ஜெயதி கோஷ் (Jayati Ghosh, பிறப்பு: 1955) தில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையில் பணியாற்றும் பேராசிரியர் ஆவார். இவர் உலகமயமாக்கல், சர்வதேச நிதி, வளரும் நாடுகளில் வேலை வாய்ப்பு முறைகள், பாலினம் மற்றும் வளர்ச்சி தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பருப்பொருளியல் ஆகிய நிபுணத்துவம் வாய்ந்தவர்.

ஜெயதி கோஷ்

கல்வி

தொகு

இவர் 1984ஆம் ஆண்டு, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் டெரென்ஸ் ஜெ. பையர்ஸ் என்பவரின் மேற்பார்வையில் முனைவர் பட்டம் பெற்றார்.

வாழ்க்கை

தொகு

இவர் தற்போது தில்லியில் வசித்து வருகிறார்.மேற்கத்திய பாரம்பரிய இசையிலும் திறமை வாய்ந்தவர். இந்தியத் திட்டக்குழு உறுப்பினரான அபிஜித் சென்னை திருமணம் புரிந்தார்.

இவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பணியாற்றத் தொடங்குவதற்கு முன்பு கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்திலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். மேலும் இந்தியாவிலுள்ள பல கல்வி நிறுவனங்களிலும் பொருளாதாரம் சார்ந்த தலைப்புகளில் விரிவுரையாற்றியுள்ளார். தில்லியிலுள்ள பொருளாதார ஆராய்ச்சி அறக்கட்டளையை நிறுவியவர்களில் இவரும் ஒருவர். இவர் சர்வதேசப் பொருளாதார வளர்ச்சிக்கான சங்கத்தின் (International Development Economics Associates (IDEAS)) செயளாளர் ஆவார். இவர், மேற்கு வங்க மனித வள்ர்ச்சி அறிக்கையின் பிரதான ஆசிரியராவார். இவ்வறிக்கை ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் வழங்கிய சிறந்த ஆய்வாளருக்கான பரிசினைப் பெற்றுள்ளது.

இவரது அறிவார்ந்த படைப்புகள் மட்டுமன்றி பிரண்ட்லைன், பிசினஸ் லைன், வங்காள நாளிதழான கனசக்தி, தி டெக்கன் குரோனிக்கள், ஆசியன் ஏஜ் போன்ற இதழ்களிலும் எழுதி வருகிறார். பிப்ரவரி 2011ல் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு வழங்கிய ஆராய்ச்சிக்கான பரிசினைப் பேராசிரியர் ஈவ் லாண்டாவுடன் பகிர்ந்து கொண்டார்.[1]

வெளி இணைப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. International Labour Organization(16 February 2011). "ILO Decent Work Research Prize awarded to two distinguished scholars". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 4 நவம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயதி_கோஷ்&oldid=3272812" இலிருந்து மீள்விக்கப்பட்டது