சோடியம் சிடானேட்டு
சோடியம் சிடானேட்டு (sodium stannate) என்பது H6Na2O6Sn அல்லது Na2[Sn(OH)6] என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். முன்னதாக இச்சேர்மத்தை எக்சா ஐதராக்சோசிடானேட்டு(IV) என்ற பெயராலும் அழைத்தனர். வெள்ளீயம் உலோகம் அல்லது வெள்ளீய(IV) ஆக்சைடை சோடியம் ஐதராக்சைடில் கரைத்து நிறமற்ற இவ்வுப்பு உருவாக்கப்படுகிறது. ஐதரசன்பெராக்சைடு நிலைநிறுத்தியாக இது பயன்படுத்தப்படுகிறது [2].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
சோடியம் எக்சாஐதராக்சோசிடானேட்டு(IV)
| |
வேறு பெயர்கள்
டைசோடியம் எக்சா ஐதராக்சிடின்
சோடியம் சிடானேட்டு(IV) சோடியம் சிடானேட்டு–3–நீர் சோடியம் வெள்ளீய(IV) ஆக்சைடு நீரேற்று | |
இனங்காட்டிகள் | |
12027-70-2 | |
பண்புகள் | |
H6Na2O6Sn | |
வாய்ப்பாட்டு எடை | 266.73 கி/மோல் |
தோற்றம் | நிறமற்ற அல்லது வெண்மை |
அடர்த்தி | 4.68 கி/செ.மீ3 |
கொதிநிலை | அறியப்படவில்லை |
தீங்குகள் | |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [1][1] |
H300 + H310 + H330 + H410 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 57 °C (135 °F; 330 K) |
Autoignition
temperature |
இல்லை |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
2132 மி.கி/கி.கி [சுண்டெலி] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
முற்கால பழைய புத்தகங்களில் சிடானேட்டுகள் என்பவை சிலசமயங்களில் எளிய ஆக்சியெதிர்மின் அயனியைக் (SnO32−) கொண்டிருக்கும் சேர்மங்களைக் குறிப்பிடவே பயன்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் இச்சேர்மத்தை சோடியம்-சிடானேட்டு-3-நீர் என்றனர். மூன்று படிக உள்நீர் கொண்ட நீரேற்று என்று பொருள்படும் வகையில் Na2SnO3•3H2O என்ற கட்டமைப்பு வாய்ப்பாட்டால் குறிப்பிட்டனர் [1]. நீரிலி வடிவ சோடியம் சிடானெட்டு Na2SnO3 ஒரு தனித்த சேர்மமாகவே கருதப்பட்டு சிஏஎசு எண் 12058-66-1 என்று வழங்கப்பட்டுள்ளது [3] 12058-66-1 ,. மேலும், தனித்த பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் பராமரிக்கப்படுகிறது [4].
தனிமநிலை வெள்ளீயத்தை பொருத்தமான உலோக ஐதராக்சைடில் கரைத்து கார உலோக சிடானேட்டு சேர்மங்கள் தயாரிக்கப்படுகின்றன. சோடியம் சிடானேட்டு தயாரிக்க வேண்டுமெனில் பின்வரும் வினை நிகழ்கிறது :[5].
- Sn + 2 NaOH + 4 H2O → Na2[Sn(OH)6] + 2 H2
வெள்ளீயம் டையாக்சைடை ஒரு காரத்தில் கரைக்கும்போதும் இதைப்போன்ற ஒரு வினையே நிகழ்கிறது.
- SnO2 + 2 NaOH + 2 H2O → Na2[Sn(OH)6]
வெள்ளீயம் டையாக்சைடை சோடியம் கார்பனேட்டுடன் சேர்த்து கார்பனோராக்சைடு/கார்பனீராக்சைடு சுழலில் வறுத்தால் நீரிலி வடிவ சோடியம் சிடானெட்டு உருவாகிறது :[6].
- SnO2 + Na2CO3 → Na2SnO3 + CO2
எக்சாகுளோரோசிடானெட்டு எதிர்மின் அயனி ( [SnCl6]2−) போன்ற பிற சிடானேட்டுகள் போல இந்த எதிர்மின் அயனி எண்முக வடிவிலான ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். Sn—O பிணைப்பின் பிணைப்புத் தூரம் 2.071 Å ஆகும் [7].
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Material Safety Data Sheet – sodium stannate trihydrate MSDS". Science Lab. 21 May 2013. Archived from the original on 1 June 2012. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
- ↑ Clark, John D. (1972). Ignition! An Informal History of Liquid Rocket Propellants. Rutgers University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0813507251.
- ↑ National Center for Biotechnology Information (2017). "Sodium Stannate". பப்கெம். பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
- ↑ "Sodium Stannate MSDS" (PDF). Santa Cruz Biotechnology. 14 June 2011. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017.
- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0750633654.
- ↑ Zhang, Yuanbo; Su, Zijian; Liu, Bingbing; You, Zhixiong; Yang, Guang; Li, Guanghui; Jiang, Tao (2014). "Sodium stannate preparation from stannic oxide by a novel soda roasting–leaching process". Hydrometallurgy 146: 82–88. doi:10.1016/j.hydromet.2014.03.008.
- ↑ Jacobs, Herbert; Stahl, Rainer (2000). "Neubestimmung der Kristallstrukturen der Hexahydroxometallate Na2Sn(OH)6, K2Sn(OH)6 und K2Pb(OH)6" (in German). Z. Anorg. Allg. Chem. 626 (9): 1863–1866. doi:10.1002/1521-3749(200009)626:9<1863::AID-ZAAC1863>3.0.CO;2-M.