ஜான் மை. ஜம்பர்
ஜான் மைக்கேல் ஜம்பர் (John M. Jumper) நோபல் பரிசு பெற்றவரும் அடி மனத் தொழில்நுட்ப அமெரிக்க மூத்த ஆராய்ச்சி அறிவியலாளரும் ஆவார்.[4] ஜம்பரும் ஜம்பரின் அவருடன் பணியாற்றியவர்களும் ஆல்பாபோல்டு (ஆல்பா மடிப்பு) என்ற செயற்கை நுண்ணறிவைத் துணைக்கொண்ட புரதங்களின் கட்டமைப்பைக் காட்டக்கூடிய ஒரு கருவியை உருவாக்கினர். இது புரதக் கட்டமைப்புகளை அவற்றின் அமினோ அமில வரிசையினை அதிகத் துல்லியத்துடன் கணிக்க உதவும் ஒரு செயற்கை நுண்ணறிவு மாதிரியாகும்.[5][6] ஜம்பர் 2024ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார்[7][8] ஆல்பாபோல்டு குழு 100 மில்லியன் புரத கட்டமைப்புகளை வெளியிடத் திட்டமிட்டுள்ளது என்று ஜம்பர் கூறியுள்ளார்.[9] அறிவியல் ஆய்விதழான நேச்சர், 2021ஆம் ஆண்டின் வருடாந்திரப் பட்டியலில் அறிவியலில் முக்கியத்துவம் வாய்ந்த பத்து நபர்களில் ஒருவராக ஜம்பரை தேர்வு செய்தது.[6][2]
ஜான் மை. ஜம்பர் | |
---|---|
பிறப்பு | ஜான் மைக்கேல் ஜம்பர் |
துறை | செயற்கை நுண்ணறிவு இயந்திர கற்றல் |
பணியிடங்கள் | கூகுள் டீப் மைண்டு |
கல்வி கற்ற இடங்கள் |
|
ஆய்வேடு | கரடுமுரடான புரத மடிப்பு மற்றும் இயக்கவியலுக்கு கடுமையான இயந்திர கற்றலைப் பயன்படுத்தும் புதிய முறைகள் (2017) |
ஆய்வு நெறியாளர் | தோபின் ஆர் சோசுனிக்[3] கார்ல் பிரீடு[3] |
அறியப்படுவது | ஆல்பாபோல்டு |
விருதுகள் | நேச்சர் (இதழ்) 10 அறிவியலாளர்(2021) பிபிவிஏ அறக்கட்டளை அறிவின் முன்னோடி விருது (2022) உயிர் அறிவியல் திருப்புமுனை விருது (2023) வேதியியலுக்கான நோபல் பரிசு (2024) |
கல்வி
தொகுஜம்பர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். இங்கு 2017ஆம் ஆண்டில் புரத மடிப்பு மற்றும் இயக்கவியலை உருவகப்படுத்த இயந்திரக் கற்றலைப் பயன்படுத்துவது குறித்த இவரது ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.[3] டோபின் ஆர் சோசுனிக் மற்றும் கார்ல் ப்ரீட் ஆகியோர் இவரது ஆய்வினை இணைந்து மேற்பார்வையிட்டனர். ஜம்பர் கேம்பிரிச்சு பல்கலைக்கழகத்தில் இயற்பியலும் கற்றுள்ளார். இங்கு இவர் மார்சல் ஆய்வு நிதியினைப் பெற்றிருந்தார். மேலும் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் இயற்கூறியல் மற்றும் கணிதத்தில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்றுள்ளார்.[1]
ஆராய்ச்சி
தொகுஜம்பர் புரத அமைப்பு முன்கணிப்பு வழிமுறைகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
ஆல்பாபோல்டு
தொகுஆல்பாபோல்டு என்பது கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெற்று நிறுவனம் வாங்கிய ஆராய்ச்சி ஆய்வகமான டீப் மைண்டில் ஜம்பர் மற்றும் அவரது குழுவினரால் உருவாக்கப்பட்ட ஆழமான கற்றல் வழிமுறையாகும்.[5][10][11]
விருதுகளும் கௌரவங்களும்
தொகுநவம்பர் 2020இல், ஆல்பாபோல்டு கட்டமைப்பு கணிப்பின் விமர்சன மதிப்பீடு போட்டியின் வெற்றியாளராகப் பெயரிடப்பட்டது. இந்த பன்னாட்டுப் போட்டி புரதங்களின் முப்பரிமாணக் கட்டமைப்பை எவ்வாறு சிறப்பாகக் கணிக்க முடியும் என்பதைத் தீர்மானிக்க வழிமுறைகளை வரையறுக்கிறது. ஆல்பாபோல்டு போட்டியில் வெற்றி பெற்று, மற்ற வழிமுறைகளைச் செய்து, புரதங்களின் முப்பரிமாணக் கட்டமைப்பைத் துல்லியமாகக் கணிக்கக்கூடிய முதல் இயந்திரக் கற்றல் வழிமுறையாக அமைந்தது.
