சோபியா அஷ்ரப்

சோபியா அஷ்ரப் (Sofia Ashraf) என்பவர் இந்திய ராப் இசைப் பாடகர் ஆவார். போபால் விஷக் கழிவுகள், கொடைக்கானல் பாதரசக் கழிவுகள் உள்ளிட்ட சமூகப் பிரச்சனைகளைப் பேசுகிற ஆக்கங்கள் இவருடையவை. சோபியா ஓகில்வி & மேதர் என்ற பன்னாட்டு விளம்பர நிறுவனத்தில் படைப்பூக்க மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தவர்.[1]

பிறப்பும் வளர்ப்பும்

தொகு

சோபியா அஷ்ரப் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.

பணிகளும் படைப்பும்

தொகு

"விடாது கொடைக்கானல்" பாடல்

தொகு

ஜூலை 2015-இல் இவர் வெளியிட்ட "விடாது கொடைக்கானல்" (Kodaikanal Won’t) என்ற இசைப்பாடல் மிகுந்த கவனம் பெற்றது. நிக்கி மினாஜின் புகழ்பெற்ற அனகோண்டா பாடலைப் பகடிசெய்து எடுக்கப்பட்ட இந்தப் பாடல் யுனிலிவர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலரே உடனடியாகப் பதிலளிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தியது. கொடைக்கானலில் செயல்பட்டு வந்த, யுனிலிவர் நிறுவனத்துக்குச் சொந்தமான வெப்பமானி தயாரிக்கும் ஆலையின் பாதரசக்கழிவு பிரச்சனை குறித்த உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.[2]

யுனிலிவர் குழுமத்தின் இந்தியத் துணைநிறுவனமான இந்துஸ்தான் யுனிலிவருக்குச் சொந்தமான அந்த ஆலை கொடைக்கானலில் 1983-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அந்நிறுவனம் போதிய பாதுகாப்பு உபகரணங்களின்றி வெறும் கையால் பாதரசத்தைக் கையாளுவது உட்பட பல ஆபத்தான பணிகளை தன் ஊழியர்களை மேற்கொள்ள வைத்ததாகவும், அதனால் அவர்கள் பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும், உயிரிழப்புக்கும் ஆளாகி வந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளையும், போராட்டங்களையும் தொடர்ந்து 2001-ம் ஆண்டு இழுத்து மூடப்பட்டது. மூடப்பட்ட தொழிற்சாலையில் இருந்த 50 டன் பாதரச கழிவுகள் கொடைக்கானல் நட்சத்திர வடிவ ஏரி, பேரிஜம் ஏரி போன்ற நீர்நிலைகளிலும், வனப்பகுதிகளிலும் கொட்டப்பட்டுள்ளதாகவும், ஆலை வளாகத்திலும் பாதரச கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் நீடித்துவரும் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய இழப்பீடு வழங்கக் கோரி, லண்டனில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது[3]. இப்பிரச்சனை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சூழலியாலாளர் நித்தியானந்த் ஜெயராமன் உள்ளிட்டவர்கள் செயலாற்றும் அரசுசாரா தொண்டு நிறுவனமான 'வெட்டிவேர்' கூட்டமைப்பின் சார்பில் "விடாது கொடைக்கானல்" பாடல் ஒரே நாளில் படமாக்கப்பட்டது.[2].

போபால் விசவாயு பிரச்சனை

தொகு

2008-இல் "டவ்-வுக்காக வேலை செய்யாதீர்கள்" (“Don’t Work for Dow”) என்ற பாடலைப் பாடினார். அப்பாடல் 1984ல் ஏற்பட்ட போபால் விசவாயு நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு குறித்த டவ் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் நிலைப்பாட்டைச் சாடுகின்ற பாடலாகும். அதில் பர்தா அணிந்து ராப் வடிவில் பாடியிருந்ததால் "பர்தா பாடகி" (burqa rapper) என அறியப்படலானார்.[4]

திரைப்படங்களில்

தொகு

மரியான் படத்தில் வரும் 'சோனாப்பரியா' பாடல், இனிமே இப்படித்தான் படத்தில் வரும் 'அட அத்தனை அழகையும் ஒண்ணாக்கி' உள்ளிட்ட திரைப்படப் பாடல்களில் பங்கேற்றிருக்கிறார் [5][6].

ஹிப் ஹாப் தமிழன் குழுவின் "கிளப்புல, மப்புல" பாடல் பெண்களை மட்டுமல்லாது ராப் இசையையுமே இழிவுபடுத்துவதாக உள்ளதென்று கூறி அதற்குப் போட்டியாக தனது "பீட்டர் காபி" இசைக்குழு மூலம் ஒரு வலைதளப் போராட்ட காணொளித் தொகுப்பை வெளியிட்டார்[7].

மேற்கோள்கள்

தொகு
  1. Balakrishnan, Ravi (4 August 2015). "O&M ex-employee Sofia Ashraf takes on Unilever's Kodaikanal plant for alleged "environment pollution"". The Economic Times. http://economictimes.indiatimes.com/industry/services/advertising/om-ex-employee-sofia-ashraf-takes-on-unilevers-kodaikanal-plant-for-alleged-environment-pollution/articleshow/48337436.cms. பார்த்த நாள்: 4 August 2015. 
  2. 2.0 2.1 "Indian rapper 'overwhelmed' by success of protest song against Unilever". தி கார்டியன். 07 ஆகஸ்ட் 2015. பார்க்கப்பட்ட நாள் 10 ஆகஸ்ட் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  3. "கொடைக்கானலைக் காப்பாற்ற ஒரு இசைப்புரட்சி: வைரல் வீடியோ". மாலை மலர். 2015-08-03. பார்க்கப்பட்ட நாள் 2015-08-10. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Robert Mackey (31 July 2015). "Indian Rapper Calls Out Unilever to a Nicki Minaj Beat". New York Times (Dow Jones Company). http://www.nytimes.com/2015/08/01/world/asia/indian-rapper-calls-out-unilever-to-a-nicki-minaj-beat.html?_r=0. பார்த்த நாள்: 9 August 2015. 
  5. "Mariyaan - Audio Review". பார்க்கப்பட்ட நாள் 2015-08-10.
  6. "athana azhagayum song lyrics". Archived from the original on 2015-10-21. பார்க்கப்பட்ட நாள் 2015-08-10.
  7. "Trouble in the club". பார்க்கப்பட்ட நாள் 2015-08-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோபியா_அஷ்ரப்&oldid=3613276" இலிருந்து மீள்விக்கப்பட்டது