ஜஸ்வான் இராச்சியம்
இந்த கட்டுரை சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள். (ஏற்கெனவே உள்ள பிறமொழி விக்கிப்பீடியா விக்கித்தரவுடன் இணையுங்கள்) |
ஜஸ்வான் இராச்சியம் (Jaswan), இந்தியாவின் தற்கால இமாச்சலப் பிரதேசத்தின் உனா (இமாச்சலப் பிரதேசம்)|உனா]] பகுதிகளைக் கொண்டது. இதனை ஜஸ்வால் இராஜபுத்திர குலத்தினர் ஆட்சி செய்தனர். [1]இதன் தலைநகரம் இராஜ்புரா ஆகும்.
Warning: Value not specified for "common_name" | |||||
ஜஸ்வான் இராச்சியம் | |||||
| |||||
பஞ்சாபில் ஜஸ்வான் இராச்சியத்தின் வரைபடம், ஆண்டு 1852 | |||||
தலைநகரம் | இராஜ்புரா | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்ட ஆண்டு | கிபி 1170 | |||
• | சீக்கியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. | 1849 | |||
தற்காலத்தில் அங்கம் | உனா மாவட்டம், இமாச்சலப் பிரதேசம், இந்தியா |
அமைவிடம்
தொகுசிவாலிக் மலையில் இந்த இராச்சியம் 64 கிலோ மீட்டர் நீளமும்; 8 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் தெற்கில் பஞ்சாப் சமவெளியும், மேற்கில் சிவாலிக் மலையும், வடக்கில் சிபா இராச்சியம் மற்றும் தாதார்பூர் இராச்சியம் மற்றும் கிழக்கில் காங்கரா இராச்சியம், பிலாஸ்பூர் சமஸ்தானம் எல்லைகளாகக் கொண்டது.
வரலாறு
தொகுகாங்கரா இராச்சியத்தின் அரச குலத்தினரின் இளைய பிரிவினர் 1170ல் ஜச்வான் இராச்சியத்தை நிறுவினர். 1809ல் ஜஸ்வான் இராச்சியம் சீக்கியப் பேரரசு|சீக்கியப் பேரரசுக்கு]] திறை செலுத்தும் ஒரு சிற்றரசு ஆனது. 18815ல் ஜஸ்வான் இராச்சியத்தை சீக்கியப் பேரரசில் இணைக்கப்பட்டு, ஜமீன்தார் நிலைக்கு தள்ளப்பட்டது. இரண்டாம் ஆங்கிலேய–சீக்கியர் போர் (1848-1849) முடிவில் ஜஸ்வான் இராச்சியத்தை பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.[2] ஜஸ்வான் மன்னர் உமையத் மற்றும் அவரது மகன் ஜெய் சிங்கை அல்மோராவில் வீட்டுச் சிறை வைத்தனர். 1854ல் மன்னர் மறைந்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Jerath, Ashok (1998). Dogra Legends of Art and Culture. Indus Publishing Company. pp. 20–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8173870828. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.
- ↑ Archer, William G. (1973). "Painting in Jaswan". Indian Paintings from the Punjab Hills: A Survey and History of Pahari Miniature Painting. Vol. 1: Text. Sotheby Parke Bernet (London and New York) / Oxford University Press (Delhi). pp. 221–223.
- ↑ "History of Una". National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 13 September 2019.