ஜெர்லுன்
ஜெர்லுன் (மலாய்:Jerlun; ஆங்கிலம்:Jerlun; சீனம்:杰伦) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், குபாங் பாசு மாவட்டத்தில் (Kubang Pasu District) உள்ள ஒரு நகரம். பெர்லிஸ் மாநிலத்திற்கு தெற்கே உள்ளது. இது ஒரு கிராமப்புற நகரம்.
ஜெர்லுன் | |
---|---|
Jerlun | |
கெடா | |
ஆள்கூறுகள்: 6°13′N 100°16′E / 6.217°N 100.267°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கெடா |
உருவாக்கம் | 1880 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
இணையதளம் | http://www.kpkt.gov.my/ Majlis Perbandaran Kubang Pasu |
இந்த நகரத்திற்கு அருகில் கோலா ஜெர்லுன் எனும் கடற்கரை கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் மீன்பிடித் தொழிலுக்கு மிகவும் புகழ்பெற்றது.[1]
பொது
தொகுஜெர்லுன் எனும் பெயரில் மக்களவை நாடாளுமன்றத் தொகுதியும் உள்ளது. 14-ஆவது மலேசியப் பொதுத் தேர்தல் 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது. மலேசிய அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய பொதுத் தேர்தல்.
அந்தத் தேர்தலில், ஜெர்லுன் நாடாளுமன்றம், ஜித்ரா சட்டமன்றம் என இரண்டிலும் முன்னாள் மலேசியப் பிரதமர் துன் மகாதீரின் மகன் முக்ரிஸ் மகாதீர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]