ஜோகோபாபாத் மாவட்டம்

ஜோகோபாபாத் மாவட்டம் (Jacobabad District), பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் வடக்கில், பலுசிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் ஜோகோபாபாத் ஆகும். இது கராச்சிக்கு வடக்கில் 304 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் மக்கள் தொகையில் சிந்தி மொழி பேசுபவர்கள் 8,91,887 (88.57%) ஆகவுள்ளனர்.

ஜோகோபாபாத் மாவட்டம்
மாவட்டம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஜோகோபாத் மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஜோகோபாத் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்சிந்து
கோட்டம்லர்கானா
தலைமையிடம்ஜோகோபாபாத்
அரசு
 • வகைமாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்2,698 km2 (1,042 sq mi)
மக்கள்தொகை
 (2017)
 • மொத்தம்10,07,009
 • அடர்த்தி370/km2 (970/sq mi)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
தாலுகாக்கள்3

மாவட்ட நிர்வாகம்

தொகு

ஜோகோபாபாத் மாவட்டம் 3 வருவாய் வட்டங்களையும், 2 நகராட்சிகளையும், 3 பேரூராட்சிகளையும், 44 ஒன்றியக் குழுக்களையும் கொண்டது.

மக்கள் தொகை பரம்பல்

தொகு

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2,698 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜோகோபாபாத் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 10,07,009 ஆகும். அதில் ஆண்கள் 514,786 மற்றும் பெண்கள் 492,061 ஆக உள்ளனர். கிராமப்புற மக்கள் தொகை 70.49% மற்றும் நகர்புற மக்கள் தொகை 29.51%ஆகவுள்ளது. பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 9 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 360,298 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 34.07% ஆகவுள்ளது.[1] [2]இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக சிந்தி மொழி பேசுபவர்கள் 8,91,887 (88.57%), பலூச்சி மொழி பேசுபவர்காள் 52,707 (5.23%), பிராகுயி மொழி பேசுபவர்கள் 3.26%, சராய்கி மொழி பேசுபவர்கள் 1.33% ஆகவும் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு

உசாத்துணை

தொகு
  • 1998 District census report of Jacobabad. Census publication. Vol. 17. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 1999.



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோகோபாபாத்_மாவட்டம்&oldid=3512984" இலிருந்து மீள்விக்கப்பட்டது