சௌரவ் சுமன்

சௌரவ் சுமன் (பிறப்பு) இந்தியாவைச் சேர்ந்த வேளாண் ஆராய்ச்சியாளர் ஆவார். இவருக்கு நா சக்தி விருது வழங்கப்பட்டது. பீகாரில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை இவர் வழிநடத்துகிறார். மகிசாசுர தியாக தின கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் ஈடுபட்டுள்ளார்.

Saurabh Suman
தேசியம் இந்தியா
கல்விஅலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம்
பணிவிவசாய ஆராய்ச்சியாளர்
அறியப்படுவதுநாரி சக்தி விருது

வாழ்க்கை

தொகு

1980ஆம் ஆண்டில் இவரது தந்தை காமேஷ்வர் சிங் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கருதப்பட்டு, பின்னர் மாற்றப்பட்டது. [1]

இவர் அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில்[2] விவசாய அறிவியலைப் படித்தார். ஆனால் பின்னர் சமூகப் பணிகளில் ஈடுபட முடிவு செய்தார். [3]

இவர், தன்னார்வ தொண்டு நிறுவனமான சேவா அமைப்பின் செயலாளரானார். இந்த அமைப்பு நவாதா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் கவனம் செலுத்துகிறது, ஆனால் பீகார் மீதும் ஆர்வமாக உள்ளது. இவர் சேவா அமைப்பின் மூலம் பெண்களுக்கான தகவல் தொழில்நுட்பத்தையும், செல்லிடத் தொலைபேசியில் படிப்பதற்காகவும் ஏற்பாடு செய்தார். மேலும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்புக்கான (இஸ்ரோ) விவசாய ஆராய்ச்சியில் பெண்கள் பங்கேற்கவும் ஏற்பாடு செய்தார். [4]

மகிசாசுர தியாக தின கொண்டாட்டங்கள் ஒரு சர்ச்சைக்குரிய கொண்டாட்டமாக இருந்தாலும்,[5] அதை ஏற்பாடு செய்வதில் இவர் ஈடுபட்டுள்ளார். [2]

விருது

தொகு

2016ஆம் ஆண்டில் இந்தியாவில் பெண்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான நாரி சக்தி விருதினை குடியரசுத் தலைவர் இல்லத்தில் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜி வழங்கினார். [6] பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்ததுடன், அத்துறையின் அமைச்சர் மேனகா காந்தியும் பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டனர். [2]

சர்ச்சை

தொகு

2018ஆம் ஆண்டில் கைலாஷ் பஸ்வான் என்பவரை கொலை செய்ய முயன்றதாக இவர் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் இதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. [3] இவர், தான் இதில் சிக்கவைக்கப்பட்டதாகவும், பஸ்வானைக் கொல்ல தான் எவருக்கும் நிலமும் பணமும் கொடுக்கவில்லை என்றும் கூறி இவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். [7]

மேற்கோள்கள்

தொகு
  1. Ch, Sanjeev; चन्दन, An संजीव (2016-04-16). "'Mahishasur's daughter' gets award from President". Forward Press (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  2. 2.0 2.1 2.2 Ch, Sanjeev; चन्दन, An संजीव (2016-04-16). "'Mahishasur's daughter' gets award from President". Forward Press (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  3. 3.0 3.1 "Woman social worker awarded by President wanted by Bihar cops for ordering an RJD leader Kailash Paswan's murder". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  4. "President Pranab Mukherjee presented 2015 Nari Shakti awards". Jagranjosh.com. 2016-03-09. பார்க்கப்பட்ட நாள் 2020-07-06.
  5. link, Get; Facebook; Twitter; Pinterest; Email; Apps, Other. "Mahishasur martyrdom day at JNU "misuse" of freedom of speech? HRD minister Smriti Irani triggers hornet's nest". பார்க்கப்பட்ட நாள் 2020-07-06. {{cite web}}: |last2= has generic name (help)
  6. Mar 8, Himanshi Dhawan |; 2016; Ist, 21:59. "Nari Shakti awards for women achievers | Delhi News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-06. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
  7. Jul 17, TNN |; 2018; Ist, 01:00. "NGO secretary surrenders in neta's murder case | Patna News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-06. {{cite web}}: |last2= has numeric name (help)CS1 maint: numeric names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌரவ்_சுமன்&oldid=3131086" இலிருந்து மீள்விக்கப்பட்டது