சோமி தாஸ்
சோமி ரஞ்சன் தாஸ் (Shomie Ranjan Das) (பிறப்பு 28 ஆகத்து 1935) ஓர் இந்தியக் கல்வியாளர் ஆவார். தூன் பள்ளியின் முன்னாள் மாணவரான இவர் இந்தியாவின் தூன் பள்ளி, மாயோ கல்லூரி, சானவார் லாரன்ஸ் பள்ளி மூன்று சிறந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியராக பணியாற்றியுள்ளார். இவர் முன்பு இசுக்கொட்லாந்தின் கார்டன்ஸ்டவுன் பள்ளியில் கற்பித்தார்.[1] [2] இவர் ஐதராபாத்து, விசாகப்பட்டினம், மொகாலி, பெங்களூர் ஆகிய இந்திய நகரங்களில் ஓக்ரிட்ஜ் சர்வதேசப் பள்ளியை நிறுவினார்.
சோமி தாஸ் | |
---|---|
படித்த கல்வி நிறுவனங்கள் | தூன் பள்ளி |
உறவினர்கள் | சதீஷ் ரஞ்சன் தாஸ் (தாத்தா) |
தொழில்
தொகுதூன் பள்ளியில் தனது முந்தைய கல்விக்குப் பிறகு, இவர் கொல்கத்தா கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம், கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தின் செயின்ட் சேவியர் கல்லூரி ஆகியவற்றில் பட்டம் பெற்றார். கார்டன்ஸ்டவுன் பள்ளியில் பணிபுரிந்த பிறகு, 1969 முதல் 1974 வரை மாயோ கல்லூரியின் முதல்வராக இருந்த இவர் வேல்சு இளவரசர் சார்லஸுக்கு[3] [4] கற்பித்தார். இவர் 1974இல் சானவார் லாரன்ஸ் பள்ளியின் தலைமையாசிரியராகப் பண்யேற்று 1988 வரை பதவியில் இருந்தார்.
இவர் 1988 முதல் 1995 வரை தூன் பள்ளியின் தலைமையாசிரியராகப் பணியாற்றினார்.[5] இவருக்குப் பிறகு ஜான் மேசன் என்பவர் பதவியேற்றார். இவர் மாயோ கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். அங்கு இவர் எல்லா காலத்திலும் மிகச்சிறந்த முதல்வர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார். தூன் பள்ளியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவர் ஒரு கல்வி ஆலோசகரானார். மேலும் இவர் நாடெங்கிலும் கிட்டத்தட்ட 76 பள்ளிகளுக்கு கல்வியில் தனது ஆலோசனையை வழங்கி வருகிறார். நாடு முழுவதும். கொல்கத்தாவில் அடமாஸ் சர்வதேசப் பள்ளியை அமைப்பதில் இவர் முக்கிய பங்கு வகிக்கிறார். இவர் தற்போது ஓக்ரிட்ஜ் சர்வதேசப் பள்ளியின் தலைவராக உள்ளார்.
இவர் இந்திய வழக்கறிஞரும் சமூக சீர்திருத்தவாதியுமான சதீஷ் ரஞ்சன் தாஸின் பேரன் ஆவார். [6]
சான்றுகள்
தொகு- ↑ Setting up a school may cost crores - Times Of India
- ↑ "The Aryan International International School: Will to Excel". Archived from the original on 2018-05-19. பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.
- ↑ Old-school values, modern charm - Hindustan Times பரணிடப்பட்டது 7 திசம்பர் 2012 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "Archived copy". Archived from the original on 18 January 2012. பார்க்கப்பட்ட நாள் 2012-06-09.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ [1] பரணிடப்பட்டது 14 நவம்பர் 2011 at the வந்தவழி இயந்திரம்
- ↑ The Dosco Record (1987), p.115, The Doon School Sixty Years On (1996), p.440