ஜான் டி. பாரோ

ஜான் டேவிடு பாரோ (John David Barrow)FRS (29 நவம்பர் 1952 - 26 செப்டம்பர் 2020) ஒரு ஆங்கில அண்டவியலாளரும் , கோட்பாட்டு இயற்பியலாளரும் கணிதவியலாளரும் ஆவார்.[2] இவர் 2008 முதல் 2011 வரை கிரெழ்சம் கல்லூரியில் வடிவியல் பேராசிரியராகப் பணியாற்றினார்.[3] பாரோ பெயர்பெற்ற அறிவியல் எழுத்தாளராகவும் , ஒரு பயில்நிலை நாடக ஆசிரியராகவும் இருந்தார்.

John Barrow
John David Barrow
John David Barrow
பிறப்பு (1952-11-29)29 நவம்பர் 1952
London, England
இறப்பு26 செப்டம்பர் 2020(2020-09-26) (அகவை 67)
Alma materVan Mildert College, Durham (BSc)
Magdalen College, Oxford (DPhil)
துறை ஆலோசகர்Dennis William Sciama[1]
முக்கிய மாணவர்Peter Coles
David Wands[1]

கல்வி

தொகு

பாரோ 1964 வரை வெம்ப்லியில் உள்ள பர்காம் தொடக்கப்பள்ளியிலும் , 1964 முதல் 1971 வரை சிறுவர்களுக்கான ஈலிங் இலக்கணப் பள்ளியிலும் பயின்றார். மேலும் 1974 ஆம் ஆண்டில் தர்காம் பல்கலைக்கழகத்தில் உள்ள வான் மில்டர்ட் கல்லூரியில் கணிதத்திலும்இயற்பியலிலும் தனது முதல் பட்டத்தைப் பெற்றார். 1977 ஆம் ஆண்டில் தென்னிசு வில்லியம் சியாமா மேற்பார்வையில் ஆக்ஸ்போர்டு மாக்டலன் கல்லூரியில்வானியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[1]

ஆராய்ச்சியும் தொழிலும்

தொகு

பாரோ 1977 முதல் 1981 வரை ஆக்ஸ்போர்டு, கிறிஸ்து சர்ச்சில் இளம் ஆராய்ச்சி விரிவுரையாளராக இருந்தார். கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழகத்தில் வானியலில் மில்லர் காமன்வெல்த் இலிண்டேமன் ஆய்வுறுப்பினராகவும் (1977 - 1980) மில்லர் ஆய்வுறுப்பினராகவும் (1980 - 1980) இரண்டு முதுமுனைவர் ஆண்டுகளை முடித்தார்.

1981 ஆம் ஆண்டில் சசெக்சு பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் , வானியல் மையத்தின் பேராசிரியராகவும் இயக்குநராகவும் உயர்ந்தார். 1999 இல் அவர் பயன்முறைக் கணிதவியல், கோட்பாட்டு இயற்பியல் துறையில் பேராசிரியராகவும் , கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் கிளேர் முற்றத்தில் உறுப்பினராகவும் ஆனார். 2003 முதல் 2007 வரை இலண்டனின் கிரெழ்சம் கல்லூரியில் வானியல் பேராசிரியராக இருந்த அவர் , 2008 முதல் 2011 வரை வடிவவியலின் கிரெழ்சம் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.[4]

1999 முதல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மில்லினியம் கணிதத் திட்டத்தை (எம். எம். பி.) இயக்கினார். இது கணிதம் கற்பித்தல், கற்றல், மேலும் அதன் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஒரு பரப்புரைக் கல்வி திட்டமாகும். 2006 ஆம் ஆண்டில் பக்கிங்காம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் கல்விச் சாதனைக்கான ராணியின் ஆண்டு பரிசுஐவருக்கு வழங்கப்பட்டது.

500க்கும் மேற்பட்ட இதழியல் கட்டுரைகளை வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் , பாரோ பிராங்கு ஜே. திப்ளருடன் இணைந்து எழுதிய (The Antropic Cosmological Printiple) கருத்துக்களின் வரலாறு குறித்த ஒரு படைப்பு ஆகும். குறிப்பாக அறிவார்ந்த வடிவமைப்பு, தொலைநோக்கியல், அத்துடன் வானியற்பியல் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரை, 1983 ஆம் ஆண்டு வெளியான ' படைப்பின் இடது கை ' என்ற புத்தகத்தில் தொடங்கி, பொது வாசகர்களுக்காக 22 புத்தகங்களை இவர் வெளியிட்டார். அவரது புத்தகங்கள் பெரும்பாலும் பால் டிராக், ஆர்த்தர் எடிங்டன் போன்ற சிறந்த இயற்பியலாளர்களின் படைப்புகளிலிருந்து திரட்டிய ஏராளமான உண்மைகளின் தொகுப்பு வடிவத்தில் வான்பொருள் கேள்விசார் விவகாரங்களின் நிலையை சுருக்கமாகக் கூறுகின்றது.

