ஜகத் கோசைன்

ஜகத் கோசைன் (Jagat Gosain) இறப்பு: 1619 ஏப்ரல் 19) என்பது 'உலக எஜமானி' என்று பொருள்படும். [1] முகலாய பேரரசின் பேரரசியாகவும் முகலாய பேரரசர் ஜஹாங்கிரின் மனைவியாகவும், இவரது வாரிசான ஐந்தாவது முகலாய பேரரசர் ஷாஜகானின் தாயாகவும் இருந்தார். [2] [3] இவர் ஜோத்பாய் (ஜோத்பூரின் இளவரசி) [4] [5] என்றும் அழைக்கப்படுகிறார். மேலும் இவரது மரணத்திற்குப் பிறகு 'பில்கிஸ் மக்கானி' என்றத் தலைப்பு வழங்கப்பட்டது. [6] [7] ஐரோப்பிய வரலாற்றாசிரியர்களால் "ஜோதா பாய்" என்று தவறாக பெயரிடப்பட்ட மரியம்-உஸ்-ஜமானியுடன் இவரைக் குழப்பிக்கொள்ளக்கூடாது. [8]

ஜகத் கோசைன்
முகலாயப் பேரரசரின் மனைவி
ஆட்சிக்காலம்1605 நவம்பர் 3 – 1619 ஏப்ரல் 19
பிறப்புமனாவதி பைஜி லால் சாஹிபா
1573 மே 13
சோத்பூர், ராஜஸ்தான்
இறப்பு1619 ஏப்ரல் 19
ஆக்ரா, முகலாயப் பேரரசு
புதைத்த இடம்
சுகப்பூரா, ஆக்ரா
துணைவர்ஜஹாங்கீர்
குழந்தைகளின்
பெயர்கள்
மேகம் சுல்தான்
ஷாஜகான்
இசாத்-உன்-நிசா
அரசமரபுரத்தோர் (பிறந்த வீடு)
தைமூர் (திருமணம்)
தந்தைஇராஜா உதய் சிங்
தாய்இராணி மான்ரங் தேவி
மதம்இந்து சமயம்

பிறப்பால், இவர் மார்வாரின் (இன்றைய ஜோத்பூர்) ராஜபுத்திர இளவரசி ஆவார். மேலும் ராஜா உதய் சிங்கின் மகளாவார். (மோட்டா ராஜா என்று பிரபலமாக அறியப்படுகிறார்) மார்வாரின் மற்றொரு ரத்தோர் ஆட்சியாளர் மற்றும் சவாய் ராஜா சுர் சிங்கின் சகோதரியுமாவார். [9] [10]

குடும்பம்

தொகு

ஜோத் பாய் என்று மிகவும் பிரபலமாக அறியப்படும் [11] ஜோத்பூர் இளவரசி [12] ஜகத் கோசைன் ராஜபுத்திரர்களின் மேலும் மார்வாரின் (இன்றைய ஜோத்பூர்) ஆட்சியாளரான ராஜா உதய் சிங்கின் மகளுமாவார். [13] [14] உதய் சிங் பிரபலமாக மோட்டா ராஜா (கொழுத்த ராஜா) என்று அறியப்பட்டார். [15] நர்வாரைச் சேர்ந்த ராஜா அஸ்காரனின் மகள் மன்ராங் தேவி இவரது தாயாராவார். [16] [17] அஸ்காரன் தனது மாமா பார்மலுக்கு ஆதரவாக வெளியேற்றப்படுவதற்கு முன்பு சிறுது காலம் அம்பர் ராஜாவாகவும் இருந்தார். [18]

இவரது தந்தைவழி தாத்தா மால்டியோ ரத்தோர், [19] அவரது ஆட்சியின் கீழ் மார்வார் ஒரு வலுவான ராஜபுத்திர இராச்சியமாக மாறியது. அது வெளிநாட்டு ஆட்சியை எதிர்த்தது மற்றும் வடக்கு மேலாதிக்கத்திற்காக படையெடுப்பாளர்களுக்கு சவால் விடுத்தது. 1555 இல் ஹுமாயூன் வட இந்தியாவின் கட்டுப்பாட்டை மீட்டெடுத்த பிறகு மால்டியோ ரத்தோர் சுர் பேரரசு அல்லது முகலாய சாம்ராஜ்யத்துடன் கூட்டணி வைக்க மறுத்துவிட்டார். இந்தக் கொள்கையை அவரது மகனும் வாரிசுமான சந்திரசென் ரத்தோர் தொடர்ந்தார் . [20]

