சைவ சமய மடங்கள்
சைவ சமய மடங்கள் அல்லது சைவ ஆதீனம் என்பவை சைவ சித்தாந்தத்தை வளர்க்கும் நோக்கத்துடன் தோற்றுவிக்கப்பட்ட மடாலயங்கள் ஆகும். இத்தகைய பல மடங்கள் 16-ஆம் நூற்றாண்டு முதல் தோன்றி வளர்ந்தன.[1]
சொல் விளக்கம்
தொகுமடத்து ஞானபீடங்கள்
தொகு- சித்தர் சிவபிரகாசரின் மாணாக்கர் நமச்சிவாயர் 14-ஆம் நூற்றாண்டில் இதனைத் தோற்றுவித்தார்.
- காஞ்சி ஞானப்பிரகாசர் மடம்
- சீர்காழி சிற்றம்பல நாடிகள் என்பவரின் மாணாக்கர் 14-ஆம் நூற்றாண்டில் இதனைத் தோற்றுவித்தார்.
- திருவையாறு செப்பறை மடம் என்னும் பீடம்
- இதனை மச்சுச் செட்டியார் என்னும் மச்சுக்கறை வணிக யோகி திருவையாற்றில் நிறுவினார். இந்தச் செட்டியார், சந்திரசேகரன் என்னும் பிராமணனுக்கு ஞானம் வழங்கியவர். இந்தச் சந்திரசேகரன் வழியில் திருவையாறு சாமிநாத தேசிகர் முதலான 15 ஆசாரியர் தலைமை பூண்டு ஒரு பீடம் (அறக்கட்டளை) நிறுவி மடத்தைப் பேணிவந்தனர்.
- இவர்களில் சந்திரசேகரன் தவிர பிறர் இல்லறம் பேணிய வேளாளர்கள்.
- இந்த ஒரு மடத்தைத் தவிர பிற மடங்கள் (ஆதீனம், பீடம்) துறவு பூண்டவர்களையே தலைவர்களாகக் கொண்டிருந்தன
- பழுதைக்கட்டி சம்பந்த முனிவர் அவரிடம் ௨பதேசம் பெற்றவர் காவை அம்பலநாத சுவாமிகளாவர். காவை அம்பலநாத சுவாமிகளிடம் ௨பதேசம் பெற்றவர் சத்திய ஞான பண்டாரம். இவர்களின் தீட்சா நாமம் சத்திய ஞானதேசிக தீர்க்கதரிசினிகள். இவர்கள் தி௫நெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேளை நகர் எனும் வேளாக்குறிச்சியில் தாமிரவ௫ணி நதிக்கரையில் வேளாக்குறிச்சி ஆதீனத்தை நிறுவியவர்கள்
- சிற்றம்பல நாடிகள்[3] பரம்பரையில் 5-ஆவது சீடர் கமலை (சீர்காழி) ஞானப்பிரகாசர் [4]. கமலை ஞானப் பிரகாசரின் மாணாக்கர் குருஞான சம்பந்தர் தருமபுர ஆதீனத்தை 16-ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்தார்.
- காசித்திருமடம், திருப்பனந்தாள்
- காசித்திருமடம் குமரகுருபரர் அவர்களால் முதலில் காசி நகரில் துவங்கப்பட்டது. திருப்பனந்தாளில் அதன் கிளைமடம் 1720ல் நிறுவப்பட்டது. நாளைடைவில் திருப்பனந்தாளில் இருந்த கிளைமடம் தலைமையிடமாக மாறிற்று
- துழாவூர் மடம்
- கமலை ஞானப்பிரகாசரின் மற்றொரு மாணாக்கர் நிரம்ப அழகிய தேசிகர் இந்த மடத்தைத் தோற்றுவித்தார்.
- தருமை ஆதீனம்
- தருமபுர ஆதீன பரம்பரை
- திருவாவடுதுறை ஆதீனம்
- திருவாவடுதுறை ஆதீன பரம்பரை
- மதுரை ஆதீனம்
- மயிலம் பொம்மபுர ஆதீனம்
- வேளாக்குறிச்சி ஆதீனம்
- திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி
- மயிலம் பொம்மபுர ஆதீனம்
- மதுரை ஆதீனம்
- சூரியனார்கோயில் ஆதினம், சூரியனார்கோயில்
- தொண்டைமண்டல ஆதினம், காஞ்சிபுரம்
- செங்கோல் ஆதினம், பெருங்குளம்
- நாச்சியார்கோவில் ஆதீனம், நாச்சியார்கோவில்
- வரணி ஆதீனம், வேதாரண்யம்
- வள்ளலார் ஆதினம், சீர்காழி
- சொர்க்கப்புர ஆதீனம், அம்பர்மாகாளம்
- ஆகமசிவப்பிரகாசர் ஆதீனம், சிதம்பரம்
- தாயுமானவ ஸ்வாமிகள் ஆதினம், அன்னப்பன்பேட்டை
- நீலப்படி ஆதினம்
- இராமேச்சர ஆதினம்
- கோவிலூர் ஆதீனம்
மேற்கோள்களும் அடிக்குறிப்பும்
தொகு- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 2, 2005, பக்கம் 226
- ↑ மதுரையில் சம்பந்தர் தங்கிய இடத்தைப் பெரியபுராணம் மடல் எனக் குறிப்பிடுகிறது.
- ↑ பதினான்காம் நூற்றாண்டு
- ↑ 16-ஆம் நூற்றாண்டு