இயற்பியல் அண்டவியல் முன்வைத்த கோட்பாட்டுச் சிக்கல்களுக்கு பாரோவின் அணுகுமுறை, அவரது புத்தகங்களைப் பொது வாசகர்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றியது. எடுத்துகாட்டாக, பாரோ ஒரு மறக்கமுடியாத முரண்பாட்டை அறிமுகப்படுத்தினார் , அதை அவர் " குரூசோ மார்க்சு விளைவு " என்று அழைத்தார் ( இரசல் போன்ற முரண்பாட்டுகளைப் பார்க்கவும்). இங்கு அவர் குரூசோ மார்க்சு " என்னை ஓர் உறுப்பினராக ஏற்றுக்கொள்ளும் எந்தக் கழகத்திலும் சேர நான் விரும்பவில்லை. " புரிந்து கொள்ளக்கூடிய அளவுக்கு எளிமையான அண்டம் அதைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்ட ஒரு மனதை உருவாக்குதல் மிகவும் எளிதானது " என்று பாரோ கூறினார்.

பாரோ 10 டவுனிங் தெரு, விண்ட்சர் கோட்டையிலும், ம் வத்திக்கானிலும் பொது மக்களுக்கு விரிவுரை நிகழ்த்தினார். 2002 ஆம் ஆண்டில் அவரது நாடகம் இன்ஃபினிட்டிஸ் மிலன், வலென்சியாவில் திரையிடப்பட்டு, 2002 இல் இத்தாலிய பிரமி உபு அரங்கப் பரிசை வென்றது.

தகைமைகள்

தொகு

வாழ்க்கைக்கும் அண்டத்திற்கும் இடையிலான உறவும் மனித புரிதலின் தன்மையும் பற்றிய அவரது எழுத்துக்களுக்காக, " ஆன்மீக யதார்த்தங்களைப் பற்றிய ஆராய்ச்சி அல்லது கண்டுபிடிப்புகளை நோக்கிய முன்னேற்றம் " சார்ந்து 2006 டெம்பிள்டன் பரிசு பாரோவுக்கு வழங்கப்பட்டது. அவர் ஒரு ஐக்கிய சீர்திருத்த தேவாலயத்தின் உறுப்பினராக இருந்தார் , இது " அண்டத்தின் மரபான தெய்வீகப் படத்தை " கற்பிக்கிறது என்று அவர் விவரித்தார்.

2008 ஆம் ஆண்டில் அரசு கழகம் அவருக்கு ஃபாரடே பரிசை வழங்கியது. 2003 ஆம் ஆண்டில் இலண்டனில் உள்ள அரசு கழகத்தின் உறுப்பினராகவும் , 2009 ஆம் ஆண்டில் ஐரோப்பா கல்விக்கழக உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹெர்ட்ஃபோர்ட்ஷையர் , சசெக்ஸ் , டர்ஹாம் சவுத் வேல்ஸ் மற்றும் ஸ்ஸ்கெசின் பல்கலைக்கழகங்களில் இருந்து தகைமை முனைவர் பட்டம் பெற்ற இவர் , நாஞ்சிங் பல்கலைக்கழகத்தில் தகைமைப் பேராசிரியராக இருந்தார். 1989 ஆம் ஆண்டில் கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் நூற்றாண்டு கிஃபோர்டு விரிவுரையாளராக இருந்தார்.

2015 ஆம் ஆண்டில் இயற்பியல் நிறுவனத்தின் டிராக் பரிசும் பொற்பதக்கமும் , 2016 ஆம் ஆண்டில் அரசு வானியல் கழகத்தின் பொற்பதக்கமும் அவருக்கு வழங்கப்பட்டது.

இறப்பு.

தொகு

பாரோ 2020, செப்டம்பர் 26 அன்று தனது 67 ஆம் அகவையில் பெருங்குடற் புற்றுநோயால் இறந்தார்.

வெளியீடுகள்

தொகு

ஆங்கிலத்தில்

பிற மொழிகளில்

பதிப்பாசிரியராக

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 கணித மரபியல் திட்டத்தில் ஜான் டி. பாரோ
  2. Ellis, George F. R. (2022). "John David Barrow. 29 November 1952 – 26 September 2020". Biographical Memoirs of Fellows of the Royal Society 73: 41–63. doi:10.1098/rsbm.2022.0007. https://royalsocietypublishing.org/doi/10.1098/rsbm.2022.0007. 
  3. "DAMTP Professor John Barrow". www.damtp.cam.ac.uk.
  4. Gresham College: New Gresham Chair of Geometry பரணிடப்பட்டது 21 சனவரி 2009 at the வந்தவழி இயந்திரம்.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_டி._பாரோ&oldid=4040991" இலிருந்து மீள்விக்கப்பட்டது