சையத் ஹசன் இமாம்

சையத் ஹசன் இமாம்(Syed Hasan Imam 31 ஆகஸ்ட் 1871 - 19 ஏப்ரல் 1933) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், அவர் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக 1918 ஆம் ஆண்டு செப்டம்பரில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்காவது முஸ்லீம் இவராவார். (பத்ருதீன் தியாப்ஜி, ரஹமத்துல்லாஹ் முஹம்மது சயானி மற்றும் நவாப் சையத் முகமது பகதூர்ஆகியோருக்குப் பிறகு).[1][2]

சையத் ஹசன் இமாம்
பிறப்பு(1871-08-31)31 ஆகத்து 1871
பாட்னா
இறப்பு19 ஏப்ரல் 1933(1933-04-19) (அகவை 61)
பாட்னா
தேசியம்இந்தியர்
பணிஅரசியல்வாதி
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரஸ்

பிறப்பு

தொகு

சையத் ஹசன் இமாம் 31 ஆகஸ்ட் 1871 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தின் பாட்னா அருகிலுள்ள நியோரா எனும் ஊரில் பிறந்தார். சையத் அவர்களின் மூதாதையர்களில் ஒருவர் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் ஆசிரியராக இருந்தவர். இவர் ஹாரோ மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தவர், இந்திய உச்ச நீதிமன்றத்தின் தேர்ந்த வழக்கறிஞராகவும் லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தார். ஹசன் இமாமின் தந்தை பாட்னா கல்லூரியில் வரலாறு பேராசிரியராக இருந்தார்.


இதையும் பார்க்க

தொகு

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பட்டியல்

மேற்கோள்கள்

தொகு
  1. From the Archives (August 27, 1918): The Special Congress (Syed Hasan Imam) Archives of The Hindu (newspaper), Published 27 August 2018, Retrieved 26 August 2019
  2. http://heritagetimes.in/syed-hasan-imam-president-of-indian-national-congress-who-represented-india-at-the-league-of-nations/ Syed Hasan Imam, President of Indian National Congress who represented India at the 'League Of Nations'] Heritage Times (newspaper), Published 19 April 2019, Retrieved 26 August 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=சையத்_ஹசன்_இமாம்&oldid=3507183" இலிருந்து மீள்விக்கப்பட்டது