ஜௌலியன் விகாரை
ஜௌலியன் விகாரை (Jaulian) (உருது: جولیاں[1]) தற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில், ஹரிபூர் மாவட்டத்தில், தக்சசீலாவின் அருகமைந்த ஜௌலியன் எனுமிடத்தில், கிபி இரண்டாம் நூற்றாண்டில் பௌத்த பிக்குகள் தங்கி, தியானம் செய்வதற்கு நிறுவப்பட்டதாகும்.
தற்போது ஜௌலியன் விகாரை பயன்பாட்டிற்கு உதவாத வகையில் சிதிலமடைந்துள்ளது. [2] ஜௌலியன் விகாரைக்கு அருகில் மொகரா முராது விகாரை உள்ளது.
ஜௌலியன் விகாரை جولیاں | |
---|---|
ஜௌலியன் விகாரை | |
இருப்பிடம் | ஹரிபூர் மாவட்டம், பாகிஸ்தான், கைபர் பக்துன்வா, பாகிஸ்தான் |
ஆயத்தொலைகள் | 33°45′56″N 72°52′30″E / 33.76552°N 72.87498°E |
வகை | விகாரை |
வரலாறு | |
கட்டப்பட்டது | கிபி இரண்டாம் நூற்றாண்டு |
பயனற்றுப்போனது | 5-ஆம் நூற்றாண்டு |
கலாச்சாரம் | குசான், கிடாரைட்டுகள் |
பகுதிக் குறிப்புகள் | |
அகழாய்வாளர் | ஜான் மார்ஷல் |
அதிகாரபூர்வ பெயர்: Taxila | |
அளவுகோல் | iii, iv |
வரையறுப்பு | 1980 |
சுட்டெண் | 139 |
ஜௌலியன் விகாரையை 1980-இல் யுனெஸ்கோ நிறுவனம், உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. ஜௌலியன் விகாரை, தர்மராஜிக தூபி மற்றும் மொகரா முராது தூபிகளை விடச் சிறிதாகும்.
அமைவிடம்
தொகுஜௌலியன் விகாரை, பாகிஸ்தான் நாட்டின் இசுலாமாபாத் மற்றும் ராவல்பிண்டி நகரங்களிலிருந்து தென்கிழக்கே, முறையே 35 மற்றும் 45 கிலோ மீட்டர் தொலைவில், தக்சசீலா நகரத்திற்கு செல்லும் வழியில் ஜௌலியன் கிராமத்தின் மலையில் 100 மீட்டர் உயரத்தில் உள்ளது. இதனருகே மொகரா முராது உள்ளது.
வரலாறு
தொகுகுசான் பேரரசு காலத்தில் கிபி இரண்டாம் நூற்றாண்டில் ஜௌலியன் பௌத்த விகாரை நிறுவப்பட்டது.[3]கிபி 450-இல் இப்பகுதியை ஆக்கிரமித்த ஹெப்தலைட்டுகள் எனும் வெள்ளை ஹூனர்கள், ஜௌலியன் விகாரை உள்ளிட்ட தக்சசீலாவின் பௌத்தப் பண்பாட்டுக் களங்களை முற்றிலும் அழித்தனர்.[4]
அகழ்வாய்வுகள்
தொகுஜான் மார்ஷல் எனும் பிரித்தானிய தொல்லியல் அறிஞர், ஜௌலியன் விகாரை பகுதிகளை அகழ்வாய்வு செய்தார். அகழ்வாய்வில், இரண்டு பெரிய நாற்கர வடிவிலான விகாரைகளையும், 27 தூபிகளையும், பிக்குகள் தங்கும் 59 தியான மண்டபங்களையும் கண்டறிந்தார்.[3]
படக்காட்சிகள்
தொகு-
ஜௌலியன் விகாரையின் சிதிலங்கள்
-
ஜௌலியன் தூபி
-
சிதிலமடைந்த புத்தர் சிலை
-
விகாரையின் சிலையடியில் கல்வெட்டு எழுத்துக்கள்
-
இந்தோ-சிதியர்கள் உடையில் பக்தர்கள்
-
இரண்டாம் தளத்திற்குச் செல்லும் படிகள்
-
பிக்குகள் அறையின் சன்னல்
-
சடங்குகள் செய்வதற்கான குளம்
-
தூபி வடிவ தொல்பொருள்
-
தானியம் அரைக்கும் கல் இயந்திரம்
-
வெள்ளிப் பொருட்கள்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Taxila". Ancient History Encyclopedia. 23 July 2015. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
- ↑ Rashid, Salman (2001). The Salt Range and the Potohar Plateau. Sang-e-Meel Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789693512571. பார்க்கப்பட்ட நாள் 23 June 2017.
- ↑ 3.0 3.1 Samad, Rafi U. (2011). The Grandeur of Gandhara: The Ancient Buddhist Civilization of the Swat, Peshawar, Kabul and Indus Valleys. Algora Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780875868592.
- ↑ Behrendt, Kurt A. (2004). Handbuch der Orientalistik. BRILL. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789004135956.
வெளி இணைப்புகள்
தொகு