ச. ஜெயச்சந்திரன்
சந்திரசேகரன் கர்த்தா ஜெயச்சந்திரன் (C. Jayachandran; സി. ജയചന്ദ്രൻ; 28 மே 1972 இல் பிறந்தவர்) ஓர் இந்திய நீதிபதி ஆவார். இவர் தற்போது கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பணியாற்றுகிறார். இந்திய மாநிலமான கேரளா மற்றும் இலட்சத்தீவு உச்ச நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளத்தில், கொச்சியில் உள்ளது.[1] ஜெயச்சந்திரன் 20 அக்டோபர் 2021 முதல் உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் பிப்ரவரி 2011-ல் கூடுதல் மாவட்ட நீதிபதியாக நேரடியாக நீதித்துறை பணியில் சேர்ந்தார். மேலும் கொல்லம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயத்தில் முதன்மை மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார்.[2]
நீதிபதி ச. ஜெயச்சந்திரன் | |
---|---|
கேரள உயர் நீதிமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 20 அக்டோபர் 2021 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சந்திரசேகரன் கர்த்தா ஜெயச்சந்திரன் 28 மே 1972 |
முன்னாள் கல்லூரி | கேரள சட்ட அகாதமி மகாத்மா காந்தி பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | High Court of Kerala |
கேரள சட்ட அகாதமியின் சட்டக் கல்லூரியில் இளங்கலைச் சட்டம் மற்றும் கேரளாவில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் முதுகலைச் சட்டக் கல்வியினை முடித்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Official".
- ↑ "Four judicial officers appointed as HC judges". The Hindu. 13 October 2021.