ஜீன் வைல்டர்
ஜெரோம் சில்பர்மன் (Jerome Silberman (சூன் 11, 1933 – ஆகஸ்டு 29, 2016), பொதுவாக ஜீன் வைல்டர் என அறியப்படும் இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டைச் சேர்ந்த நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்), பின்னணிப் பாடகர்,கவிஞர் ஆவார்.
ஜீன் வைல்டர் | |
---|---|
1970 இல் ஜீன் வைல்டர் | |
பிறப்பு | ஜெரோம் சில்பர்மன் சூன் 11, 1933 மில்வாக்கி, விஸ்கொன்சின் |
இறப்பு | ஆகத்து 29, 2016 ஸ்டாம் ஃபோர்டு | (அகவை 83)
இறப்பிற்கான காரணம் | அல்சைமர் நோய்த் தாக்கங்கள் |
தேசியம் | அமெரிக்கன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | லோவா பல்கலைக்கழகம் இளங்களைப் பட்டம் (1955) |
பணி | நடிகர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் (திரைப்படம்), தயாரிப்பாளர் (திரைப்படம்), பின்னணிப் பாடகர்,கவிஞர் |
செயற்பாட்டுக் காலம் |
|
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 1 |
உறவினர்கள் | ஜோதான் வாக்கர் (மருமகன்) |
கையொப்பம் |
வைல்டர் தனது திரை வாழ்க்கையினை நாடகம் நடிப்பதில் இருந்து துவங்கினார். 1961 ஆம் ஆண்டில் தெ பிளே ஆஃப் தெ வீக் எனும் தொலைக்காட்சி நாடகத் தொடரில் முதல் முறையாக நடித்தார். இவரின் முதல் திரைப்படம் போன்னி அண்ட் கிளைட் ஆகும்.[1] இதில் பிணையாளிக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். 1967 ஆம் ஆண்டில் வெளியான தெ புரோடியூசர்ஸ் (தயாரிப்பாளர்கள்) எனும் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதனை லியோபால்ட் புளூம் இயக்கினார். இந்தத் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த ஆண் துணை நடிகருக்கான அகாதமி விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். வைல்டர் , இயக்குநர் (திரைப்படம்), எழுத்தாளரான மெல்புரோக்ஸ்சுடன் இணைந்து பணியாற்றிய பிளேசிங் சாட்டில்ஸ், யங் ஃபிராங்கன்ஸ்டைன் ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த தழுவல் திரைக்கதைக்கான அகாதமி விருதுக்கு இருவரும் பரிந்துரை செய்யப்பட்டனர். 1971 இல் வெளிவந்த வில்லி வோன்கா & தெ சாக்கலட் ஃபேக்டரி திரைப்படத்தில் (வில்லிவோன்கா கதாப்பத்திரம்) மற்றும் 1976 இல் ரிச்சர்டு பிரையர் : சில்வர் ஸ்ட்ரீக், 1980 இல் ஸ்டிர் கிரேசி, 1989 இல் சீ நோ ஈவில், ஹியர் நோ ஈவில், 1991இல் அனதர் யூ ஆகிய திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்படுகிறார்.[1] 1984 ஆம் ஆண்டில் வெளிவந்த தெ வுமன் இன் ரெட் திரைப்படம் உட்பட இவர் நடித்த சில திரைப்படங்களை எழுதி , இயக்கியுள்ளார்.
ஜீன் வைல்டரின் மூன்றாவது மனைவி கில்டா ராட்னர் ஆவார். இவருடன் இணைந்து வைல்டர் மூன்று திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் கடைசி இரண்டு திரைப்படங்களை ஜீன் வைல்டர் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. கில்டா ராட்னர் சூல்பைப் புற்றுநோயினால் மரணமடைந்தார். இதனால் ஜீன் வைல்டர் சூல்பைப் புற்றுநோய் கண்டறியும் மையத்தினை லாஸ் ஏஞ்சலஸ் நகரத்தில் நிறுவினார். இதன்மூலம் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்வது மற்றும் சிகிச்சைகளை அளித்தல் போன்ற செய்லகளில் ஈடுபட்டு வந்தார். மேலும் கில்டா மன்றம் என்பதனையும் நிறுவினார்.[1]
2003 ஆம் ஆண்டில் வில் மற்றும் கிரேஸ் எனும்திரைப்படத்தில் இறுதியாக நடித்தார். இந்தத் திரைப்படத்தில் நடித்தகாக சிறந்த கௌரவ நடிகருக்கான எம்மி விருது பெற்றார். அதன் பின் தனது கவனம் முழுவதையும் எழுத்துத் துறைக்கு மாற்றினார். கிஸ்மீ லைக் எ ஸ்ட்ரேஞ்சர் : மை சர்ச் ஃபார் லவ் அண்ட் ஆர்ட எனும் வாழ்க்கை நினைவுக் குறிப்பைத் தயாரித்தார். மேலும் 2007 இல் மை ஃபிரஞ்சு ஓர் (என்து பிரஞ்சு விலைமகள்), தெ வுமன் ஹூ வுட்நாட், 2013 இல் சம்திங் டோன்ட் ரிமம்பர் யூ பை ஆகிய புதினங்களை எழுதினார்.
ஆரம்பகால வாழ்க்கை, கல்வி
தொகுஜீன் வைல்டர் சூன் 11, 1933 இல் மில்வாக்கியில் , விஸ்கொன்சினனில் பிறந்தார். இவரின் தந்தை வில்லியம் ஜே சில்பர்மன் நூதனப் பொருட்கள் தயாரிப்பவரும் விற்பனை செய்பவரும் ஆவார்.[2] தாய் ஜீன். இவரின் தந்தை உருசியா யூத வந்தேறி ஆவார்.[3] இவருக்கு நடிக்கும் ஆர்வம் இவரின் எட்டாம் வயதில் இவரின் தாய் ஜீன் வாதக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட போது மருத்துவர் இவரை சிரிக்க வைக்க முயற்சி செய்யுங்கள் எனக் கூறியபோது வந்தது.[4]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Cohen, Sandy; McShane, Larry (August 29, 2016). "Nephew: Gene Wilder, star of Mel Brooks movies, dies at 83". Associated Press இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 7, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160907102804/http://bigstory.ap.org/article/62cb45073aee4239a0195884c12d68cd/nephew-gene-wilder-star-mel-brooks-movies-dies-83. பார்த்த நாள்: August 29, 2016.
- ↑ Lewis, Daniel (August 29, 2016). "Gene Wilder Dies at 83; Star of 'Willy Wonka' and 'Young Frankenstein'". The New York Times. https://www.nytimes.com/2016/08/30/movies/gene-wilder-dead.html?_r=0. பார்த்த நாள்: August 29, 2016.
- ↑ "Milwaukee's own Gene Wilder, star of 'Willy Wonka' and Mel Brooks comedies, dead at 83, family says". Fox. August 29, 2016. Archived from the original on செப்டம்பர் 7, 2016. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 28, 2018.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Segal, David. "Gene Wilder: It Hurts to Laugh." தி வாசிங்டன் போஸ்ட். March 28, 2005. Retrieved March 15, 2008.