சேமி உட்ஸ்
சாமுவேல் மோசஸ் ஜேம்ஸ் உட்ஸ் (Samuel Moses James Woods 13 ஏப்ரல் 1867 - 30 ஏப்ரல் 1931) ஓர் ஆஸ்திரேலிய வீரர் ஆவார். இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி ஆகிய இரண்டு அணிகளுக்காவும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.ரக்பி யூனியனில் இங்கிலாந்து அணிக்காக பதின்மூன்று முறை விளையாடியுள்ளார். இதில் ஐந்து முறை தலைவராக இருந்தார். இவர் இங்கிலாந்தில் கால்பந்து மற்றும் வளைதடிப் பந்தாட்டம் ஆகிய இரண்டிலும் மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடினார். துடுப்பாட்டத்தினை முதன்மையாகக் கொண்ட இவர் இருபத்தி நான்கு ஆண்டு வாழ்க்கையில் நானூறு முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இந்த போட்டிகளில் பெரும்பாலானவை 1894 முதல் 1906 வரை இவர் தலைவராக இருந்த சோமர்செட் துடுப்பாட்ட அணிக்காக விளையாடினார்.[1]
இங்கிலாந்தில் கல்வி
தொகுஇவருக்கு 16 வயதாக இருந்தபோது, உட்ஸின் தந்தை இவரையும் இவரது தம்பி ஹாரிஸையும் இங்கிலாந்தில் கல்வியை கற்பதற்காக அனுப்ப முடிவு செய்தார். பள்ளியில் இருந்தபோது, வூட்ஸ் நகர துடுப்பாட்ட சங்கத்தில் விளையாடினார், மேலும் அந்த ஆண்டின் முடிவில் வெளியிடப்பட்ட மட்டையாட்ட சராசரிகளில் ஏழாவது இடத்தில் இருந்தார். அதில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்கள் எடுத்தார் . ஆகஸ்ட் 1884 ஆம் ஆண்டில் இவர் பிரைட்டன் கல்லூரியில் சேர்ந்தார். மேலும் இரண்டு துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடிய பிறகு, கால்பந்து போட்டிகள் தொடங்கியது. கோடை காலத்தில் துடுப்பாட்டம் மற்றும் குளிர்காலத்தில் ரக்பி கால்பந்தினை விளையாடினார். சில வாரங்களுக்குப் பிறகு, இவர் பள்ளி மற்றும் சசெக்ஸ் கவுண்டி கால்பந்து அணி ஆகிய இரண்டிற்கும் கோல் காப்பாளராக விளையாடினார் .[2]
தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி
தொகு1888 ஆம் ஆண்டில், ஆறாவது ஆஸ்திரேலிய அணி மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டி மற்றும் 30 க்கும் மேற்பட்ட முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து சென்றது.[3] இந்த அணி ஒப்பீட்டளவில் பலவீனமானதாகக் கருதப்பட்டது, குறிப்பாக மட்டயாட்டத்தில், அதில் தேர்வாகியிருந்த நான்கு வீரர்களுக்கு மட்டுமே இங்கிலாந்தின் மைதானங்கள் குறித்த முன் அனுபவம் இருந்தது. ஹேரி அல்தாம் இந்த அணி ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேறுவதை விமர்சித்தனர்.".ஜார்ஜ் கிஃபென் மற்றும் ஹாரி மோசஸ் ஆகியோரிடம் டபிள்யூ. ஜி. கிரேஸ் தனது அதிருப்தியினை வெளிப்படுத்தினார். இவர் ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர்கள் இந்த அணியுடன் பயணம் செய்யவில்லை, மேலும் இவர்கள் ஃப்ரெட் ஸ்போஃபோர்த்தினைப் பந்துவீச்சில் தேர்வு செய்யவில்லை எனக் குறிப்பிட்டார்.[4] சுற்றுப்பயணத்தின் போது சிட்னியைச் சேர்ந்த பன்முக வீரரான சமி ஜோன்ஸ், பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்டார், மற்றும் ஆஸ்திரேலியர்கள் பதின்மூன்று பேர் கொண்ட அணியைக் கொண்டிருந்ததால், வூட்ஸ் அந்த அணியில் அழைக்கப்பட்டார்.[5]
பிற்கால வாழ்வு
தொகுஇவரது துடுப்பாட்டத்தில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட காலத்திற்குப் பிறகும் இவர் சோமர்செட்டில் மிகவும் பிரபலமான மற்றும் நன்கு அறியப்பட்ட நபராக இருந்தார். இவர் இறந்தபோது, டவுன்டன் துக்க நிலையில் இருந்தார்.[6] ஆர்.சி. ராபர்ட்சன்-கிளாஸ்கோ இவரைப் பற்றி : "நீங்கள் டவுண்டனைத் தெரிந்து கொள்ள விரும்பினால், ஒரு கோடை காலையில் போட்டிக்கு முன்பாக சாம் உட்ஸுடன் மைதானத்தைச் சுற்றி நடக்கவும். சாம், சோமர்செட்டின் காட்பாதர் ஆவார். "என எழுதினார் [7]
சான்றுகள்
தொகு- ↑ A. A. Thomson, Cricketers of My Time, 1967, p. 160.
- ↑ Jiggens (1997), p19.
- ↑ "Australia in England 1888". CricketArchive. Archived from the original on 6 November 2012. பார்க்கப்பட்ட நாள் 13 November 2010.
- ↑ Grace (1899), pp198–201.
- ↑ Jiggens (1997), p34.
- ↑ White, James. "The Legends: Sammy Woods – "One of Somerset cricket's most famous sons!"". theincider. Archived from the original on 3 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 2 January 2018.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ R.C. Robertson-Glasgow, 46 Not Out, first published by Hollis & Carter, 1948, p129 of the Sportsman's Book Club edition.