ஜான் சாம்பர்சு

ஜான் தாமசு சாம்பர்சு (John Thomas Chambers [1][2][3], பிறப்பு: ஆகத்து 23, 1949) சிஸ்கோ நிறுவனத்தின் தற்போதைய செயல் தலைவரும் முன்னாள் முதன்மை செயல் அலுவலரும் ஆவார்.

ஜான் டி. சாம்பர்சு
உலக பொருளாதார மன்றத்தின் 2013ஆம் ஆண்டு சந்திப்பில் சாம்பர்சு
பிறப்புஜான் தாமசு சாம்பர்சு[1][2][3]
ஆகத்து 23, 1949 (1949-08-23) (அகவை 75)
கிளீவ்லன்ட், ஒகையோ, ஐ.அ
இருப்பிடம்லாசு ஆல்டோசு ஹில்சு, கலிபோர்னியா, ஐ.அ
படித்த கல்வி நிறுவனங்கள்மேற்கு வர்ஜீனியாப் பல்கலைக்கழகம்
இந்தியானாப் பல்கலைக்கழகம்
டியூக் பல்கலைக்கழகம்
பணிசெயல் தலைவர், சிஸ்கோ சிஸ்டம்ஸ்
ஊதியம்$21 மில்லியன் அமெரிக்க டாலர் - (2013)இல்[4]
வாழ்க்கைத்
துணை
எலைன் சாம்பர்சு
பிள்ளைகள்லிண்ட்சே சாம்பர்சு
ஜான் சாம்பர்சு
வலைத்தளம்
லிங்க்டுஇன் தன்விவரம்

இளமைக்காலம்

தொகு
 
சிஸ்கோ தலைமையகத்தில் போர்க்கேய நாட்டுத் தலைவர் அனிபா கவாக் சில்வாவுடன் சாம்பர்சும் எல்தெர் ஆன்தூனீசும்

சாம்பர்சு ஆகத்து 23, 1949இல் ஒகையோவின் கிளீவ்லாந்தில் ஜான் டியூனர் "ஜாக்"கிற்கும் சூன் சாம்பர்சுக்கும் மகனாகப் பிறந்தார்.[5] இவரது தாய் ஓர் மனநல மருத்துவர்; தந்தை மகப்பேறு மருத்துவர்.[6] இவரது குடும்பம் மேற்கு வர்ஜீனியாவின் கன்ஹா நகரில் வசித்தனர்.[7]

சாம்பர்சுக்கு ஒன்பது அகவைகள் நிறைகையில் அவருக்கு எழுத்துமயக்கம் இருப்பது கண்டறியப்பட்டது.[8][9] குணப்படுத்துபவரின் துணையுடன் இக்குறைபாட்டுடன் வாழக் கற்றுக்கொண்டார்.[7]

கல்வி

தொகு

இவர் மேற்கு வர்ஜீனியா பல்கலைக்கழகத்தில் அறிவியலிலும் வணிகம் மற்றும் சட்டத்திலும் இளங்கலைப் பட்டங்கள் பெற்றுள்ளார். இந்தியானாப் பல்கலைகழகத்தின் கெல்லி வணிகப் பள்ளியில் நிதியம் மற்றும் மேலாண்மையில் முதுகலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றுள்ளார்.[10] முன்னதாக, 1967 முதல் 1968 வரை டியூக் பல்கலைக்கழகத்தின் எட்மண்டு பொறியியல் பள்ளியிலும் படித்துள்ளார்; பட்டப்படிப்பை முடிக்கவில்லை.[11]

பணிவாழ்க்கை

தொகு

முதுகலை வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றபின்னர், தமது பணிவாழ்க்கையை தொழினுட்ப விற்பனைத் துறையில் ஐபிஎம் நிறுவனத்தில் துவங்கினார். 1976 முதல் 1983 வரை அங்கு பணி புரிந்தார். 1983இல் வாங் லாபரேட்டரீசில் சேர்ந்தார். அங்கு 1987இல் ஐக்கிய அமெரிக்க இயக்கத்திற்கு துணைத் தலைவராக முன்னேறினார். 1989இல் $2 பில்லியனாக இருந்த வாங்கின் இலாபம் 1990இல் $700 ஆக உயர்ந்தது. 1991இல், தமது 42ஆவது அகவையில் வாங் நிறுவனத்தை விட்டு விலகி சிஸ்கோவில் இணைந்தார்.[6] 1983இல் ஓர் புத்தாக்க நிறுவனமாக துவங்கிய சிஸ்கோவில் சாம்பர்சு உலகளாவிய விற்பனை மற்றும் இயக்கத் துறையில் மூத்த துணைத் தலைவராக சேர்ந்தார். [10]

