ஜே. வி. நாதன்
இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. (மார்ச்சு 2024) |
ஜே. வி. நாதன் (J. V. Nathan) என்பவர் ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். இதுவரை 400-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். கட்டுரை ஆசிரியராகவும் இவர் அறியப்படுகிறார். [1] சிறந்த சிறுகதைக்கான ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்பின் பரிசை மூன்று முறை பெற்றுள்ளார்.[2]
ஜே.வி.நாதன் | |
---|---|
பிறப்பு | சிதம்பரம், கடலூர் மாவட்டம் |
தொழில் | எழுத்தாளர், பத்திரிக்கையாளர் |
மொழி | தமிழ், |
குறிப்பிடத்தக்க விருதுகள் | இலக்கியச் சிந்தனை |
துணைவர் | ஜெயா |
பிள்ளைகள் | கணபதி சுப்ரமண்யன் (மகன்) பூர்ணிமா(மகள்) |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇவர் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிறந்தவர். வேலூரில் வசித்து வருகிறார். ‘ஆனந்த விகடன்’ நிறுவனத்தில் பணியாற்றினார். விகடனுக்குப் பிறகு, ‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழில் பொறுப்பாசிரியராகனார். சக்தி விகடன் மாதமிருமுறை இதழில் பிற மாநிலங்களின் புகழ் பெற்ற ஆலயங்களைப் பற்றி தொடர்ந்து எழுதினார். ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள் என்ற தொடரை 48 அத்தியாயங்கள் சக்தி விகடனில் எழுதி, அதை ஆனந்தவிகடன் நூலாக வெளியிட்டது.
இவருடைய 70 சிறுகதைகள் கன்னடம், தெலுங்கு, சமற்கிருதம் ஆகிய மொழிகளில் பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன. ஜூனியர் விகடன் இதழில் இவர் எழுதிய முகமூடி இல்லாத கொள்ளைக்காரர்கள்! என்ற இவரது கட்டுரை, ‘பாஞ்ச ஜன்யம்’ என்ற விருதைப் பெற்றுள்ளது.
படைப்புகள்
தொகு- வேட்டை
- அதிதி
- ஆரோக்கியம் அருளும் ஆலய விருட்சங்கள்[3]
- மெளனியின் மறுபக்கம்[4]
- ஜே.வி.நாதன் சிறுகதைகள்
- பூதக்கண்ணாடி சாமிசிறுகதை
- அம்மாவின் பெட்டி சிறுகதைகள்
- எழுதப்படாத தீர்ப்புகள்சிறுகதைகள்
- ஜே.வி.நாதன் சிறுகதைகள் (50)தொகுப்பு ஒன்று
- ஜே.வி.நாதன் சிறுகதைகள்(40) தொகுப்பு இரண்டு.
- கேரள திவ்யதேசங்கள்
- திருவாங்கூர் திவ்ய தேசங்கள்
- கடவுள் தோன்றியக் கதை திருக்கோயில்கள் உருவானது எப்படி?
- பிறமாநில அபூர்வ ஆலயங்கள் (50)
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஜே.வி.நாதன்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/author/1548-%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D. பார்த்த நாள்: 21 May 2024.
- ↑ "நூல்நோக்கு: ஜே.வி.நாதன் சிறுகதைகள்". கட்டுரை. இந்து தமிழ் திசை.
- ↑ "ஜே.வி. நாதன்' -தமிழ் புத்தகங்கள்". நூல் உலகம். https://www.noolulagam.com/s/?stext=%E0%AE%9C%E0%AF%87.%E0%AE%B5%E0%AE%BF.+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D&si=2. பார்த்த நாள்: 21 May 2024.
- ↑ "ஜே. வி. நாதன்". தினமணி. https://www.dinamani.com/author/jee-vi-naatnnn. பார்த்த நாள்: 21 May 2024.