ஜீவராஜ் ஆல்வா

ஜீவராஜ் ஆல்வா (Jeevaraj Alva) (1947-2001) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் கர்நாடக அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர் ஆவார்.[1]

தொழில்

தொகு

ஆல்வா கர்நாடக அரசில் அமைச்சராகவும், ஐக்கிய ஜனதா தளத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.[2][3]

ஜீவராஜ் ஆல்வா செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெற்ற மருத்துவர் ஆவார். கல்லூரியில் அவர் ஜேபி இயக்கத்தின் போது மாணவர் தலைவராக ஆனார். இது மருத்துவராகப் பயிற்சி செய்வதை எதிர்த்து முடிவெடுக்க வழிவகுத்தது. இராமகிருஷ்ண ஹெக்டேவின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர். (1988-90) காலத்தில் ஜனதா கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக ஆனார். 1994 கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[4] பின்னர் இவர் 1999- ஆம் ஆண்டில் லோக் சக்தியின் மாநில பிரிவு தலைவராகவும் இருந்தார்

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

ஆல்வா கர்நாடகாவின் கடலோர கனரா பகுதியைச் சேர்ந்த துளு மொழி பேசும் பன்ட் சமூகத்தைச் சேர்ந்த நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை, கே. நாகப்பா ஆல்வாவும் ஒரு அரசியல்வாதி மற்றும் அவர் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில பிரிவுக்கு தலைமை தாங்கினார்.

ஆல்வா பாரம்பரிய நடனக் கலைஞரான நந்தினி ஆல்வாவை (நீ சேத்) மணந்தார். பெங்குளூரில் தீவிர பாஜக தலைவராக இருக்கும் ஆதித்யா (பி. 1989) என்ற மகனும், பிரியங்கா (பி. 1983) என்ற மகளும் உள்ளனர். 29 அக்டோபர் 2010 அன்று, பிரியங்கா இந்தி திரைப்பட நடிகர் விவேக் ஓபராயை மணந்தார். தம்பதியருக்கு விவான் (பிறப்பு 6 பிப்ரவரி 2013) என்ற மகனும், அமேயா (பிறப்பு 21 ஏப்ரல் 2015) என்ற மகளும் உள்ளனர்.

ஆல்வா 12 பிப்ரவரி 2001 அன்று பெங்களூரு மணிபால் மருத்துவமனையில் இறந்தார். இறப்பின் போது இவருக்கு 53 வயது ஆகும். இவர் இறந்த போது இவரது மனைவி மற்றும் 12 மற்றும் 18 வயதுடைய இரண்டு இளம் குழந்தைகள் இருந்தனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Riti, M D. "The Rediff Special/Jeevaraj Alva". Rediff.com.
  2. "Jeevaraj Alva". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 February 2001. http://timesofindia.indiatimes.com/city/bangalore/Jeevaraj-Alva-buried-with-state-honours/articleshow/20953573.cms. பார்த்த நாள்: 12 October 2010. 
  3. "Jeevaraj Alva is dead". தி இந்து. 13 February 2001 இம் மூலத்தில் இருந்து 14 ஜூலை 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080714034226/http://www.hinduonnet.com/2001/02/13/stories/0413210h.htm. பார்த்த நாள்: 12 October 2010. 
  4. Raj Chengappa (September 15, 1988). "Karnataka's new CM S.R. Bommai inherits a troubled legacy". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீவராஜ்_ஆல்வா&oldid=4109156" இலிருந்து மீள்விக்கப்பட்டது