ஜே. கே. கே. நடராஜா

குமாரபாளையம் கொடைவள்ளல் என்று பரவலாக அறியப்படும் திரு.ஜே.கே.கே.நடராஜா[1] நவம்பர் 13, 1925 - செப்டம்பர் 25, 1995) குமாரபாளையம் பகுதி மக்களின் ஏழ்மையை போக்கிய கொடைவள்ளலாகவும், இந்திய சுதந்திர போராளியாகவும், சிறந்த ஜவுளித்தொழிலில் தொழிலதிபராகவும் திகழ்ந்தார்.

திரு.ஜே.கே.கே.நடராஜா
பிறப்புநவம்பர் 13, 1925(1925-11-13)
குமாரபாளையம், நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா இந்தியா
இறப்பு25 செப்டம்பர் 1995(1995-09-25) (அகவை 69)
குமாரபாளையம், தமிழ்நாடு
நினைவகங்கள்ஜே.கே.கே.நடராஜா நினைவு இயக்கம்
மற்ற பெயர்கள்கொடைவள்ளல்.
பணிஇந்திய சுதந்திர போராளி, அரசியல்வாதி, தொழிலதிபர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

வாழ்க்கைதொகு

பிறப்புதொகு

கொடைவள்ளல் திரு. ஜே.கே.கே.நடராஜா அவர்கள் கந்தசாமி செட்டியாருக்கும், திருமதி ரங்கம்மாளுக்கும் ஐந்தாவது மகனாக நவம்பர் 13, 1925ல் தமிழ்நாட்டிலுள்ள, குமாரபாளையத்தில் பிறந்தார்.

இளமைக் காலம்தொகு

கந்தசாமி செட்டியாருக்கும், திருமதி ரங்கம்மாளுக்கும் ஐந்தாவது மகனாக திரு. ஜே.கே.கே.நடராஜா அவர்கள் நவம்பர் 13, 1925ல் தமிழ்நாட்டிலுள்ள, குமாரபாளையத்தில் பிறந்தார். இவரின் தந்தை கந்தசாமி செட்டியார் மிக வசதியான ஜவுளி வணிகப் பின்னணியைக் கொண்டவர். இவரின் தாயார் ரங்கம்மாள் ஆவார். 1946ம் வருடத்தில் நடராஜா செட்டியாருக்கு 21ஆம் வயதில் திருமணம் நடந்தது. நடராஜாவின் சகோதரி மகள் தனலட்சுமியம்மாளை மணந்தார். இவரது திருமணத்திற்கு பிரபல பழங்கால நடிகர் திரு எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் இசைக் கச்சேரி நடந்தது.


இலங்கைப் பயணம்தொகு

1940ம் வருட காலக்கட்டங்களில் தமிழகத்திற்கும், இலங்கைக்கும் வணிகப்போக்குவரத்து மிகுந்திருந்தது. நெசவு உற்பத்திகள் இலங்கைக்கு இங்கிருந்து பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டது. குறிப்பாக, குமாரபாளையத்திலிருந்து இலங்கையில் கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி பகுதிகளுக்கு துணி ரகங்கள் கொண்டு செல்லப்பட்டன. பள்ளி முடித்த கையோடு ஜே.கே.கே.நடராஜா அவர்கள் இளைஞனாக தொழிலில் இறங்கினார். சில காலம் குமாரபாளையத்தில் உள்ள கடையில் பணியாற்றிவிட்டு, இலங்கை செல்ல திட்டமிட்டார். தனது தந்தை இலங்கைக்கு அழைக்க, இருபதுக்கும் மேற்பட்ட கடையில் பணியாற்றும் தமிழக தொழிலாளர்களுடன் இலங்கை பயணமானார். குமாரபாளையத்தில் இருந்து சென்னைக்கு சரக்கு எடுத்து செல்லப்பட்டு, அங்கிருந்து தனுஷ்கோடிக்கு ரயில் வழியாக எடுத்து செல்லப்பட்டு, தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை 36 கிலோமீட்டர் தூர கப்பல் பயணம், பின்னர் தலைமன்னாரிலிருந்து கொழும்பு வரை மீண்டும் ரயில் பயணம் என்று இந்த போக்குவரத்து இருக்கும்.



இந்திய சுதந்திர போராட்டம்தொகு

இலங்கையில் இருந்து இந்தியா திரும்பியதும், சுதந்திர உணர்வு மற்றும் சமூக கருத்துக்களை உருவாக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தனது நண்பர்களான வி.சுப்ரமணியம், ஏ.வி.ராமச்சந்திரம் மற்றும் மற்ற நண்பர்களுடன் அழைத்து பேசினார். இதன் விளைவாக 1946ம் வருடம் ”கொமாரபாளையம் பொதுநல ஊழியர் வாலிபர் சங்கம்” என்ற பெயரில் ஒரு கலைக்குழுவை துவக்கினார். கலைக்குழு துவக்க விழாவிற்கு விடுதலைப் போராட்ட வீரரும் “சிலம்புச் செல்வர்” ம.பொ.சிவஞானம் கலந்து கொண்டு தலைமை வகித்தார். கலைக்குழு சார்பாக இந்திய விடுதலைக்கான நிகழ்வுகளும், சமூக நாடகங்களும் மேடைகளில் அரங்கேறின. அதே வருடத்தில் அக்டோபர் 5ம் தேதி ”நேரு சர்க்கா சங்கம்” என்ற பெயரில் ஒரு சங்கத்தை நடராஜா செட்டியார் ஆரம்பித்தார். இது தேச சேவைக்காகவும், குமாரபாளையம் நெசவுத்தொழிலுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை போக்குவண்ணம் அமைவதற்காக உருவாக்கினார். இந்த சங்கம் மூலம் குமாரபாளையத்தில் நிறைய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சங்கம் குறித்த செய்திகள் அன்றைய பத்திரிகைகளான சுதேசிமித்திரன், பாரததேவி ஆகிய இதழ்களில் வெளிவந்தன.