1562இல் மால்டியோ ரத்தோரின் மரணத்திற்குப் பிறகு, அடுத்தடுத்து ஒரு கடுமையான போர் தொடங்கியது. சந்திரசென் தலைநகர் ஜோத்பூரில் முடிசூட்டினார். அதே ஆண்டில் பேரரசர் அக்பரின் இராணுவம் மெர்டாவையும் 1563இல் தலைநகர் ஜோத்பூரையும் ஆக்கிரமித்ததால் இவரது ஆட்சி குறுகிய காலம் மட்டுமே இருந்தது. [21]

1581 சனவரியில் ராவ் சந்திரசென் இறந்த பிறகு, மார்வார் நேரடி முகலாய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1583 ஆகத்து மாதத்தில், அக்பர் மார்வார் சிம்மாசனத்தை உதய் சிங்குக்கு மீட்டெடுத்தார். அவர் தனது முன்னோர்களைப் போலல்லாமல், முகலாயர்களிடம் சமர்ப்பித்தார். பின்னர் முகலாயர் சேவையில் சேர்ந்தார். [21]

ஜஹாங்கிருடன் திருமணம்

தொகு

முகலாயர்களிடம் சமர்ப்பித்த பின்னர், உதய் சிங் தனது மகள் ஜகத் கோசைனை அக்பரின் மூத்த மகன் இளவரசர் சலீமுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். வரலாற்றாசிரியர் நார்மன் பி. ஜீக்லரின் கூற்றுப்படி, சில ராஜ்புத்திர பிரபுக்கள் தங்கள் மன்னர்கள் தங்கள் மகள்களை முகலாயப் பேரரசருடன் திருமணம் செய்து கொள்வதை விரும்பவில்லை. ஏனெனில் இது அவமானம் மற்றும் சீரழிவின் அறிகுறியாக அவர்கள் கருதினர். பிரபுக்களிடையே அதிருப்தி கல்யாண்ட ரத்தோர் தலைமையிலான கிளர்ச்சிக்கு வழிவகுத்தது. சிவானா கோட்டை முற்றுகை மற்றும் கல்யாண்ட ரத்தோரின் மரணம் ஆகியவற்றின் பின்னர் ராஜா உதய் சிங் இந்த கிளர்ச்சியை விரைவில் முடிவுக்கு கொண்டுவந்தார். [22]

ஜகத் கோசைன் 16 வயது இளவரசர் சலீமை (பின்னர் 'ஜஹாங்கிர்' என்று அழைக்கப்பட்டார்) 1586 ஜூன் 26, அன்று திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஒரு அரசியல் திருமணமாக இருந்தபோதிலும், ஜகத் தனது அழகு மற்றும் கவர்ச்சியால் மட்டுமல்ல, தனது புத்திசாலித்தனம், தைரியம் மற்றும் தன்னிச்சையான பதிலுக்காகவும் அறியப்பட்டார் . [23] 1590 ஆம் ஆண்டில், தனது முதல் குழந்தையான பேகம் சுல்தான் என்ற மகளை பெற்றெடுத்தார், அக்குழந்தை ஒரு வயதிலேயே இறந்தது. [24] 1592 ஜனவரி 5, அன்று, சலீமின் மூன்றாவது மகனைப் பெற்றெடுத்தாள், அவனுக்கு தாத்தா பேரரசர் அக்பரால் 'குர்ரம்' ("மகிழ்ச்சி") என்று பெயரிடப்பட்டது. வருங்கால பேரரசர் ஷாஜகானாக மாறவிருந்த இளவரசன், அக்பரின் விருப்பமான பேரனானான். ஜஹாங்கிரின் வார்த்தைகளில் "என் தந்தை [அக்பர்] எல்லா [என்] குழந்தைகளையும் விட அதிக கவனத்துடன் இருந்தார். . . அவர் அவனை தனது சொந்த குழந்தையாக அங்கீகரித்தார். " [11] ஷாஜகான் பிறந்த பிறகு, இவருக்கு தாஜ் பிபி என்ற தலைப்பு வழங்கப்பட்டது, அதாவது 'கிரீடம் மனைவி'.