2021ஆம் ஆண்டில் ஜம்பருக்கு "உயிரியல் மற்றும் உயிரியல் மருத்துவம்" பிரிவில் பாங்கோ பில்பாவோ விஸ்காயா அர்ஜென்டாரியா அறக்கட்டளை அறிவு எல்லைகள் விருது வழங்கப்பட்டது.[12] 2022ஆம் ஆண்டில் ஜம்பர் உயிர்மருத்துவ அறிவியல் வில்லி பரிசையும், 2023ஆம் ஆண்டிற்கான உயிர் அறிவியலில் திருப்புமுனை பரிசையும் பெற்றார். ஆல்பாபோல்டு புரதத்தின் கட்டமைப்பை துல்லியமாக கணித்துள்ளமைக்காக இப்பரிசு வழங்கப்பட்டது.[13][14] 2023ஆம் ஆண்டில் இவருக்கு கனடா கெய்ட்னர் பன்னாட்டு விருதும் அடிப்படை மருத்துவ ஆராய்ச்சிக்கான ஆல்பர்ட் லாசுகர் விருதும் வழங்கப்பட்டது.[15][16]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "John Jumper at DeepMind". falling-walls.com.
- ↑ 2.0 2.1 ஜான் மை. ஜம்பர் on லிங்டின்
- ↑ 3.0 3.1 3.2 Jumper, John Michael (2017). New methods using rigorous machine learning for coarse-grained protein folding and dynamics. chicago.edu (PhD thesis). University of Chicago. எண்ணிம ஆவணச் சுட்டி:10.6082/M1BZ647N. இணையக் கணினி நூலக மைய எண் 1237239279. ProQuest 1883866286.
- ↑ Eisenstein, Michael (2021). "Artificial intelligence powers protein-folding predictions". Nature (Springer Nature) 599 (7886): 706–708. doi:10.1038/d41586-021-03499-y. https://www.nature.com/articles/d41586-021-03499-y. பார்த்த நாள்: 24 December 2021.
- ↑ 5.0 5.1 John Jumper; Richard Evans; Alexander Pritzel et al. (15 சூலை 2021). "Highly accurate protein structure prediction with AlphaFold" (in en). நேச்சர். doi:10.1038/S41586-021-03819-2. விக்கித்தரவு Q107555821. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. Bibcode: 2021Natur.596..583J.
- ↑ 6.0 6.1 Maxmen, Amy (2021). "Nature's 10: John Jumper: Protein predictor". Nature (Springer Nature) 600 (7890): 591–604. doi:10.1038/d41586-021-03621-0. பப்மெட்:34912110.
- ↑ "The Nobel Prize in Chemistry 2024". Nobel Media AB. பார்க்கப்பட்ட நாள் 9 October 2024.
- ↑ "Press release: The Nobel Prize in Chemistry 2024". NobelPrize.org (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் October 9, 2024.
- ↑ Browne, Grace (2021). "DeepMind's AI has finally shown how useful it can be". wired.com. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
- ↑ Andrew W Senior; Richard Evans; John Jumper et al. (15 சனவரி 2020). "Improved protein structure prediction using potentials from deep learning" (in en). நேச்சர் 577 (7792): 706-710. doi:10.1038/S41586-019-1923-7. விக்கித்தரவு Q92669549. பன்னாட்டுத் தர தொடர் எண்:1476-4687. பப்மெட்:31942072.
- ↑ "AlphaFold". Deepmind. பார்க்கப்பட்ட நாள் 30 November 2020.
- ↑ "BBVA Foundation Frontiers of Knowledge Award 2022". frontiersofknowledgeawards-fbbva.es.
- ↑ "Wiley Prize 2022". wiley.com.
- ↑ "Breakthrough Prizes 2023". breakthroughprize.org. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.
- ↑ Canada Gairdner International Award 2023
- ↑ Albert Lasker Award for Basic Medical Research 2023