சதீஷ் ரஞ்சன் தாஸ்

இந்திய வழக்கறிஞர்

சதீஷ் ரஞ்சன் தாஸ் (Satish Ranjan Das)(1870-1928) வங்காளத்தின் தலைமை வழக்கறிஞராக இருந்தார். பின்னர் இந்தியத் தலைமை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினராக இருந்தார். இவர் சில சமயங்களில் வங்கத்தின் இந்திய சிறுவர் சாரணர் சங்கம், நல்ல கூட்டமைப்பின் நிர்வாகக் குழு, வங்காளத்தின் சீர்திருத்த இயக்கமான பிரம்ம சமாஜம் ஆகியவற்றின் முக்கிய உறுப்பினராக இருந்தார். தாஸ் ஒரு மிதமான இந்திய தேசியவாதிகளின் குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். இது இந்தியாவில் "பிரிட்டிசு பாணி" பொதுப் பள்ளியை உருவாக்க முயன்றது. இறுதியில் இவரது மரணத்திற்குப் பிறகு, தூன் பள்ளியை உருவாக்கவும் வழிவகுத்தது.

சதீஷ் ரஞ்சன் தாஸ்
படிமம்:SRDas.jpg
சதீஷ் ரஞ்சன் தாஸின் ஓவியம்
பிறப்புசூன் 27, 1870(1870-06-27)
நைகாத்தி, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு26 அக்டோபர் 1928(1928-10-26) (அகவை 58)
கொல்கத்தா, வங்காள மாகாணம் , பிரித்தானிய இந்தியா
பணிகுற்றவியல் நடுவர், எழுத்தாளர், விரிவுரையாளர்
பெற்றோர்துர்கா மோகன் தாஸ்
உறவினர்கள்சித்தரஞ்சன் தாஸ்
சுதி ரஞ்சன் தாஸ்
அதுல் பிரசாத் சென்

ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும்தொகு

இங்கிலாந்தில் பள்ளிக் கல்வியையும் பல்கலைக்கழகக் கல்வியையும் முடித்த பிறகு, தாஸ் 1894இல் இந்தியா திரும்பினார். "தேசிய இந்திய அடையாளத்திற்கான வளர்ந்து வரும் தேடலில்" இவர் பங்கேற்றதில் இருந்து தூன் பள்ளியின் யோசனை உருவானது.[1]

பள்ளி திறப்பதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே இவர் இறந்த போதிலும், இவரும் இவரது முறைசாரா குழுவில் உள்ள மற்றவர்களும் 1920களில் அதற்காக பரப்புரை செய்தனர். இவர்கள் பிரிட்டிசு பொதுப் பள்ளியைப் போன்று வடிவமைக்கப்பட்ட ஒரு இந்தியப் பள்ளியை கற்பனை செய்தனர். இது பிரித்தானியப் பேரரசு முழுவதிலும் பொறுப்புள்ள மற்றும் வளமான நிர்வாகிகளாக இளைஞர்களை திறம்பட பயிற்றுவித்ததாக இவர் உணர்ந்தார். ஆனால் பிரித்தானியப் பள்ளிகளுக்கு மாறாக, தூன் பள்ளியின் நிறுவனர்கள் ஒரு இந்தியப் பள்ளி பிரிவினைவாதமாகவும் இந்திய அபிலாசைகளுக்கு பதிலளிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினர். இவர்கள் தூன் பள்ளியை ஒரு புதிய தலைமுறை இந்திய தலைவர்களுக்கான பயிற்சி மைதானமாக கருதினர். இங்கு படிக்கும் மாணவர்கள் சுதந்திரத்தைத் தொடர்ந்து நிர்வாகம் மற்றும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்வார்கள் எனக் கருதினர்.

பிரிட்டிசு பொதுப் பள்ளியின் மாதிரியை நகலெடுப்பதன் மூலம், இந்தியர்கள் தங்கள் தேசிய அல்லது கலாச்சார அடையாளத்தை விட்டுக்கொடுக்காமல் பிரிட்டிசுகாரர்களுடன் தங்கள் சொந்த நிபந்தனைகளில் போட்டியிட முடியும் என்பதைக் காட்ட நிறுவனர்கள் முயன்றனர். இது அக்காலத்தின் பல இந்தியத் தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகளின் கருத்துக்களைப் பிரதிபலித்தது. ஆனால் நிச்சயமாக எல்லாமே இல்லை. சிறப்பம்சமாக, ஜவகர்லால் நேரு பள்ளியை உருவாக்கியதை வரவேற்றார். ஆனால் காந்திக்கு இதனுடன் எந்த தொடர்பும் இல்லை. [2]

1922 இல், இவர் வங்காளத்தின் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.[3] 1927இல், இவர் இந்தியத் தலைமை ஆளுநர் இர்வின் பிரபுவின் நிர்வாகக் குழுவில் உறுப்பினரானார் .

சொந்த வாழ்க்கைதொகு

இவர் சமூக சீர்திருத்தவாதியான துர்கா மோகன் தாஸுக்கு 1870இல் பிறந்தார். இவர் தற்போதைய வங்காளதேசத்தின் டாக்காவின் விக்ராம்பூர் தெலிர்பாக் என்ற வைத்யா தாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் சித்தரஞ்சன் தாஸ், சுதி ரஞ்சன் தாஸ் (இந்தியாவின் தலைமை நீதிபதி) ஆகியோரின் உறவினர் ஆவார். கொல்கத்தாவில் கோகலே நினைவுப் பள்ளியை நிறுவிய சரளா ராய், விஞ்ஞானி ஜகதீஷ் சந்திர போஸின் மனைவி அபலா போஸ் ஆகியோர் இவரது இரண்டு சகோதரிகள் ஆவர் .

தாஸ் போனலதா தேவி என்பவரை மணந்தார். இவரது பேரன்களில் ஒருவரான சோமி தாஸ், தூன் பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார்.

இறப்புதொகு

1928 கோடையில், இவர் இங்கிலாந்திலுள்ள பள்ளிகளுக்குச் சென்று தனது திட்டத்தை நன்கு அறியப்பட்ட கல்வியாளர்களுடன் விவாதித்தார். அந்த ஆண்டின் கோடையின் இறுதியில், இவர் இந்தியாவுக்குத் திரும்பி, சிம்லாவுக்குச் சென்று தனது பணிகளைத் தொடங்கினார். பின்னர் உடல்நிலை சரியில்லாமல் 26 அக்டோபர் 1928 அன்று கொல்கத்தாவில் இறந்தார்.

சான்றுகள்தொகு

  1. "Origins & History". The DOON School. மூல முகவரியிலிருந்து 23 May 2009 அன்று பரணிடப்பட்டது.
  2. Sanjay Srivastava (1998). Constructing Post-colonial India: National Character and the Doon School. Routledge. பக். 21–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-415-17856-3. https://archive.org/details/constructingpost0000sriv. 
  3. The Edinburgh Gazette. 7 November 1922. Page 701

மேலும் படிக்கதொகு

  • Chopra, Radhika & Jeffery, Patricia M. (Eds.) (2005). Educational Regimes in Contemporary India. Sage Publications Inc. ISBN 0-7619-3349-2
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதீஷ்_ரஞ்சன்_தாஸ்&oldid=3296771" இருந்து மீள்விக்கப்பட்டது