சைபீரியன் மணல் உப்புக்கொத்தி
சைபீரியன் மணல் உப்புக்கொத்தி ( Siberian sand plover ) என்பது உப்புக்கொத்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய பறவை ஆகும். பன்னாட்டு பறவையியலாளர்கள் சங்கம் சிறிய மணல் உப்புக்கொத்தியில் இருந்து இப்பறவையையும், திபெத்திய மணல் உப்புக்கொத்தியையும் பிரித்து இதற்கு சைபீரியன் மணல் உப்புக்கொத்தி என பெயரிட்டது.[2]
சைபீரியன் மணல் உப்புக்கொத்தி | |
---|---|
லெம் ஃபாக் பியா, பான் லேம், பெட்சபுரி, தாய்லாந்து | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Charadrius |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/CharadriusC. mongolus
|
இருசொற் பெயரீடு | |
Charadrius mongolus Pallas, 1776 | |
Subspecies | |
|
பரவல்
தொகுஇது வடகிழக்கு சைபீரியாவில் கடலோர சமவெளிகளில் இனப்பெருக்கம் செய்கிறது. இதன் வாழிட எல்லையின் கிழக்கு பகுதியில் மங்கோலியன் உப்புக்கொத்தியின் வாழிடப் பகுதி உள்ளது. இது அலாசுகாவிலும் இனப்பெருக்கம் செய்கிறது. இது வெற்றுத் தரையில் குழிவான இடத்தில் கூடு கட்டி, அதில் மூன்று முட்டைகளை இடுகிறது. இந்த இனம் குளிர்காலத்தில் கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் மணல் நிறைந்த கடற்கரைகளை நோக்கி வலசை போகிறது.[2]
விளக்கம்
தொகுஇந்த சைபீரியன் உப்புக்கொத்தியானது நீண்ட கால்களையும், நீண்ட அலகையும் கொண்டது. இனப்பெருக்கம் செய்யும் காலத்தில் ஆண் பறவைகளுக்கு சாம்பல் முதுகும், வெள்ளை அடிப்பகுதியும் இருக்கும். நெஞ்சு, நெற்றி, கழுத்து போன்றவை கஷ்கொட்டை நிறத்ததில் இருக்கும். கண் வழியாக ஒரு கரும்பட்டை செல்லும். இப்பறவ்வைகள் பால் ஈருருமை கொண்டவை. இந்தப் பறவைகளில் இளம் பறவைகளுக்கு கஷ்கொட்டை நிறம் இருப்பதில்லை. மேலும் குளிர்காலத்தில் இப்பறவைகளின் தலையில் செம்பழுப்பு குறிப்பு காணப்படும். கால்கள் கருமையாகவும், அலகு கருப்பு நிறத்தில் இருக்கும்.
இந்த இனப் பறவைகளின் சிறகுத்தோற்றமானது மணல் உப்புக்கொத்தியுடன் மிகவும் ஒத்திருக்கும்.
சூழலியல்
தொகுசைபீரியன் உப்புக்கொத்தியானது பூச்சிகள், ஓடுடைய கணுக்காலிகள், வளையப் புழுகள் போன்றவற்றை உண்கிறது.
ஆப்பிரிக்க-யூரேசிய வலசை போகும் நீர்ப்பறவைகளுக்கான பாதுகாப்பு ஒப்பந்தம் (AEWA) பொருந்தும் இனங்களில் சைபீரியன் மணல் உப்புக்கொத்தியும் இடம்பெற்றுள்ளது.
அடையாளம்
தொகுசைபீரியன் மணல் உப்புக்கொத்தியை பெரிய மணல் உப்புக்கொத்தியில் இருந்து வேறுபடுத்தும் காரணிகளில் அளவு குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. சைபீரியன் மணல் உப்புக்கொத்தி சற்று சிறியதாக இருக்கும். இருப்பினும், தனித்தனியாகப் பார்க்கும்போது அளவை மட்டும் நம்புவது உகந்தது அல்ல. அலகின் நீளம் இதன் மற்றொரு தனிச்சிறப்பு அம்சமாகும். சைபீரியன் மணல் உப்புக் கொத்திக்கு உள்ள பெரிய அலகுடன் ஒப்பிடும்போது மணல் உப்புக் கொத்தி குறுகிய அலகைக் கொண்டுள்ளது. சைபீரியன் மணல் உப்புக் கொத்தியின் கால்களின் நிறம் பொதுவாக கருப்பு முதல் சாம்பல் வரை இருக்கும். அதே சமயம் மணல் உப்புக்கொத்தியின் கால்கள் சாம்பல் நிறத்தில் இருந்து மஞ்சள் நிறம் வரை இருக்கும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Charadrius mongolus". IUCN Red List of Threatened Species 2016: e.T22693855A93427510. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22693855A93427510.en. https://www.iucnredlist.org/species/22693855/93427510. பார்த்த நாள்: 19 November 2021.
- ↑ 2.0 2.1 IOC World Bird List (v 13.2). 2023. எண்ணிம ஆவணச் சுட்டி:10.14344/IOC.ML.13.2.
வெளி இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் Charadrius mongolus தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- விக்கியினங்களில் Charadrius mongolus பற்றிய தரவுகள்