இறப்பு

தொகு

ஜகத் கோசைன் 1619 ஏப்ரல் 19 அன்று ஆக்ராவில் காலமானார். [25] ஜஹாங்கிர்இந்த மரணத்தை இவ்வாரு சுருக்கமாகக். "கடவுளின் கருணையை அடைந்துவிட்டார்" என்று கூறினார். இவரது மரணத்திற்குப் பிறகு, ஜஹாங்கிர் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் அனைத்திலும் இவரை பில்கிஸ் மக்கானி ("தூய உறைவிடம்") [26] என்று அழைக்க உத்தரவிட்டார். [27]

குறிப்புகள்

தொகு
 1. Journal of the Asiatic Society of Bengal, Volume 57, Part 1. Asiatic Society (Kolkata, India). 1889. p. 71.
 2. Manuel, edited by Paul Christopher. Religion and Politics in a Global Society Comparative Perspectives from the Portuguese-Speaking World. Lexington Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780739176818. {{cite book}}: |first= has generic name (help)
 3. Eraly, Abraham (2007). Emperors of the Peacock Throne, The Saga of the Great Mughals. Penguin Books India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0141001432.
 4. Findly, p. 396
 5. transl. The Jahangirnama : memoirs of Jahangir, Emperor of India. Oxford Univ. Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195127188.
 6. Sharma, Sudha. The Status of Muslim Women in Medieval India. SAGE Publications India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351505679.
 7. Lal, K.S. (1988). The Mughal harem. Aditya Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788185179032.
 8. Jhala, Angma Dey. Royal Patronage, Power and Aesthetics in Princely India. Pickering & Chatto Limited.
 9. Shujauddin, Mohammad; Shujauddin, Razia (1967). The Life and Times of Noor Jahan (in ஆங்கிலம்). Lahore: Caravan Book House. p. 50.
 10. Balabanlilar, Lisa (2015). Imperial Identity in the Mughal Empire: Memory and Dynastic Politics in Early Modern South and Central Asia (in ஆங்கிலம்). I.B.Tauris. p. 10.
 11. 11.0 11.1 Findly, p. 125
 12. Tillotson, Giles (2008). Taj Mahal. Cambridge, Mass.: Harvard University Press. p. 28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674063655.
 13. transl. (1999). The Jahangirnama : memoirs of Jahangir, Emperor of India. New York [u.a.]: Oxford Univ. Press. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195127188.
 14. Chandra, Satish (2005). Medieval India : from Sultanat to the Mughals. New Delhi: Har-Anand Publications. p. 116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788124110669.
 15. Mehta, Jaswant Lal (1986). Advanced Study in the History of Medieval India. Sterling Publishers Pvt. Ltd. p. 418. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120710153.
 16. Soma Mukherjee, Royal Mughal Ladies and Their Contributions (2001), p. 128
 17. Richard Saran and Norman P. Ziegler, The Mertiyo Rathors of Merto, Rajasthan (2001), p. 45
 18. Sarkar, J. N. A History of Jaipur. Orient Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-0333-9.
 19. Lal, K.S. (1988). The Mughal harem. New Delhi: Aditya Prakashan. p. 27.
 20. Bose, Melia Belli. Royal Umbrellas of Stone: Memory, Politics, and Public Identity in Rajput Funerary Art. BRILL. p. 150.
 21. 21.0 21.1 Sarkar, Jadunath (1994). A history of Jaipur : c. 1503-1938 (Rev. and ed.). Hyderabad: Orient Longman. p. 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-250-0333-9.
 22. Ziegler, Norman P. The Mughal State, 1526–1750. Oxford University Press. p. 198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-565225-3.
 23. Findly, p. 124
 24. Moosvi, Shireen (2008). People, taxation, and trade in Mughal India. Oxford: Oxford University Press. p. 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195693157.
 25. transl.; ed.; Thackston, annot. by Wheeler M. (1999). The Jahangirnama : memoirs of Jahangir, Emperor of India. New York [u.a.]: Oxford Univ. Press. p. 300. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780195127188. {{cite book}}: |last2= has generic name (help)
 26. Findly, p. 94
 27. Findly, p. 162
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜகத்_கோசைன்&oldid=3848616" இலிருந்து மீள்விக்கப்பட்டது