டாங்யீ மியான்மரின் ஷான் மாநிலத்தின் தலைநகரம் மற்றும் அந்த மாநிலத்தின் மிகப்பெரிய நகரம். கடல் மட்டத்திலிருந்து 4,712 அடிகள் உயரத்தில் சவேன்யாங் மற்றும் இன்லே ஏரியின் வடக்கே மயீலாட் பிராந்தியத்தில் அமைந்துள்ளது. [2] டாங்யீ நகரம் மியான்மரின் ஐந்தாவது மிகப்பெரிய நகரம். [3] 2014 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி இந்நகரத்தில் சுமார் 380,665 மக்கள் வாழ்கிறார்கள். ஆண்டுதோறும் டஸாங்மோண் (பர்மிய நாட்காட்டியில் இது எட்டாவது மாதம்) மாதத்தில் வரும் முழு நிலவு நாளில் நடத்தப்படும் வெப்பக் காற்று பலூன் திருவிழாவிற்கு இந்த நகரம் புகழ்பெற்றுள்ளது. [4]

டாங்யீ
တောင်ကြီးမြို့
A view of Taunggyi
A view of Taunggyi
டாங்யீ is located in மியான்மர்
டாங்யீ
டாங்யீ
Location of Taunggyi, Myanmar
ஆள்கூறுகள்: 20°47′N 97°02′E / 20.783°N 97.033°E / 20.783; 97.033
நாடு மியான்மர்
பிரிவுஷான் மாநிலம்
மாவட்டம்டாங்யீ மாவட்டம்
நகராட்சிடாங்யீ நகராட்சி
Founded1894
ஏற்றம்4,590 ft (1,400 m)
மக்கள்தொகை (2014 மக்கள்தொகை கணக்கின்படி)[1]
 • நகரம்3,81,639
 • நகர்ப்புறம்2,64,804
 • நாட்டுப்புறம்1,16,835
 • EthnicitiesTai, Pa-O, Burmese Chinese, Shan, Burmese Indians, Gurkha
 • Religionsபெளத்தம், கிறித்தவம், Islam
நேர வலயம்MMT (ஒசநே+6.30)


பெயர்க்காரணம் தொகு

டாங்யீ என்ற பெயரின் பொருள் பர்மிய மொழியில் "பெரிய மலை" என்று பொருள்படும், இது நகரத்தின் கிழக்கே, ஷான் மலைத்தொடர் அமைப்பின் ஒரு பகுதியில் அமைந்திருப்பதால் இந்தப் பெயரைப் பெற்றது. இந்த மலைதொடரின் உயரமான முனைப்பகுதியை டாங்-சுன் அல்லது "கூர்முனை" என்றழைக்கப் படுகிறது. இந்த முனை பாயா-டாங் என்ற பெயரில் அறியப்படுகிறது.

வரலாறு தொகு

பிரித்தானியர்களின் ஆக்கிரமிப்பின் போது, இந்த நகரம் தெற்கு ஷான் மாநிலங்களின் தலைநகரமாக மாறியது. டாங்யீயின் நவீன வளர்ச்சி 1894 ஆம் ஆண்டில் தொடங்கியது, ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக அலுவலகங்களை மயிங் டாங்கிலிருந்து இன்லே ஏரியின் கிழக்கு கடற்கரையில் இருந்து டாங்யீ நகரத்தின் புவியியல் அமைப்பின் காரணங்களுக்காக தலைநகரமாக மாற்றினர்.

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாங்யீ&oldid=3605002" இலிருந்து மீள்விக்கப்பட்டது