ஜோதிர்மோய் சிக்தர்

ஜோதிர்மோய் சிக்தர் (பிறப்பு: டிசம்பர் 11, 1969) ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் விளையாட்டு வீராங்கனை. மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணாநகரில் இருந்து 14 வது மக்களவைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினராக இருந்த அவர், 2019 முதல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் உறுப்பினராக உள்ளார். 2009 மக்களவைத் தேர்தலில் கிருஷ்ணாநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார், ஆனால் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

Jyotirmoyee Sikdar
Member of Parliament, மக்களவை (இந்தியா)
பதவியில்
2004–2009
முன்னையவர்Satyabrata Mookherjee
பின்னவர்Tapas Paul
தொகுதிKrishnanagar
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு11 திசம்பர் 1969 (1969-12-11) (அகவை 55)
Nadia, West Bengal
அரசியல் கட்சிAll India Trinamool Congress
பிற அரசியல்
தொடர்புகள்
CPI(M)
துணைவர்
Avtar Singh (தி. 1994)
பிள்ளைகள்1
வாழிடம்கொல்கத்தா
As of 17 September, 2006
மூலம்: [1]

நடுத்தர தொலைவு ஓட்டப்பந்தய வீராங்கனையான ஜோதிர்மோய் சிக்தர் 1995 ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 800 மீட்டர் பிரிவில் வெற்றி பெற்றார் . 1998 ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 800 மீ மற்றும் 1500 மீட்டர் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களையும், 1998 ல் பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இதே பிரிவுகளில் தங்கப் பதக்கங்களையும் வென்றார்.[1][2]

1998-1999 ஆம் ஆண்டிற்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதைப் பெற்ற ஜோதிர்மோய் சிக்தருக்கு 2003 ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. 1995 இல் அர்ஜுனா விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார். [3] அவர் 2019 இல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார்.[4]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

மேற்கு வங்காளத்தின் நாடியா மாவட்டத்தின் டெபகிராமில் குருதாஸ் சிக்தார் மற்றும் நிஹார் சிக்தருக்கு 1969 டிசம்பர் 11ஆம் தேதியன்று ஜோதிமோய் சிக்தர் பிறந்தார். அவள் மேல்நிலை கல்வி வரை கல்வி பயின்றுள்ளார். 1994 பிப்ரவரி 9ஆம் தேதியன்று அவ்தார் சிங்கை மணந்தார் ஜோதிர்மோய் சிக்தர். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ளார்.[5] {| class="wikitable sortable" style=" text-align:center; font-size:95%;" width="71%"

|- !ஆண்டு !போட்டி !இடம் !நிலை

!குறிப்புகள் |-


|- !colspan="5"|Representing   இந்தியா |-

|rowspan=4|1998 |rowspan=2|Asian Championships |rowspan=2|Fukuoka, Japan |bgcolor=cc9966|3rd |800 m |- |bgcolor=cc9966|3rd |1500 m |- |rowspan=2|Asian Games |rowspan=2|Bangkok, Thailand |bgcolor=gold|1st |800 m |- |bgcolor=gold|1st |1500 m |- |rowspan=2|1995 |rowspan=2|Asian athletic championship |bgcolore=gold|Jakarta, Indonesia |bgcolor=gold|1st |800 m |}

குறிப்புகள்

தொகு
  1. Asian Games. GBR Athletics. Retrieved on 2011-08-20.
  2. Asian Championships. GBR Athletics. Retrieved on 2011-08-20.
  3. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  4. "অভিমানেই লাল ছেড়ে তৃণমূলে সোনার মেয়ে". www.aajkaal.in/. Archived from the original on 24 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 22 December 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Current Lok Sabha Members Biographical Sketch". web.archive.org. 22 June 2006. Archived from the original on 22 ஜூன் 2006. பார்க்கப்பட்ட நாள் 12 November 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோதிர்மோய்_சிக்தர்&oldid=3743809" இலிருந்து மீள்விக்கப்பட்டது