ஜமுனா சென்

இந்தியக் கலைஞர்

ஜமுனா சென் ( Jamuna Sen ) (7 அக்டோபர் 1912 - 10 பிப்ரவரி 2001) ஓர் இந்தியக் கலைஞர் ஆவார். இந்திய சூழலில் வளரும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு பாரம்பரிய கைவினைப்பொருட்கள் மற்றும் பாடிக் மற்றும் அல்பனா உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் தனது வடிவமைப்புப் பணிகளுக்காக இவர் அறியப்படுகிறார். நவீன காலத்தில் இந்தியாவில் பாட்டிக் (மெழுகினால் செய்யப்படும் வடிவமைப்பு) நடைமுறையை நிறுவுவதில் இவர் ஒரு முன்னோடியாக இருந்தார். நவீன இந்தியக் கலையின் மைய நபரான நந்தாலால் போஸின் மகளான இவர், சாந்திநிகேதனின் கலை மற்றும் அறிவுசார் சூழலில் வளர்க்கப்பட்டார். மேலும் வடிவமைப்புத் துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பையும் செய்தார்.

ஜமுனா சென்
பிறப்பு(1912-10-07)7 அக்டோபர் 1912
ஆவேலி காரக்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
(நவீன பீகார், இந்தியா)
இறப்பு10 பெப்ரவரி 2001(2001-02-10) (அகவை 88)
சாந்திநிகேதன், மேற்கு வங்காளம், இந்தியா
கல்விகலா பவனம்
அறியப்படுவதுவடிவமைப்பு, முதன்மையாக பாடிக்
வாழ்க்கைத்
துணை
கேசவ சந்திர சென்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஜமுனா சென். பீகாரின் முங்கர் மாவட்டத்தில் உள்ள ஆவேலி காரக்பூரில் நந்தாலால் போஸ் மற்றும் சுதீரா தேவி ஆகியோருக்கு மூன்றாவது குழந்தையாக 1912 இல் பிறந்தார். இவரது தந்தை நந்தாலால் போஸ் இந்தியாவில் ஒரு நவீன கலை இயக்கத்தை வளர்ப்பதில் முக்கிய நபராக இருந்தார். உண்மையில், இவர் கலைஞர்களின் குடும்பத்தில் வளர்ந்தார். இவரது மூத்த உடன்பிறப்புகள் கௌரி பஞ்சா மற்றும் பிஸ்வரூப் போஸ் இருவரும் கலைஞர்கள். முந்தையவர் சாந்திநிகேதனின் அல்போனா கலை வடிவத்தை வளர்த்து மேம்படுத்தினார். இவருக்கு கோராசந்த் போஸ் என்ற ஒரு இளைய சகோதரரும் இருந்தார். அவர் பொறியியலாளராக இருந்தார்.

 
அபனீந்திரநாத் தாகூர் வரைந்த 14 வயது ஜமுனா போஸின் உருவப்படம், 1926. புகைப்பட உதவி: சுப்ரபுத்தா & தீபா சென்

இரவீந்திரநாத் தாகூரின் அழைப்பின் பேரில், நந்தாலால் போஸ் 1921 இல் கலா பவனம் என்ற புதிய கலைப் பள்ளியின் முதல்வராகப் பொறுப்பேற்றார். அவரது பயிற்சியின் கீழும், மற்றும் இரவீந்திரநாத்தின் வழிகாட்டுதலுடனும், கலா பவனம் விரைவில் உலகின் மிக முக்கியமான கலை நிறுவனங்களில் ஒன்றாக மாறியது. சாந்திநிகேதன் அதன் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அழகியல் பாணியை உருவாக்கி ஒரு பரந்த கலாச்சார நெறியின் ஒரு பகுதியாக மாறியது. இத்தைகைய ஒரு சூழலில் இவர் வளர்ந்தார்.

குடும்பம்

தொகு

ஜமுனா 1936 இல் க்ஷிதிமோகன் சென்னின் மைத்துனரான கேசவ சந்திர சென் (செபக் சென் எனவும் அறியப்படுகிறார்) என்பவரை மணந்தார். கேசவ சந்திர சென் ஒரு மின் பொறியியலாளர். இவர்களுக்கு சுப்ரபுத்ஹா சென் என்ற ஒரு மகன் 1938 இல் பிறந்தார்.

நடனம்

தொகு

ஜமுனா சென் சிறு வயதிலிருந்தே சிறந்த நடனக் கலைஞராக விரும்பி, பாரம்பரிய நடனத்தை முறையாக கற்க விரும்பினார். ஆனால் அக்கால சமூக மரபுகள் இதைத் தடுத்தன. இருப்பினும், தாகூர் இவரது திறமையைக் கண்டறிந்து, தனது இசைக்கு நடனமாட அறிவுறுத்தினார். சாந்திநிகேதனில் தாகூரின் கீழ் உருவான நடன பாணியான இரவீந்திர-நிருத்யாவின் இந்தத் துறையில்தான் ஜமுனா சிறந்து விளங்கினார்.

1929 இல் தாகூர் ஜப்பானியத் தற்காப்புக் கலையான யயுற்சு ஆசிரியர் சின்சோ தகாகியை சாந்திநிகேதனுக்கு வருமாறு அழைத்தார். [1] சமூகக் கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட ஆசிரியருடன், ஆண்களும் பெண்களும் பண்டைய தற்காப்புக் கலையைக் கற்றுக்கொள்ள தாகூர் ஊக்குவித்தார். மேலும் ஜமுனா, தனது தோழர்களான அமிதா சென், நிவேதிதா போஸ் ஆகியோருடன் சேர்ந்து மாணவர்களில் ஒருவராக பயிற்சி பெற்றார். தாகூர் மற்றும் சாந்திநிகேதனின் முற்போக்கான சிந்தனைகளுக்கு சான்றாக, இவர்கள் கொல்கத்தாவில் உள்ள நியூ எம்பயர் அரங்கத்தில் யயுற்சு கலையை நிகழ்த்தினர். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "The Nippon-shio of Rabindranath Tagore" (in ஆங்கிலம்). 2016-07-03. பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
  2. Deepa Sen, "Shatabarshe Jamuna Sen," (in Bengali), Shreyashi, Published by Alapini Mahila Samiti, Santiniketan 2011/12
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமுனா_சென்&oldid=3885382" இலிருந்து மீள்விக்கப்பட்டது