சே. இரகுபதி

இந்திய அரசியல்வாதி

சே. இரகுபதி (S. Regupathy) (பிறப்பு: 30 சூலை 1950) இந்திய அரசியல்வாதியும், முன்னாள் மத்திய மற்றும் மாநில அமைச்சரும் ஆவார்.

சே. இரகுபதி
சட்டத்துறை அமைச்சர் & சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு
பதவியில் உள்ளார்
பதவியில்
07 மே 2021
தொகுதிதிருமயம்
பதவியில்
2016–2021
பதவியில் உள்ளார்
பதவியில்
2021
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 சூலை 1950 (1950-07-30) (அகவை 74)
புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
துணைவர்சரோஜா ரகுபதி
பிள்ளைகள்மருத்துவர் அண்ணாமலை, முனைவர் கவிதா சுப்பிரமணியன்
வாழிடம்(s)புதுக்கோட்டை, தமிழ்நாடு, இந்தியா
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

அரசியல்

தொகு

நாடாளுமன்ற உறுப்பினர் & மத்திய அமைச்சர்

தொகு

இரகுபதி 2004ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில், தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பிற்கு முன்னர் இருந்த புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டார்.[2]

இவர் 2004ஆம் ஆண்டு முதல் 2007 வரை இந்திய அரசின், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்தார். 

சட்டமன்ற உறுப்பினர் & மாநில அமைச்சர்

தொகு

இரகுபதி முதன் முதாலவதாக 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருமயம் சட்டமன்றத் தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். பின்னர் அதிமுக கட்சியிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.

2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இவர் விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் திருமயம் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த பி. கே. வைரமுத்துவைத் தோற்கடித்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருமயம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 2021 மே 7 அன்று தமிழக சட்டத்துறை (சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம்) அமைச்சராகப் பதவியேற்றார்.[3]

சொந்த வாழ்க்கை

தொகு

இரகுபதி புதுக்கோட்டை மாவட்டத்தினைச் சேர்ந்தவர். இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இளம் அறிவியல் பட்டமும் சட்டக்கல்லூரியில் சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். இவரது மனைவி சரோஜா ஆவார். இந்த இணையருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. http://election.maalaimalar.com/ta-in/candidate/RegupathyS1415[தொடர்பிழந்த இணைப்பு]
  2. http://www.puthiyathalaimurai.com/news/politics/3503-dmk-releases-candidate.html
  3. தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள் யார், யார்? முழு விவரம், பிபிசி 2021 மே 6
  4. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் -எவர்”. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம், சென்னை 600009. 1991. p. 447.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சே._இரகுபதி&oldid=4119130" இலிருந்து மீள்விக்கப்பட்டது