ஜீனூர்

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

ஜீனூர் (Jeenoor) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இந்த ஊர் சின்னமனவாரனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது.

ஜீனூர்
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்805
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
635115

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து வேப்பனபள்ளி செல்லும் சாலையில் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இந்த ஊர் மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 270 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.[1]

பெருங்கற்காலச் சின்னங்கள்

தொகு

ஜீனூரில் கல்பதுக்கையுடன் கூடிய கல்வட்டத்தில் பலவகையிலும் சிறப்புவாய்ந்த ஈமப் பேழை கண்டறியப்பட்டுள்ளது. மண்ணால் செய்யப்பட்ட இந்த ஈமப்பேழை நீண்ட தொட்டியைப் போன்ற அமைப்புடன் உள்ளது. இந்த பேழையின் வாய் பகுதி தடித்தும் உருண்டும் உள்ளது. பேழையின் அடிப்பகுதியில் வரிசைக்கு எட்டு கால்கள் என மூன்று வரிசையில் மொத்தம் 24 கால்கள் உள்ளன. இந்தக் கால்கள் உருண்டை வடிவத்திலும் கீழ்பகுதி சற்று தடித்தும் காணப்படுகின்றன. இங்கு கண்டெடுக்கபட்ட ஈமப்பேழையானது தருமபுரி தொல்லியல் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Jeenoor Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-11.
  2. த. பார்திபன், தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்ட வரலாறு பகுதி-II சங்க காலம். ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறகட்டளை, தருமபுரி. 2010 ஏப்ரல். pp. 137–138. {{cite book}}: Check date values in: |year= (help)


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீனூர்&oldid=3753528" இலிருந்து மீள்விக்கப்பட்டது