வேப்பனபள்ளி
வேப்பனப்பள்ளி அல்லது வேப்பனஹள்ளி (Veppanapalli) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலம், கிருட்டிணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி வட்டத்துக்கு உட்பட்ட ஓர் ஊராகும்.[1] இது வேப்பனப்பள்ளி ஒன்றியத்தின் தலைநகராகவும் உள்ளது. இந்த ஒன்றியத்தில் 27 ஊராட்சிகள் உள்ளன.[2]
வேப்பனப்பள்ளி | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | கிருட்டிணகிரி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 4,943 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 635 121 |
பெயர் வரலாறு
தொகுஇந்த ஊரின் பழமையான பெயராக வேப்பம் பள்ளி, செடில சமுத்திரம் ஆகியவை உள்ளன. கிருஷ்ணகிரி வட்டம் மேகலம்சின்னம் பள்ளியில் கிடைத்த 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டில் வேப்பம் பள்ளியான செடில சமுத்திரத்தை என்ற சொற்றொடரால் இந்த ஊர் குறிக்கப்பட்டுள்ளது. வேப்பம் பள்ளி என்பதில் உள்ள வேப்பம் என்ற சிறப்புக் கூறிலிருக்கும் மகரம் னகரமாக திரிந்து பிற்காலத்தில் மாறியுள்ளது.[3]
மக்கள் வகைப்பாடு
தொகுஇந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும்,[4] மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 252 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. 2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இந்த ஊரில் 1077 குடும்பங்கள் உள்ளன. ஊரின் மொத்த மக்கள் தொகையானது 4943 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 2442, பெண்களின் எண்ணிக்கை 2501 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 65.7% என உள்ளது. இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/
- ↑ http://soki.in/category/veppanapalli-krishnagiri-tamil-nadu/
- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 116.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ http://soki.in/category/veppanapalli-krishnagiri-tamil-nadu/
- ↑ http://www.onefivenine.com/india/villages/Krishnagiri/Veppanapalli/Veppanapalli