சோமவாரப்பேட்டை

சோமவாரப்பேட்டை (கன்னடத்தில் சோமவாரப்பேட்டெ) என்னும் நகரம், இந்திய மாநிலமான கருநாடகத்தின் குடகு மாவட்டத்தில் உள்ளது. இது சோமவாரப்பேட்டை வட்டத்தின் தலைநகராகும்.

சோமவாரப்பேட்டை
ಸೋಮವಾರಪೇಟೆ
Somawarapete, Somwarpet
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்குடகு மாவட்டம்
ஏற்றம்1,027 m (3,369 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்6,729
மொழிகள்
 • அலுவல்கன்னடம்
 • மற்றவைஅரேபாஷே, துளு, குடகு மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுKA
இணையதளம்www.somwarpettown.gov.in

இங்கு காப்பிப் பயிர் வளர்க்கப்படுகிறது. ஏலக்காய், குடைமிளகாய், ஆரஞ்சு, இஞ்சி ஆகியவையும் விளைகின்றன.

மக்கள் தொகு

2001ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில்,[1] இங்கு 7218 மக்கள் வசிப்பது கண்டறியப்பட்டது. இவர்களில் பாதி பேர் ஆண்கள், மீதி பாதி பேர் பெண்கள்.

மொழிகள் தொகு

இங்குள்ள மக்கள் கன்னடம், குடகு மொழி, அரேபாஷே, துளு, பியரி மொழி, கொங்கணி ஆகிய மொழிகளில் பேசுகின்றனர். பலருக்கு ஆங்கிலமும் தெரிந்திருக்கிறது.

சான்றுகள் தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோமவாரப்பேட்டை&oldid=3806391" இலிருந்து மீள்விக்கப்பட்டது