ஜெயநாதனின் கட்னி செப்புப் பட்டயங்கள்
ஜெயநாதனின் கட்னி செப்புப் பட்டயங்கள் (Katni copper-plate of Jayanātha) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், கட்னி மாவட்ட தலைமையிட நகரமான கட்னி நகரத்தில் கண்டெடுக்கப்பட்ட குப்தர் எழுத்துக்கள் கொண்ட சமசுகிருத மொழி செப்புப் பட்டயமாகும். மூன்று செப்புத் தகடுகள் கொண்ட இந்த செப்புப் பட்டயம், உச்சகல்ப வம்ச ஆட்சியாளர் ஜெயநாதன் (ஆட்சிக் காலம்:கிபி 493-502) என்பவர் கலபிகுண்டகா எனும் கிராமத்தை தானமாக கொடுத்ததை ஆவணப்படுத்தப்பட்டுள்ள்து. குப்தப் பேரரசின் 182-வது ஆட்சிக் காலத்தில் இச்செப்புப் பட்டயம் எழுதப்பட்டுள்ளது.
விளக்கம் மற்றும் உள்ளடக்கம்
தொகுஇச்செப்புப் பட்டயம் குப்தர்கால எழுத்துக்களில் சமசுகிருத மொழியில் உள்ளது. இச்செப்புப் பட்டயத்தில் மகாராஜா ஜெயநாதன் என்பவர் கலபிகுண்டகா எனும் ஒரு கிராமத்தை ஆறு பங்குகளாகப் பிரித்து, பிராமண, சத்திரிய, வைஸ்ய மற்றும் சூத்திர வர்ணங்களை.[1] சேர்ந்த 25 நபர்களுக்கு தானமாக வழங்கினார் எனக்குறித்துள்ளது.
செப்புப் பட்டயத்தின் குறிப்புகள்
தொகு-
முதல் செப்புப் பட்டயம்
-
இரண்டாம் செப்புப் பட்டயம்
-
மூன்றாம் செப்புப் பட்டயம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Michael D. Willis, The Archaeology of Hindu Ritual (Cambridge, 2009), p. 378. Partly available online: http://www.cambridge.org/gb/knowledge/isbn/item2427416/?site_locale=en_GB