சொக்கலிங்கபுரம்

சொக்கலிங்கபுரம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், குப்பனாபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள கிராமம்[4]. கடம்பூர் - பசுவந்தனை இடையே சொக்கலிங்கபுரம் அமைந்துள்ளது. இப்பகுதியின் பெரிய நகரமான கோவில்பட்டி, இக் கிராமத்திலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மருத்துவமனை, காவல்நிலையம், பள்ளிக்கூடம் போன்ற அடிப்படைத் தேவைகளை அருகில் அமைந்துள்ள கடம்பூர் சென்று இக்கிராம மக்கள் பூர்த்தி செய்துகொள்கின்றனர். சுமார் 100 குடும்பங்கள் வாழும் இந்த சிறிய கிராமத்தின் மக்கள்தொகை 400.

சொக்கலிங்கபுரம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தூத்துக்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மருத்துவர். கி. செந்தில் ராஜ், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பள்ளி தொகு

கயத்தார் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப துவக்கப்பள்ளி (அரசுப்பள்ளி) இங்கு அமைந்துள்ளது. சுமார் 50 மாணாக்கர்கள் இந்த பாடசாலையில் கல்வி கற்கின்றனர்.

தொழில் தொகு

விவசாயம் கிராமத்தின் முக்கியத் தொழில். இக்கிராம விவசாயம் மானாவாரி (மழை பொழிந்தால் தான் விவசாயம்) வகையைச் சார்ந்தது. மண் வகை கரிசல் மண் .உளுந்து, பாசிபயறு, எள், பருத்தி போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன. விவசாயம் போக மற்ற சமயங்களில் ஆடு மாடு மேய்தல், விவசாயம் சார்ந்த கூலி வேலைகளில் இக்கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தட்பவெட்பம் தொகு

வருடத்தின் பெரும்பகுதி வெப்பமிகு பகுதியாகும். வடகிழக்குப் பருவ மழையை நம்பியே இக்கிராம விவசாயமும் தொழிலும் அமைந்துள்ளன. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் கரிசல்மண் வகையைச் சார்ந்தவை. மழைநீர்ப்பாசனத்தை நம்பியே இக்கிராமத்தின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் அமைந்துள்ளன.

மதம் தொகு

பெரும்பான்மையான மக்கள் இந்து சமயத்தைச் சேர்ந்தோர். ஒரு சில நாத்திகர்களும், கிருத்துவ மக்களும் வாழ்ந்து வருகின்றனர். கருப்பசாமி கோவில், காளியம்மன் கோவில், பிள்ளையார் கோவில், பெருமாள் கோவில் உட்பட நான்கு கோவில்கள் உள்ளன.

வரலாறு தொகு

நாயக்கர் கால ஆட்சிக்காலத்தில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மக்கள் இங்கு இடம் பெயர்ந்து வந்ததாகவும், மதுரை சொக்கநாதர் நினைவில் சொக்கலிங்கபுரம் என்று பெயரிடப்பட்டதாகவும் வரலாறு கூறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2014-06-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொக்கலிங்கபுரம்&oldid=3556135" இலிருந்து மீள்விக்கப்பட்டது