ஜிந்த் சமஸ்தானம்

ஜிந்த் சமஸ்தானம் (Jind State) இந்திய விடுதலைக்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த 562 சுதேச சமஸ்தானங்களில் ஒன்றாகும். இது தற்கால இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சங்கரூர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டிருந்தது. 1931-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜிந்த் சமஸ்தானம் 3,460 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 3,24,676 மக்கள் தொகையும் கொண்டிருந்தது. 1940-ஆம் ஆண்டில் ஜிந்த் சமஸ்தானத்தின் ஆண்டு வருவாய் ரூபாய் 30,00,000 ஆகும். இதன் ஆட்சியாளர்களுக்கு பிரித்தானிய இந்தியாவின் அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர் .

ஜிந்த் & சங்குரூர் சமஸ்தானம்
சுதேச சமஸ்தானம் பிரித்தானிய இந்தியா (1809–1948)

1763–20 ஆகஸ்டு 1948

Coat of arms of சங்குரூர்

சின்னம்

Location of சங்குரூர்
Location of சங்குரூர்
1911-இல் பஞ்சாப் மாகாண வரைபடத்தில் ஜிந்த் சமஸ்தானம்
தலைநகரம் சங்குரூர்
வரலாற்றுக் காலம் பிரித்தானிய இந்தியா
 •  நிறுவப்பட்டது 1763
 •  இந்தியாவுடன் இணைத்தல் 20 ஆகஸ்டு 1948
பரப்பு
 •  1931 3,460 km2 (1,336 sq mi)
Population
 •  1931 324,676 
மக்கள்தொகை அடர்த்தி Expression error: Unrecognized punctuation character ",". /km2  (Expression error: Unrecognized punctuation character ",". /sq mi)
தற்காலத்தில் அங்கம் சங்கரூர் மாவட்டம், பஞ்சாப், இந்தியா

வரலாறு

தொகு

மராத்தியப் பேரரசில் சிற்றரசாக இருந்த ஜிந்த் சமஸ்தானம், மூன்றாம் ஆங்கிலேய மராத்தியப் போருக்குப் பின்னர் 1818-ஆம் ஆண்டில், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் கொண்டுவந்த துணைப்படைத் திட்டத்தை ஏற்ற ஜிந்த் சமஸ்தான மன்னர், ஆண்டுதோறும் ஆங்கிலேயர்களுக்கு திறை செலுத்தி சுதேச சமஸ்தானமாக ஆட்சி செய்தனர். இது பம்பாய் மாகாணத்தின் கீழ் செயல்பட்டது. ஜிந்த் சமஸ்தான மன்னர்களுக்கு பிரித்தானிய இந்தியா அரசு, 13 துப்பாக்கிக் குண்டுகள் முழுங்கி மரியாதை செய்தனர்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி ஜிந்த் சமஸ்தானம் 20 ஆகஸ்டு 1948 அன்று பஞ்சாப் மாநிலத்துடன் இணக்கப்பட்டது.

 
ஜிந்த் சமஸ்தான ராஜா சங்கத் சிங்
 
1875-இல் ஜிந்த் இராஜா ரக்பீர் சிங்

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிந்த்_சமஸ்தானம்&oldid=3374270" இலிருந்து மீள்விக்கப்பட்டது