சோகன் அல்வா
வட்டவடிவ சோகன் அல்வா | |
பரிமாறப்படும் வெப்பநிலை | இனிப்பு |
---|---|
தொடங்கிய இடம் | பழைய தில்லி, இந்தியா |
பகுதி | இந்தியத் துணைக்கண்டம் |
முக்கிய சேர்பொருட்கள் | கேரமல், சீனி, பால் (பானம்), நீர் |
வேறுபாடுகள் | வாதுமை |
பிற தகவல்கள் | அல்வா |
சோகன் அல்வா (Sohan halwa) என்பது இந்தியாவின் பழைய தில்லியின் பாரம்பரிய முகலாய[1]இனிப்பு ஆகும். இது இந்திய துணைக்கண்டத்தில் பிரபலமானது. முகலாய காலத்திலிருந்தே இது பிரபலமானது.
சோகன் அலவா தண்ணீர், சர்க்கரை, பால் மற்றும் சோளமாவு கலந்து கெட்டியாகும் வரை கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படுகிறது. குங்குமப்பூ வாசனைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. கடாயில் ஒட்டாமல் இருக்க நெய் பயன்படுத்தப்படுகிறது. பாதாம், பிஸ்தா, ஏலக்காய் விதைகள் சேர்க்கப்படுகின்றன. இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மற்ற அல்வா உணவுகளைப் போலல்லாமல், இது மத்தியக் கிழக்கு நாடுகளில் தயார் செய்வதுபோன்று திடமானது.
வரலாறு
தொகுஆட்சியின் போது நிறுவப்பட்ட கந்தேவாலா இனிப்புக் கடையில் சோகன் அல்வா தயாரிக்கப்பட்டதாக அறிய வருகிறது. இந்த இனிப்புக் கடை மக்களால் பிரபலமாக விரும்பப்பட்ட இனிப்பகமாக இருந்தது.[2][3] ஆனால் 2015- இல் இலாபம் இல்லாததால் கடை மூடப்பட்டது.[4]
இந்த இனிப்பு முதலில் கரிபோலியில் (இந்தி) சோகன் என்று அழைக்கப்பட்டது. சோபன் என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து இதன் பெயர் உருவானது. ஜான் டி. பிளாட்சின் உருது, பழைய இந்தி மற்றும் ஆங்கிலம் அகராதியின்படி, இந்த இனிப்புக்கு சோகன் லால் எனப் பெயரிடப்பட்டது.[5]
சோகன் அல்வா பாக்கித்தானிய உணவு வகைகளில், குறிப்பாக சராய்கி உணவு வகைகளில் மிக முக்கியமான பகுதியாகும். முல்தானி அல்லது ஹபீஸ் சோகன் அல்வா என அழைக்கப்படும் அதன் வகைகளில் ஒன்று, பாக்கித்தானிலும், உலகெங்கிலும் உள்ள பாக்கித்தானிய புலம்பெயர்ந்த மக்களிடையேயும் மிகவும் பிரபலமாக உள்ளது.
வணிக உற்பத்தி
தொகுசோகன் அல்வா பல தசாப்தங்களாகப் பாரம்பரிய மிட்டாய் தயாரிப்பவர்களால் வணிக ரீதியாகத் தயாரிக்கப்படுகிறது. இது எளிதில் உடையக்கூடியது. பொதுவாக 5-6 மிமீ தடிமன் கொண்ட வட்டுகளாக அல்லது சதுர வடிவில் துண்டுகளாகத் தயாரிக்கப்படுகிறது. இது பொதுவாக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட உருளிகளில் பொதியிடப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் பிற பொதிகளிலும் இடப்படுகிறது.[6]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Not Butter Chicken, Delhi Was Once Renowned For Its Sohan Halwa, Brief History Of The Sweet". Slurrp. பார்க்கப்பட்ட நாள் 2022-03-27.
The Mughals, who were of Persian descent, made this [Sohan].
- ↑ Planet, Lonely. "Restaurants in Delhi, India".
- ↑ The royal treat in Chandni Chowk[usurped!] தி இந்து, Nov 07, 2002.
- ↑ "Ghantewala: Why did Delhi's 'oldest sweet shop' shut down?". BBC News. 24 July 2015. https://www.bbc.com/news/world-asia-india-33639456.
- ↑ "A Dictionary of Urdu, Classical Hindi, and English". 1884.
- ↑ Ramazani, Nesta (1997). Persian Cooking: A Table Of Exotic Delights. Ibex Publishers, Inc. p. 296. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-936347-77-6.