சொடுக்கொலி இயக்கம் (சுடுகலன்)

சொடுக்கொலி இயக்கம் (ஆங்கிலம்: snaplock, ஸ்னாப்லாக்) என்பது துப்பாக்கியை வெடிக்கச் செய்யும் ஒரு இயங்குமுறை ஆகும். இத்தகைய இயங்குமுறையில் இயங்கும் துப்பாக்கிகளை, சொடுக்கியக்கி என்பர்.

சுருள்வில்லால் ஆற்றல்பெறும் சுத்தியல், கடினமூட்டப்பட்ட எஃகின் மேல், ஒரு தீக்கல்லை அடிக்கும்போது;  உண்டாகும் தீப்பொறியைக் கொண்டு, (வழக்கமாக வாய்குண்டேற்றப்படும்) ஒரு சொடுக்கியக்க ஆயுதத்தின் உந்துபொருள் பற்றவைக்கப்படும். இந்தவகையில், சொடிக்கியக்கியும் சொடுக்குஞ்சேவலும் (சிலசமயங்களில் சொடுக்கியக்கத்தைவிட மேம்பட்டது என்று வகைப்படுத்த பட்டது) ஒரே மாதிரி தான். பிற்காலத்தில் தீக்கல்லியக்கி வந்தது. 

எல்லா சொடுக்கியக்கிகளிலும், சுத்தியல் எனப்படும் ஒரு வளைந்த நெம்புகோலின் முனையில் உள்ள பற்றுக்கருவியில்  தீக்கல் இருக்கும். துப்பாக்கி "இழுக்கப்பட்டு" இருக்கும் போது, சுருள்வில்லின் அழுத்தத்திற்கு எதிராக, விசை இயக்கத்தின் அங்கமான பிடிப்பானால், சுத்தியல் பின்னால் இழுத்துப்பிடித்து வைக்கப்பட்டிருக்கும். விசை இழுக்கப்படுகையில், பிடிப்பானும், சுருள்வில்லும் விடுவிக்கப்பட்டு, சுத்தியல் அதிவேகமாக முன்னால் நகரும். தீக்கல், ஒரு கடினமூட்டப்பட்ட எஃகினால் ஆன வளைந்த தகட்டின்மீது அடிக்கும். எஃகின் மீதான இந்த மோதலால், தீப்பொறிகளை உண்டாகி, கிண்ணியில் இருக்கும் எரியூட்டும் துகள்களில் விழும். பற்றவைக்கப்பட்ட எரியூட்டியின் தீயானது, குழலின் பிற்பகுதியிலுள்ள சிறு துளை வழியாக, சுடும் அறைக்குள் இருக்கும் முதன்மை வெடிபொருளை பற்றவைக்கும். 

சொடுக்கியக்கியில் சுடுவதற்கு முன்பாக, மூடியிடப் பட்டிருக்கும் கிண்ணியை, சுடுநரால் திறக்கப்படவேண்டும்.

விசையை இழுத்தவுடன் தானாகவே கிண்ணிமூடி திறந்துக்கொள்ளும் இயக்கமுறை தான் சொடுக்குஞ்சேவல் ஆகும் 

பயன்பாட்டில் இருந்த காலம் 

தொகு

1540-களின் பிற்பகுதியில், சொடுக்கியக்கிகள் தென் ஜெர்மனியில் முதலில் தோன்றியதாக கருதப்படுகிறது.[1] இது விலை மலிவாகவும், உற்பத்தி செய்ய எளிதாகவும் இருந்தது. திரி-இயக்கத்திற்கு பின்வந்த ஆயுதங்களை போலவே, இதையும் முன்கூட்டியே சுட ஆயத்தப்படுத்தி வைத்துக் கொள்ள முடியும். ஸ்கேன்டினேவியா மற்றும் ரஷ்யாவின் நவீன காலங்கள் வரை, இது பயன்பாட்டில் இருந்தது. ஆனால், 1640-வாக்கிலேயே இது வழக்கொழிந்து போனது.[2]

மேலும் பார்க்க 

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Blair 1983:42
  2. Blair 1983:67

புற இணைப்புகள்

தொகு