ஜங்லதேசம்
வட இந்தியாவின் வரலாற்றுப் பகுதியான
| |
அமைவிடம் | வடக்கு இராசத்தான் |
ஜங்லதேசம் (Jangladesh) என்பது வட இந்தியாவில் வடக்கு, வடமேற்கு மற்றும் வடகிழக்கு இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஒரு வரலாற்றுப் பகுதியாகும். [1] [2] [3] இது இன்றைய மாவட்டங்களான பிகானேர், சூரு, கங்காநகர் மற்றும் அனுமான்காட் ஆகியவற்றை உள்ளடக்கியது. இது தெற்கில் மார்வார் மற்றும் ஜெய்சல்மேர் பகுதிகளாலும், கிழக்கில் அஜ்மீர்-மேர்வாரா பகுதியாலும் எல்லையாக இருந்தது.[4]
வரலாறு
தொகுஇராசத்தானின் வடகிழக்கு மற்றும் வடமேற்கு பகுதி, பழங்காலத்தில் ஜங்லதேசம் என்ற பெயரில் அறியப்பட்டது. ஜங்லதேசத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் பதிகளால் ஆளப்பட்டது. வடகிழக்கு மற்றும் தென்கிழக்கு ஜாட் குடியிருப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. பட்னர் பகுதி முஸ்லீம் பாட்டிகள் மற்றும் ஜோகியாக்களின் கீழ் இருந்தது. [5] [6] [7]
ஜங்லதேசத்தில் ராவ் பிகாவின் படையெடுப்பின் காரணமாக அங்கிருந்த பெரும்பாலான ஜாட் குலங்கள் ரத்தோர் மேலாதிக்கத்தை ஏற்க வேண்டியிருந்தது. பிகா 300 ராஜ்புத் வீரர்களைக் கொண்ட இராணுவத்திற்கு தலைமை தாங்கினார். மேலும், வடக்கு இராஜஸ்தானின் அனைத்து ஜாட் குலங்களையும் அடிபணியச் செய்தார். பிகாவும் ஜாட்களை பதி இராஜபுத்திரர்களிடமிருந்து காப்பாற்றினார். கோதாரா ஜாட்கள், சேவாத் ராஜ்புரோஹிட்டுகள் மற்றும் சரண்கள் பிகாவின் விசுவாசமான ஆதரவாளர்களாக இருந்தனர்.[8][4] 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள் தொகை 8,147,344 ஆகும்.
சான்றுகள்
தொகு- ↑ Qanungo, Kalika Ranjan; Kānūnago, Kālikā Rañjana (1960). Studies in Rajput History (in ஆங்கிலம்). S. Chand. p. 60.
whereas the Jats lived in the Jangal-desh (a portion of ancient Kuru-Jangal region), which covers Bikanir and some portion of the Jodhpur State.
- ↑ Singh, Karni (1974). The Relations of the House of Bikaner with the Central Powers, 1465-1949 (in ஆங்கிலம்). Munshiram Manoharlal Publishers. p. 12.
"The old name of the territories which went to constitute the Rathore principality of Bikaner, had been 'Jangal Desh'.
- ↑ Hooja, Rima (2006). A History of Rajasthan (in ஆங்கிலம்). Rupa & Company. p. 6.
In a different context, a part of the desert land now part of the administrative division of Bikaner was apparently known as 'Jangal' (also 'Jangal-desh).
- ↑ 4.0 4.1 Jibraeil. Jats: Their Role and Contribution to the Socio-Economic Life and Polity of North and North-West India. Originals.
- ↑ A History of Rajasthan. 2006.
- ↑ Jats: Their Role and Contribution to the Socio-Economic Life and Polity of North and North-West India.
- ↑ Rajasthan Through the Ages: From the earliest times to 1316 A.D. 1966.
- ↑ Kothiyal, Tanuja (2016). Nomadic Narratives: A History of Mobility and Identity in the Great Indian. Cambridge University Press. p. 78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781107080317. பார்க்கப்பட்ட நாள் 2020-09-17.