டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி

சாகிர் உசேன் கல்லூரி சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் அமைந்துள்ள ஒரு அரசு உதவி பெறும் கல்லூரி ஆகும்.

தொடக்க வரலாறு தொகு

இளையாங்குடிக்கு ஒரு கல்லூரி அவசியம் வேண்டும் என்ற‌ எண்ணத்தினால் ஊர் நல தொண்டர்கள், கல்லூரி ஒன்று கட்ட அரசாங்க அனுமதி பெற்றிருந்தனர். எனினும், இப்பணியை ஊரார்களால் நிறைவு செய்ய முடியாமல் போயிற்று. பல உள்ளூர் ,வெளியூர் செல்வந்தர்களிடம் ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி அணுகியும் ஒருவரும் முன் வரவில்லை. விதிக்கப்பட்ட கால கெடுவுக்குள் அதை செயல் படுத்தாவிட்டால் கல்லூரி அமையும் அமைக்கும் வாய்ப்பு மற்ற ஊர்களுக்கு மாற்றி விடப்பட்டு விடும் என இக்கட்டான சூழ்நிலை உருவானது.


இந்நிலையில், கல்லூரி தொடங்க இடத்துடன் கட்டிடமும் கட்டித்தருகிறேன் என்று ஹாஜி வாஞ்ஜூர் பீர் முஹம்மது முன் வந்து ஆரம்ப கட்டிடம் கட்ட, நிலம் வாங்கி, தானமாக‌ எழுதிக் கொடுத்தார். ஏப்ரல் 28 ல் அன்றைய மாநில கவர்னர் மேன்மை தங்கிய சர்தார் உஜ்ஜல் சிங் கல்லூரிக்காக அடிக்கல் நாட்டினார். ஹாஜி வாஞ்ஜூர் பீர் முஹம்மது இளையாங்குடி சாகிர் உசேன் கல்லூரியின் ஸ்தாப‌க‌ தாளாள‌ராக‌ப் (Founder Correspondant) பொறுப்பேற்றதுடன், ஹாஜி வி. எம். பீர் முஹம்மது குடும்பத்தார் கட்டிடம் என்று தன் குடும்ப பெயரில் ஒரு கட்டிடத்தைத் தன் சொந்த செலவில் கட்டிக் கொடுத்தார்.


1970 ஜூலை 5 ல் காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அக்கட்டிடத்தைத் திறந்து வைத்தார். அன்றைய கல்வி அமைச்சர்இரா. நெடுஞ்செழியன் இளையாங்குடி டாகடர் சாகிர் உசேன் கல்லூரியைத் தொடங்கிவைத்தார்.

வெளியிணைப்புகள் தொகு