செவ்ரான் பட்டாம்பூச்சிமீன்
செவ்ரான் பட்டாம்பூச்சி மீன் | |
---|---|
முதிர்ச்சியடைந்த மீன் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
துணைப்பேரினம்: | மெகாபுரோட்டோடான்
|
இனம்: | கீ. திரைபேசியாலிசு
|
இருசொற் பெயரீடு | |
கீட்டோடான் திரைபேசியாலிசு குஆய் & கெய்மார்டு, 1825 |
செவ்ரான் பட்டாம்பூச்சி மீன் (Chevron Butterflyfish)(கீட்டோடான் திரைபேசியாலிசு) என்பது முக்கோண வடிவ அல்லது ஆங்கில எழுத்தான வி-கோடுள்ள பட்டாம்பூச்சி மீன் என்பதாகும். இது இந்திய-பசிபிக் கடல் பகுதியில் காணப்படும் பட்டாம்பூச்சி மீன்களின் ஒரு சிற்றினமாகும். இம்மீன் கீடோடோண்டிடே எனும் குடும்பத்தைச் சார்ந்தது. செவ்ரான் பட்டாம்பூச்சி மீனை முலாம்பழம் பட்டாம்பூச்சி, மூன்று-கோடுகள் கொண்ட பட்டாம்பூச்சி அல்லது மூன்று-பட்டை பட்டாம்பூச்சி ஆகியவற்றுடன் குழப்பக்கூடாது.[2]
விளக்கம்
தொகுசெவ்ரான் பட்டாம்பூச்சி மீன், இருண்ட செங்குத்து ஆங்கில எழுத்தான வி வடிவ அடையாளங்களுடன் ஒப்பீட்டளவில் நீளமான வெளிறிய உடலைக் கொண்டுள்ளது. மஞ்சள் பின்புற விளிம்புடன் கருப்பு நிறத்தில் வால் காணப்படும். வெளிர் விளிம்புகளுடன் ஒரு கருப்பு பட்டை உள்ளது. இது கண் வழியாக செல்கிறது. இளம் மீன்களில் கருப்பு நிற செங்குத்து பட்டை ஒன்று உள்ளது, இது முதுகுத் துடுப்பின் பின்புறத்திலிருந்து, உடலின் பின்புறம் குதத் துடுப்புகளின் பின்புறம் வரை செல்கிறது.[3] இம்மீன்கள் மஞ்சள் நிற வால் அடிப்பகுதியுடன் மார்புத் துடுப்புகளைக் கொண்டுள்ளது. முதுகுத் துடுப்பில் 13-15 முள் எலும்புகளும் 14-16 மென்மையான கதிர்களும் உள்ளன. குதத் துடுப்பில் 3-5 முள்கெலும்புகள் மற்றும் 13-15 மென்மையான கதிர்கள் உள்ளன. இந்த சிற்றினம் அதிகபட்சமாக 18 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடியது.[4]
பரவல்
தொகுசெவ்ரான் பட்டாம்பூச்சி மீன் இந்தோ-பசிபிக் பகுதிகளில் பரந்து காணப்படும். இது மேற்கு இந்தியப் பெருங்கடலில் கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரையில் எகிப்தின் தெற்கிலிருந்து தென்னாப்பிரிக்கா வரையிலும், இந்தியப் பெருங்கடல் தீவுகள் உட்பட இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் லைன் தீவுகள், ஜான்ஸ்டன் அட்டோல் மற்றும் ஹவ்லேண்ட் மற்றும் பேக்கர் தீவுகள் வரை பசிபிக் பெருங்கடலிலும் காணப்படுகிறது. மத்திய-மேற்கு பசிபிக். இது வடக்கே தெற்கு சப்பான் மற்றும் தெற்கே லார்ட் ஹோவ் தீவு மற்றும் ராபா இட்டி வரை பரவியுள்ளது. ஆத்திரேலியாவில் இந்த இனத்தை ஹவுட்மேன் அப்ரோல்ஹோஸ் முதல் பீகிள் தடைப்பாறை வரையிலும், மேற்கு ஆத்திரேலியாவில் உள்ள ரோலி ஷோல்ஸ் மற்றும் ஸ்காட் தடைப்பாறை வரையிலும் காணலாம். இது குயின்ஸ்லாந்தின் வடக்கு பெருந் தடுப்புப் பவளத்திட்டு, பவளக் கடலில் உள்ள சில திட்டுகளில் காணப்படுகிறது. நியூ சவுத் வேல்ஸில் உள்ள காஃப்ஸ் துறைமுகத்திற்கு அருகிலுள்ள அர்ரவர்ரா ஹெட்லேண்ட் வரை தெற்கே உள்ளது. ஆத்திரேலிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளான கொக்கோசு (கீலிங்) தீவுகள் மற்றும் கிறிஸ்துமசு தீவுகளைச் சுற்றிலும் இது காணப்படுகிறது.
