ஜெய பிரகாஷ் ரெட்டி

இந்திய நடிகர்

ஜெயப்பிரகாஷ் ரெட்டி (Jaya Prakash Reddy) (8 மே 1946-8 செப்டம்பர் 2020) தெலுங்குத் திரைப்படங்களில் தோன்றிய ஓர் இந்திய நடிகராவார்.[3][4] ஆந்திராவின் சிர்வேல் என்ற இடத்தில் பிறந்த இவர், சமரசிம்ஹா ரெட்டி (1999) என்ற திரைப்படத்தில் ‘வீர ராகவ ரெட்டி’ என்ற கதாபாத்திரம் மூலம் அறிமுகமானார். ஜெயம் மனதேரா (2000), சென்னகேசவ ரெட்டி (2002) போன்ற பல படங்களில் வில்லனாக நடித்தார். இவரது தொழில் வாழ்க்கையின் பிற்பகுதியில், இவர் பல நகைச்சுவை வேடங்களிலும் நடித்திருந்தார்.[5] இவர் 8 செப்டம்பர் 2020 அன்று குண்டூரில் உள்ள தனது வீட்டில் இதய செயலிழப்பு காரணமாக தனது 74வது வயதில் காலமானார்.[6] நந்தி விருது உட்பட பல விருதுகள இபெற்றுள்ளார். தெலுங்குத் திரைப்படத்துறையில் இவர் ஆற்றிய செய்த பங்களிப்பிற்காக 16வது சந்தோசம் விருது வழங்கும் விழாவில் சிறப்பு நடுவர் விருது (அலெக்சாண்டர்) வழங்கப்பட்டது.[7]

ஜெய பிரகாஷ் ரெட்டி
பிறப்பு(1946-05-08)8 மே 1946 [1]
சிர்வேலா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா[2]
(தற்போதைய சிரவேலா ஆந்திரப் பிரதேசம், இந்தியா)
இறப்பு8 செப்டம்பர் 2020(2020-09-08) (அகவை 74)
குண்டூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1976—2020

இவர் ஒரு சில தமிழ்ப் படங்களிலும் தோன்றியுள்ளார்.

வருடம் படத் தலைப்பு பாத்திரம் குறிப்புகள்
2003 ஆஞ்சநேயா ஜெயபிரகாஷ்
2003 திவான் கந்தவேல்
2005 ஆறு ரெட்டி (நாதனின் எதிரி)
2005 சின்னா சின்னாவின் முன்னாள் முதலாளி
2006 தர்மபுரி எம்.எல்.ஏ. கொண்ட மூக்கன்
2010 உத்தம புத்திரன் சின்னமுத்து கவுண்டர் தமிழ் வெளியீட்டில் தானே குரல் அளித்துள்ளார்.

விருது

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Jaya Prakash Reddy, Telugu actor, passes away". தி இந்து. 8 September 2020 இம் மூலத்தில் இருந்து 9 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200909001727/https://www.thehindu.com/news/national/andhra-pradesh/actor-jaya-prakash-reddy-dies/article32549229.ece. 
  2. "YouTube". www.youtube.com. Archived from the original on 21 February 2014. பார்க்கப்பட்ட நாள் 3 April 2018.
  3. "Jaya Prakash Reddy (1946–2020): Mahesh Babu, Jr NTR, Prakash Raj and others mourn demise of versatile actor". The Indian Express (in ஆங்கிலம்). 2020-09-08. Archived from the original on 11 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-09-08.
  4. "Nagabhushanam is my inspiration: actor". 24 October 2010 இம் மூலத்தில் இருந்து 28 December 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101228134507/http://www.hindu.com/2010/10/24/stories/2010102456400300.htm. 
  5. "MLA Telugu Movie Review {3/5}: Entertaining, 'time-pass' kind of a film to watch along with your family" இம் மூலத்தில் இருந்து 25 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20180325083525/https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movie-reviews/mla/movie-review/63427634.cms. 
  6. "Actor Jaya Prakash Reddy passes away". 8 September 2020 இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011151510/https://indianexpress.com/article/entertainment/telugu/jaya-prakash-reddy-dead-6587405/. 
  7. "16వ 'సంతోషం' అవార్డ్స్: ఉత్తమ నటుడు చిరంజీవి" [16th 'Santhosham' Awards: Best Actor Chiranjeevi]. Samayam Telugu (in தெலுங்கு). 27 August 2018. பார்க்கப்பட்ட நாள் 29 July 2021.
  8. "నంది అవార్డు విజేతల పరంపర (1964–2008)" [A series of Nandi Award Winners (1964–2008)] (PDF). Information & Public Relations of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 21 August 2020.(in Telugu)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய_பிரகாஷ்_ரெட்டி&oldid=4015320" இலிருந்து மீள்விக்கப்பட்டது