 
உலக பொருளாதார மன்றத்தில் சாம்பர்சு (2007).

1990–1994 காலகட்டத்தில் மூத்த துணைத்தலைவராகவும்,1994–1995இல் செயல் துணைத் தலைவராகவும் முன்னேறினார். சனவரி 1995 முதல் முதன்மை செயல் அலுவலராகப் பொறுப்பேற்றார். இவரது பதவிக்காலத்தில் நிறுவனம் $70 மில்லியன் ஆண்டு வருமானத்திலிருந்து தற்போதைய வருமானமான $46 பில்லியனுக்கு முன்னேறியுள்ளது.[12] நவம்பர் 2006இல் முதன்மை செயல் அலுவலராக இருப்பதுடன் நிறுவன வாரியத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[13]

சூலை 27, 2015இல் சக் இராபின்சு சிஸ்கோவின் முதன்மை செயல் அலுவலராக அறிவிக்கப்பட்டார்.[14]

தனிவாழ்க்கை

தொகு

சாம்பர்சுக்கும் மனைவி எலைனுக்கும் இரு மகன்கள் பிறந்துள்ளனர்; லிண்ட்சே, ஜான்.[15]

நூல்கள்

தொகு

கீழ்க்காணும் நூல்களில் சாம்பர்சின் மேலாண்மை குறித்தும் தலைமைப் பண்புகள் குறித்தும் எழுதப்பட்டுள்ளன:

மேற்சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "RESUME: John Thomas Chambers". Business Week. 1999. பார்க்கப்பட்ட நாள் January 5, 2014.
  2. 2.0 2.1 Schofield, Jack (April 19, 2000). "Cisco kids ride high". தி கார்டியன். பார்க்கப்பட்ட நாள் January 5, 2014.
  3. 3.0 3.1 Serwer, Andy (May 15, 2000). "There's Something About Cisco Cisco has an expensive stock and agile competitors. But this company has beaten every challenge it's faced. Here's an inside look at CEO John Chambers and the corporate machine he's created". ஃபார்ச்சூன். CNN. பார்க்கப்பட்ட நாள் January 5, 2014.
  4. #397 John T Chambers
  5. John T Chambers at Reference for Business
  6. 6.0 6.1 http://www.pratt.duke.edu/node/1577
  7. 7.0 7.1 Waters, John K. (February 2002). John Chambers and the Cisco Way. Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-00833-8.
  8. Gallo, Carmine. "How Cisco's CEO Works the Crowd". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 16 March 2016.
  9. USA Today
  10. 10.0 10.1 http://resources.cisco.com/app/tree.taf?asset_id=451409&public_view=true&Template_Name=PDF&sid=etl_200_CEO_bio[தொடர்பிழந்த இணைப்பு]
  11. News Releases, Feature Stories and Profiles about Duke University's Pratt School of Engineering
  12. John Doerr (2009-04-30). "John Chambers". Time இம் மூலத்தில் இருந்து 2009-05-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090502004048/http://www.time.com/time/specials/2007/article/0,28804,1733748_1733758_1736338,00.html. பார்த்த நாள்: 2009-05-13. 
  13. http://newsroom.cisco.com/execbio-detail?articleId=33185, Cisco
  14. http://fortune.com/2015/07/27/cisco-john-chambers-chuck-robbins/
  15. John Chambers, President and CEO, Cisco Systems பரணிடப்பட்டது 2009-02-16 at the வந்தவழி இயந்திரம் MIT Industrial Liaison Program

வெளி இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_சாம்பர்சு&oldid=3871579" இலிருந்து மீள்விக்கப்பட்டது