 செலீனியம் டெட்ராபுரோமைடு மற்றும் ஒற்றைச்சரிவு படிக அமைப்பிலான ஆரஞ்சு-சிவப்பு நிற β-SeBr4 செலீனியம் டெட்ராபுரோமைடு என்ற இரண்டு உருவங்களில் உள்ளது. இவை இரண்டும் நாற்பகுதிகளையுடைய கியூபேன் போன்ற Se4Br16 அலகுகளைக் கொண்டுள்ளன ஆனால் இவை எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதில் வேறுபடுகின்றன. [3] கார்பன் டைசல்பைடு, குளோரோபார்ம் மற்றும் எத்தில் புரோமைடு ஆகிய கரைப்பான்களில் செலீனியம் டெட்ராபுரோமைடு கரைகிறது. ஆனால் தண்ணீரில் இச்சேர்மம் சிதைவடைகிறது.[4] அதனால் ஈரமான காற்றில் செலினசு அமிலத்தை உருவாக்குகிறது.
செலீனியம் டெட்ராபுரோமைடு புரோமின்-நிறைவுற்ற வளிமண்டலத்தின் கீழ் மட்டுமே நிலைப்புத் தன்மை கொண்டுள்ளது. வாயு அடர்த்திக்கான வாயு கட்ட அளவீடுகள் சேர்மம் செலீனியம் மோனோபுரோமைடு மற்றும் புரோமின் வாயுக்களாகச் சிதைவதைக் குறிக்கிறது.[2]
- 2SeBr4 --> Se2Br2 + 3Br2
மேற்கோள்கள்
தொகு- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. pp. 772–774. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ 2.0 2.1 Tideswell, N. W.; McCullough, J. D. (1956). "Selenium Bromides. I. A Spectrophotometric Study of the Dissociation of Selenium Tetrabromide and Selenium Dibromide in Carbon Tetrachloride Solution1,2". Journal of the American Chemical Society 78 (13): 3026–3029. doi:10.1021/ja01594a025.
- ↑ Born, Ref. P.; Kniep, R.; Mootz, D. (1979). "Phasenbeziehungen im System Se-Br und die Kristallstrukturen des dimorphen SeBr4". Z. Anorg. Allg. Chem. 451 (1): 12–24. doi:10.1002/zaac.19794510103. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/zaac.19794510103.
- ↑ Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds. CRC Press. p. 360. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1461-1.