சுதி ரஞ்சன் தாஸ்

இந்தியாவின் 5வது தலைமை நீதிபதி

சுதி ரஞ்சன் தாஸ் (Sudhi Ranjan Das) (1 அக்டோபர் 1894 – 18 செப்டம்பர் 1977) இந்தியாவின் 5வது தலைமை நீதிபதியாக இருந்தார். இவர் 1 பிப்ரவரி 1956 முதல் 30 செப்டம்பர் 1959 வரை பணியாற்றினார். இவர் தி ஸ்டேட்ஸ்மேன் என்ற ஆங்கில மொழி செய்தித்தாளின் தலைவராகவும் பணியாற்றினார்.[2]

சுதி ரஞ்சன் தாஸ்
சுதி ரஞ்சன் தாஸ், இந்தியத் தலைமை நீதிபதி
5வது இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
1 பிப்ரவரி 1956 – 30 செப்டம்பர் 1959
நியமிப்புஇராசேந்திர பிரசாத்
முன்னையவர்பிஜன் குமார் முகர்ஜி
பின்னவர்புவனேசுவர் பிரசாத் சின்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1894-10-01)1 அக்டோபர் 1894
கொல்கத்தா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா[1]
இறப்பு18 செப்டம்பர் 1977(1977-09-18) (அகவை 82)
முன்னாள் கல்லூரிகொல்கத்தா பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி, பாத பாவானா

சுய சரிதை

தொகு

சுதி ரஞ்சன் தாஸ் கொல்கத்தாவில் தெலிர்பாகின் முக்கிய வைத்ய தாஸ் குடும்பத்தில் இராக்கல் சந்திர தாஸ் -வினோதினி தாஸ் ஆகியோருக்கு பிறந்தார்.

கல்வி

தொகு

இவர் சாந்திநிகேதனின் பாத பாவனா பள்ளியில் பயின்றார். அங்கு இவர் இரவீந்திரநாத் தாகூரின் முதல் நான்கு மாணவர்களில் ஒருவராக இருந்தார். [2] இசுகாட்டிய தேவாலயக் கல்லூரியில் இடைநிலைத் தேர்வுகளை முடித்த பிறகு, இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்துடன் இணைந்த வங்காபாசி கல்லூரிக்குச் சென்று, பட்டம் பெற்றார். மேலும் இலண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சட்டத்தைப் படிக்கத் தொடங்கிய இவர் முதல் வகுப்பு மரியாதையுடன் பட்டம் பெற்றார். இவர் 1918இல் இலண்டனின் கிரேஸ் இன்னில் உள்ள வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு அழைக்கப்பட்டார். [2] [3] [4]

நீதித்துறை வாழ்க்கை

தொகு

இவர் 1942 இல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உயர்த்தப்பட்டார். 1944இல் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் துணை நீதிபதியானார். இவர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1949 முதல் 1950 வரை பணியாற்றினார்.

1950இல் புதிய அரசியலமைப்பு தொடங்கப்படுவதற்கு முன்பு இவர் இந்தியாவின் கூட்டாட்சி நீதிமன்றம்/உச்ச நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டார். இவர் மூன்று வருடங்களுக்கு மேல் நாட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கும் முன் இந்தியாவின் இரண்டு முறை தலைமை நீதிபதியாக பதவி வகித்தார். இவர் செப்டம்பர் 30, 1959 அன்று ஓய்வு பெற்றார்.

குடும்ப வாழ்க்கை

தொகு

சுதி ரஞ்சன் தாஸ் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியான எஸ். பி. மஜும்தாரின் மகள் சுவப்னா மஜும்தாரை மணந்தார். இவர்களுக்கு வான்படை தளபதி சுரஞ்சன் தாஸ், சுக்ரித் ரஞ்சன் தாஸ் என்ற இரண்டு மகன்களும், அஞ்சனா என்ற ஒரு மகளும் பிறந்தனர். அஞ்சனா பின்னர் மத்திய சட்ட அமைச்சரான இவரது இளைய வழக்கறிஞர் அசோக் குமார் சென்னை மணந்தார். இவரது குழந்தைகள் அனைவருக்கும் இரவீந்திரநாத் தாகூர் பெயரிட்டார்.

சித்தரஞ்சன் தாஸ், சரளா ராய், அபலா போஸ், சதீஷ் ரஞ்சன் தாஸ் ஆகியோர் இவரது உறவினர்கள்.

1, சப்தர்ஜங் சாலை

தொகு

இந்தியாவின் தலைமை நீதிபதியான இவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது இல்லமாக பயன்படுத்திய 1, சப்தர்ஜங் சாலையில் உள்ள வீட்டில் முன்பு வசித்து வந்தார். இந்த மாளிகை 1984இல் பிரதமர் திருமதி இந்திரா காந்தியின் படுகொலைக்கு சாட்சியாக இருந்தது. இது இப்போது ஒரு அருங்காட்சியகமாக இருக்கிறது.

சான்றுகள்

தொகு
  1. "Sudhi Ranjan Das" (in en). Journal of the Indian Law Institute (The Indian Law Institute) II (2–3): 154–156. January-June 1960. http://14.139.60.114:8080/jspui/bitstream/123456789/14903/1/017_Sudhi%20Ranjan%20Das%20%28154-156%29.pdf. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 2.2 Biography on Supreme Court of India's NIC webpage
  3. Some Alumni of Scottish Church College in 175th Year Commemoration Volume.
  4. Sen, Asit.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுதி_ரஞ்சன்_தாஸ்&oldid=3347866" இலிருந்து மீள்விக்கப்பட்டது