ஜாகூ
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
ஜாகூ கோயில்(Jakhoo) இந்தியாவிலுள்ள சிம்லாவில் அமைந்துள்ளது. இது, ஒரு பழங்கால கோயிலாகும். இக்கோயில், இந்து மத தெய்வமான அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். [1] இது, சிம்லாவில் உள்ள உயரமான சிகரமான, ஜாகூ மலையில் 2.5 km (1.6 mi) உயரத்தில் ரிட்ஜின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மேலும், கடல் மட்டத்திலிருந்து மேலே [2] 2,455 m (8,054 அடி) உயரத்தில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி அன்று ஒரு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது, 1972க்கு முன்பு, சிம்லாவிலுள்ள அன்னடேலில் இத்திருவிழா நடத்தப்பட்டது. [3]
ஜாகூ கோயில் | |
---|---|
ரிட்ஜ் சாலையிலிருந்து அனுமான் சிலையின் தோற்றம் | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
அமைவு: | ஜாகூ கோயில் பூங்கா, ஜாகூ, சிம்லா, இமாச்சலப் பிரதேசம் |
ஆள்கூறுகள்: | 31°06′04″N 77°10′55″E / 31.1011706°N 77.1818317°E |
கோயில் தகவல்கள் |
இராமாயணத்தின்படி, இலட்சுமணனை உயிர்ப்பிக்க சஞ்சீவினி மூலிகையைத் தேடும் போது அனுமன் ஓய்வெடுப்பதற்காக இந்த இடத்தில் நின்றார் என கருதப்படுகிறது. 2010 நவம்பர் 4, அன்று ஜாகூ அனுமான் கோவிலில் 108 அடி உயரமுள்ள (33 மீ) ஒரு பெரிய அனுமான் சிலை திறக்கப்பட்டது. இது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையை விட அதிக உயரமுடையதாகும். கிறிஸ்துவின் சிலை, 98 அடிகள் (30 m) அளவில் உள்ளது. ஜாகூ அனுமன் கோயிலின் கட்டுமான செலவு ரூ.1.5 கோடி ஆக மதிப்பிடப்படுகிறது. நடிகர் அபிஷேக் பச்சன் இக் கோயிலை பொது மக்களுக்காக திறந்து வைத்தார்.
இக் கோயிலுக்கு, நடைபயணம், குதிரை, மகிழுந்து அல்லது இழுவைப்பெட்டி மூலம் அணுகும் வழி உள்ளது. ஜாகூ இழுவைப்பெட்டி என்பது சிம்லாவின் மையத்திற்கு அருகிலுள்ள ஒரு புள்ளியை இக் கோயிலுடன் இணைக்கும் வான்வழி தடமாகும். இதை ஜாக்சன் சர்வதேச நிறுவனம் உருவாக்கியது. மேலும், 2017 இல், மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது. [4]
படத்தொகுப்பு
தொகு-
ஜாகூ கோயில்
-
ஜாகூ கோயில் இழுவைப் பெட்டி
-
கோயிலில் கூறப்பட்ட விரிவான கதை
-
அனுமன் சிலை
-
ஜாகூ கோவிலில் அனுமான் சிலை
-
ஜாகூ கோயில் அனுமான்
குறிப்புகள்
தொகு- ↑ Jakoo Temple பரணிடப்பட்டது 2018-04-17 at the வந்தவழி இயந்திரம் Himachal Official website.
- ↑ Jakhoo Temple பரணிடப்பட்டது 4 சூன் 2008 at the வந்தவழி இயந்திரம் Himachal Pradesh Tourism, Official website.
- ↑ "The Tribune, Chandigarh, India : Latest news, India, Punjab, Chandigarh, Haryana, Himachal, Uttarakhand, J&K, sports, cricket". www.tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் 2019-11-29.
- ↑ "Jakhu Ropeway". Jakhu Ropeway. பார்க்கப்பட்ட நாள் 6 November 2019.