அரசியல் வாழ்வுதொகு

காங்கிரஸ் இயக்கத்தில் பற்றுதொகு

நடராஜா சுதந்திர காலக்கட்டத்திலிருந்து காங்கிரஸ் இயக்கத்தின்பால் பற்றுக்கொண்டிருந்த அவர் குமாரபாளையத்தில் அரசியல் பணியிலும் ஈடுபடத்துவங்கினார்.

குமாரபாளையம் பேரூராட்சித்தலைவர் (1958–1968)தொகு

1958ம் வருடம் முதல் 1968ம் வருடம் வரை இரண்டு வருடங்கள் குமாரபாளையத்தின் பேரூராட்சித்தலைவராக பதவி வகித்தார். பொதுமக்களுக்கான குடிநீர் பிரச்சினையை தீர்க்க வீடுதோறும் குடிநீர் குழாய்கள் பதித்தார். சாலை வசதிகளை சொந்த செலவில் ஏற்படுத்தினார். ஏழை நெசவாளிகளுக்கு உதவும்பொருட்டு அவர்களுக்கு தறி வாங்க உதவிகள் செய்தார்.

காமராஜர் சந்திப்புதொகு

1959ம் வருடம் அரசு விழாவிற்காக ஈரோடு மாவட்டதிற்கு வந்த பெருந்தலைவர் காமராஜர், நடராஜாவை சந்திப்பதாக கூறினார். பவானி சட்டமன்ற உறுப்பினர் நல்லசாமி மூலம் பெருந்தலைவர் காமராஜரை சந்தித்தார்.

காமராஜர் நடராஜரை நலம் விசாரிப்புதொகு

காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த நடராஜா அவர்களின் நண்பர் வி.சுப்ரமணியம் ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரை சந்தித்தார். அப்போது நடராஜாவைப்பற்றி விசாரித்த காமராஜர், ”நடராஜா கையில் வந்த நகச்சுற்று குணமாகிவிட்டதா?” என்று நலம் விசாரித்துள்ளார். அந்தளவிற்கு பெருந்தலைவர் காமராஜருக்கும், நடராஜா அவர்களும் நெருக்கம் இருந்துள்ளது.

சிவாஜி கணேசனுடன் சந்திப்புதொகு

காங்கிரஸ் கட்சியை குமாரபாளையத்தில் வலுப்படுத்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை அழைத்து வந்தார். பின்னர் இருவரும் குடும்ப நண்பர்களாக மாறினர்.

கல்விப்பணிதொகு

குமாரபாளையம் காட்டூரில் அரசு உதவி பெறும் ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வந்தது. 1950ம் வருடத்தில் சம்பள பிரச்சினை காரணமாக, இப்பள்ளியின் நிர்வாகப்பொறுப்பு நடராஜா செட்டியாரிடம் வந்தது. அவர் கைக்கு வந்ததும் பள்ளி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது. 1952ம் வருடம் நடராஜா அவர்களின் தாயாரின் பெயரில் ஜே.கே.கே.ரங்கம்மாள் உதவி பெறும் ஆரம்பப்பள்ளியாக மாற்றமடைந்தது. தொடரந்து இப்பள்ளி ஜே.கே.கே.நடராஜா கல்வி நிறுவனத்தின் மூலம் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜே.கே.கே.ரங்கம்மாள் மேல்நிலைப்பள்ளியை குமாரபாளையத்தில் 1965ம் ஆண்டு ஜுலை 15ஆம் தேதி துவங்கினார். பள்ளி துவங்கும்போது 300 மாணவிகள் மேல்நிலை வகுப்புகளில் பயின்றனர். இப்பள்ளி துவங்கியதும் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து பெண் குழந்தைகளும் கல்வி கற்றனர். அரசு அளிக்கும் பள்ளிக்கான மானியத்தொகையை விட தனது சொந்த நிதியிலிருந்து பள்ளிக்கு கட்டிடங்கள் கட்டினார். 1974ம் ஆண்டு அலமேலு அங்கப்பன் மகளிர் கல்லூரி குமாரபாளையத்தில் கொண்டு வரப்பட்டது.


மறைவுதொகு

நடராஜா அவர்கள் செப்டம்பர் 25, 1995 அன்று தனது 69 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

சான்றுகள்தொகு

  1. "About J.K.K.Nattraja". பார்த்த நாள் 17 April 2021.

மேற்கோள்கள்தொகு

  • V. Rajesh, P. Ashokkumar, (2012). Toxicity Study of Two Iron Containing Bhasmas, Swarna Makshika Bhasma and Kasis Bhasma.
  • C Dhinesh Kumar, Jayashree Mohan, (2020). "Fundamentals for orientation of occlusal plane in completely edentulous patients".


வெளி இணைப்புக்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._கே._கே._நடராஜா&oldid=3133922" இருந்து மீள்விக்கப்பட்டது