வாழிடம்
தொகுசெவ்ரான் பட்டாம்பூச்சி மீன் என்பது ஒரு பிராந்திய இனமாகும். இது பகுதி-பாதுகாக்கப்பட்ட கடல் மற்றும் ஆழமற்ற கடற்கரைக் காயல் திட்டுகளில் காணப்படும். இது அக்ரோபோரா பவளப்பாறைகளுடன் நெருக்கமாக தொடர்புடையது. இவை பாலிப்கள் மற்றும் மியூகசுகளை உண்ணும். இவை, 2 முதல் 30 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றது. வளர்ச்சியடைந்த மீன்கள் தனியாகவோ அல்லது இணையாகவோ நீ்ந்துகின்றன (முக்கியமாக இனப்பெருக்க பருவத்தில்).[4]
வகைப்பாட்டியல்
தொகுசெவ்ரான் பட்டாம்பூச்சி மீனை முதன்முதலில் 1825ஆம் ஆண்டில் பிரான்சு நாட்டின் இயற்கை ஆர்வலர்களான ஜீன் ரெனே கான்சுடன்ட் குவாய் மற்றும் ஜோசப் பால் கெய்மார்ட் ஆகியோர் குவாம் என வழங்கப்பட்ட வகையுடன் விவரித்தனர்.[5] இந்த சிற்றினம் வயது சார்ந்த நிறம் மற்றும் நீட்டிக்கப்பட்ட வெளிப்புறத்தின் அசாதாரண அம்சங்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்தப் பண்பின் காரணமாக இந்த சிற்றினமானது ஒற்றை சிற்றினத் துணை பேரினமான பெம்காபுரோடோடானில் வைக்கப்பட்டது. இதன் நெருங்கிய உறவினங்கள் திசுகோகேடோடான் (எ.கா. எட்டுபட்டை பட்டாம்பூச்சி, கீ. ஆக்டோபாசியாடசு) மற்றும் டெட்ராசீடோடான் (எ.கா. கண்ணாடி பட்டாம்பூச்சி, கீ. இசுபெகுலம்) ஆகிய துணைப் பேரினங்களின் சிற்றினங்களாகத் தெரிகிறது. கீட்டோடான் பிரிக்கப்பட்டால், இவை மற்றும் பிற துணைப்பிரிவுகளுடன், மெகாபுரோடோடான் பேரினமாக வைக்கப்படும்.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Chaetodon trifascialis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2010.4. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2009. பார்க்கப்பட்ட நாள் 12 April 2011.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ FishBase (2008): Chaetodon trifascialis. Version of 2008-JUL-24. Retrieved 2008-SEP-01.
- ↑ "Chaetodon trifascialis". Reef Life Survey. பார்க்கப்பட்ட நாள் 10 December 2020.
- ↑ 4.0 4.1 வார்ப்புரு:Fishbase
- ↑ வார்ப்புரு:Cof genus
- ↑ Fessler, Jennifer L.; Westneat, Mark W (2007). "Molecular phylogenetics of the butterflyfishes (Chaetodontidae): Taxonomy and biogeography of a global coral reef fish family". Molecular Phylogenetics and Evolution 45 (1): 50–68. doi:10.1016/j.ympev.2007.05.018.
- ↑ Hsu, Kui-Ching; Chen, Jeng-Ping; Shao, Kwang-Tsao (2007). "Molecular phylogeny of Chaetodon (Teleostei: Chaetodontidae) in the Indo-West Pacific: evolution in geminate species pairs and species groups". Raffles Bulletin of Zoology Supplement 14: 77-86. http://rmbr.nus.edu.sg/rbz/biblio/s14/s14rbz10_Hsu-pp77-86.pdf. பார்த்த நாள்: 2008-09-01.