சேற்று பூனைப்பருந்து
சேற்று பூனைப்பருந்து | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | |
உள்வகுப்பு: | |
பெருவரிசை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. aeruginosus
|
இருசொற் பெயரீடு | |
Circus aeruginosus (லின்னேயஸ், 1758) | |
Dark green: present all year Light green: nesting only Blue: wintering only |
சேற்று பூனைப்பருந்து (Western Marsh Harrier - Circus aeruginosus) ஒரு வலசை போகும் வேட்டைப்பருந்து (Harrier)[2] வகையாகும். சதுப்பு நிலங்களிலும் ஏரிகளிலும் நெல்வயல்களிலும் இப்பறவையைக் காணலாம். இவை நடு, வட ஐரோப்பாவில் இனப்பெருக்கும் செய்கின்றன. குளிர் காலத்தில் ஆப்பிரிக்காவுக்கும் இந்திய துணைக்கண்டத்துக்கும் வலசை வருகின்றன. இவை நீர்நிலைகளை ஒட்டிய காட்டுப் பகுதியில் தங்கிச் செல்கின்றன.[3]
உடல் தோற்றம்
தொகு- 48 cm முதல் 58 cm வரை நீளமுள்ளது.[4]
- ஆண்: பறக்கும்போது இறக்கையின் உட்புறப் பகுதி செம்பழுப்பாகவும் அதன் நுனி கருப்பாகவும் இருக்கும்; அவற்றிற்கு இடைப்பட்ட பகுதி சாம்பல் நிறமாக இருக்கும். இறக்கையின் வெளிப்புறப் பகுதி கரும்பழுப்பாகவும் காணப்படும்.
- பெண்: முழுவதும் கரும்பழுப்பாகக் காணப்படும்; உச்சந்தலையும் இறக்கையின் மேல்முனையும் வெளிர் மஞ்சள் நிறத்திலிருக்கும்.[5]
- முதிர்வடையாத பருந்து: முழுவதும் கரும்பழுப்பு நிறத்திலிருக்கும். பெண் பருந்துக்குரிய அடையாளமான வெளிர் மஞ்சள் தலை/இறக்கை இருக்காது.
- பொது: பார்வையாளரை நோக்கிப் பறந்து வரும்போது இறக்கை 'V' வடிவத்திலிருக்கும்.[6]
கள இயல்புகள்
தொகு- தரையிலோ புதரிலோ குட்டையான கம்பங்களிலோ நீண்ட நேரம் அமைதியாகக் காத்திருக்கும்; சில மீட்டர் உயரம் பறந்து நகங்களை நீட்டியவாறு தரையிறங்கும்.
- அனைத்துப் பருந்துகளும் வயல்வெளித் தரையிலேயே சேர்ந்து அடைந்து ஓய்வெடுக்கும்.[7]
- வாத்து, உள்ளான் உள்ளிட்ட சிறு பறவைகளை வேட்டையாடுவோருக்கு நன்கு அறிமுகமான பருந்து இது. அடிபட்ட பறவையை வேடர்கள் வந்து எடுப்பதற்குள் கவர்ந்து சென்று விடும்.[8]
உணவு
தொகுசேற்று பூனைப்பருந்து, வழக்கமான பூனைப் பருந்து பாணியில் வேட்டையாடுகிறது. இரையைத் தேடும் போது தட்டையான திறந்த நிலத்தின் மீது தாழ்வாக சறுக்குகிறது. இதன் இறக்கைகள் ஆழமற்ற V- வடிவத்திலும் பெரும்பாலும் தொங்கும் கால்களுடனும் இருக்கும். இது சிறிய பாலூட்டிகள், சிறிய பறவைகள், பூச்சிகள், ஊர்வன மற்றும் தவளைகளை உணவாக உண்ணுகிறது.[9][10]
கலைச்சொற்கள்
தொகுrufous = செம்பழுப்பு; harrier = வேட்டைப்பருந்து; dark brown = கரும்பழுப்பு;
மேற்கோள்கள்
தொகு- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Circus aeruginosus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 16 July 2012.
{{cite web}}
: Invalid|ref=harv
(help) - ↑ தமிழ் இணையக் கல்விக்கழக கலைக்களஞ்சியம் -பக். 568
- ↑ "அச்சம் என்பது மடமை என்று உணர்த்திய பறவை!". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-12-11.
- ↑ Pocket Guide to the Birds of the INDIAN Subcontinent - Grimmett, Carol& Tim Inskipp 2001 Reprint - பக். 156
- ↑ "r3dd0 வலைப்பூ-2வது படம்". Archived from the original on 2013-04-23. பார்க்கப்பட்ட நாள் 2013-04-23.
- ↑ ஏவிபேர்சு.காம்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Birds of Tamilnadu - Dr. K. Ratnam - #43
- ↑ The Book of Indian Birds - Salim Ali - BNHS 1941 - p. 258
- ↑ "Marsh harrier". RSPB's Birds by Name. Royal Society for the Protection of Birds.
- ↑ "Marsh Harrier". BBC Nature.